ஒரு குளிர்கால இரவு பிரேம்சந்த் தமிழில் சுரா

ss1

ல்கு உள்ளே வந்து, தன் மனைவியிடம் கூறினான்: "சாய்னா வாசல் கதவிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார். வா...

உன்னிடமிருக்கும் பணத்தை என்னிடம் தா. அவரிடம் நான் பணத்தைக் கொடுத்து, தொல்லையிலிருந்து விடுபடுகிறேன்.''

முன்னி தரையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.

அவனை நோக்கி தன் தலையைத் திருப்பிய அவள் கூறினாள்: "என்னிடம் இருப்பதே மூன்று ரூபாய்கள் தான். இதை நாம் அவரிடம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி ஒரு போர்வையை வாங்க முடியும்? பயிர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளக்கூடிய குளிர் கால இரவு வேளைகளை நீங்கள் எப்படிச் சமாளிப்பீர்கள்? அறுவடை காலத்தில் நாம் பணத்தைத் தந்துவிடுவதாக அவரிடம் கூறுங்கள். இப்போது அது நம்மிடம் இல்லை.''

தான் என்ன முடிவு எடுப்பது என்பதே தெரியாமல் ஹல்கு சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். பூஸ் எனும் மாதம்... குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் காலம்.... நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

ஒரு போர்வை இல்லாமல் அவனால் வயலில் தூங்கவே முடியாது. ஆனால், அதற்காக சாஹ்னா கவலைப்பட மாட்டார். அவர் மிரட்டுவார்...

சாபமிடுவார். அந்த கெட்ட  ஆவியிடமிருந்து விடுபடுவதற்கு கடுமையான குளிரைச் சந்திப்பது எவ்வளவோ மேலானது. ஹல்கு தன் பருமனான சரீரத்தை நகர்த்தியவாறு (அவனுடைய பெயருக்கு "விளக்கு' என்றொரு அர்த்தம் இருக்கிறது) தன் மனைவியை நோக்கிச் சென்று, அவளிடம் கெஞ்சினான்: "வா... என்னிடம் பணத்தைத் தா. இந்த நிலையிலிருந்து நான் விடுபடுகிறேன். ஒரு போர்வையை வாங்குவதற்கு நான் ஏதாவது வழி இருக்கிறதா என்பதைப் பற்றி சிந்திக்கிறேன்.''

முன்னி அவனிடமிருந்து விலகி, தன் கண்களால் வெறித்துப் பார்த்தாள். "நீங்க என்ன செய்வீங்க? நான் கேட்கிறேன். அதை யாராவது இரக்கப்பட்டு கொடுப்பார்களா? அவருக்கு நாம் எவ்வளவு அதிகமான தொகையைத் தந்திருக்கிறோம் என்ற விஷயம் கடவுளுக்குத் தெரியும். இதற்கு முடிவே கிடையாது. நிலத்தை உழுவதை நிறுத்துங்கள். நான் கூறுகிறேன். சாகுற அளவுக்கு வேலை செய்யுங்க. அறுவடை வந்தவுடன், அதை அவரிடம் கொடுங்க. அதுதான் முடிவு. பிறகு... நம் வயிற்றை நிறைப்பதற்கு ஒரு அடிமையைப்போல வேலை செய்யணும். கடனில் இருப்பதற்காகவே நாம் பிறந்திருக்கிறோம். இப்போது உழுது என்ன பயன்? 

நான் உங்களிடம் பணத்தைத் தர மாட்டேன். இல்லை..‌. நான் தர மாட்டேன்... நான் தரவே மாட்டேன்''.

"அப்படின்னா.... நான் அவமானங்களைச் சந்திக்கணுமா?'' - ஹல்கு மிகுந்த கவலையுடன் கேட்டான்.

"அவர் உங்களை எப்படி அவமானப்படுத்த முடியும்? அவர் என்ன அரசரா?''- முன்னி சத்தமாகக் கேட்டாள்.

ஆனால். அந்த வார்த்தைகளைப் கூறியபோது, அவளுடைய  கூர்மையான கண் புருவங்கள் கீழ்நோக்கி தாழ்ந்தன.

ஹல்குவின் வார்த்தைகளில் கசப்பான உண்மை மறைந்திருந்தது.

அவை அவர்களையே ஒரு பயங்கரமான மிருகத்தைப் போல பார்த்தன.

அவள் சுவரிலிருந்த மாடக்குழியிலிருந்து ரூபாய்களை எடுத்து ஹல்குவின் உள்ளங்கையில் வைத்தாள். "நிலத்தை உழுவதை நிறுத்துங்க. தினமும் அமைதி யாக வேலை செய்து, நம் வயிறுகளை நம்மால் நிறைக்க
முடியும்.

அவமானங்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இது என்ன உழவு? கஷ்டப்பட்டு நீங்க ஏதோ சம்பாதிக்கிறீங்க.

அதையும் இந்த அடுப்புக்குள் கொண்டு போய் போடுறீங்க.

எல்லாத்துக்கும் மேலே.... இந்த  கொடுமைப்படுத்துதல் வேறு...

ஹல்கு தன் சொந்த இதயத்தையே அறுத்து வெளியே எடுத்து யாரோ ஒருவரிடம் அதைக் கொடுக்க போவதைப்போல அந்தப் பணத்துடன் வெளியே வந்தான். தன்னுடைய தினக்கூலியிலிருந்து ஒரு போர்வையை வாங்குவதற்காக சிறுகச் சிறுக அவன் அந்த மூன்று ரூபாய்களைச் சேமித்து வைத்திருந்தான்.

அவற்றை அவன் இன்று இழந்துவிட்டான். தன்னுடைய ஆதர

அவற்றை அவன் இன்று இழந்துவிட்டான். தன்னுடைய ஆதரவற்ற நிலையை நினைத்து, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் அவனுடைய மனம் மூழ்கிக்கொண்டிருந்தது.

 2

பூஸ் மாதத்தின் ஒரு கறுத்த இரவு....

நட்சத்திரங்கள் கூட குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதைப்போல தோன்றியது.

தன் வயலின் ஒரு எல்லையில் கரும்பு தோகைகளால் வேயப்பட்டிருந்த ஒரு இடத்தில் ஒரு பழைய முரட்டுத்தனமான பருத்தித் துணியைப் போர்த்தியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் படுத்திருந்தான். அவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். கட்டிலுக்குக் கீழே அவனுடைய செல்ல நாயான ஜால்ரா தன் வாயைத் தன்னுடைய உடலுக்குள் நுழைத்துக்கொண்டும், குளிரால் ஊளையிட்டுக் கொண்டும் இருந்தது. இருவருமே தூங்க முடியாமல் இருந்தார்கள்.

ஹல்கு தன் முழங்கைகளை மடக்கி வாய் வரை வைத்தவாறு கூறினான்:  "என்ன... ஜாப்ரா... குளிரா இருக்குதா? வீட்டுல வைக்கோலுக்குக் கீழே படுன்னு உன்கிட்ட நான் சொன்னேன்ல? நீ ஏன் இங்கு வந்தே? இப்போ... இதை அனுபவி. நான் என்ன செய்ய முடியும்? நான் ஏதோ அல்வாவையும் பூரியையும் சாப்பிடுறதுக்காக இங்கு வர்றேன்னு  நினைச்சுக்கிட்டு எனக்கு முன்னால நீ ஓடி வந்தே... இப்போ போ.. உன் அம்மாவை உதவிக்குக் கூப்பிடு.''

ஜாப்ரா தன் வாலை ஆட்டிக்கொண்டே ஊளையிட்டது. ஒரு முறை தன் உடலை நீட்டிக் கொண்டு அது பின்னர் அமைதியாக ஆகிவிட்டது. தன்னுடைய ஊளைகளால் தன் எஜமான் தூங்க முடியவில்லை என்று அது நினைத்திருக்க வேண்டும்.

ஜாப்ராவின் குளிர்ந்த முதுகைத் தொடுவதற்காக தன் கையை நீட்டிய ஹல்கு கூறினான்: "நாளைக்கு வராதே.

இல்லாவிட்டால்... உனக்கு நிரந்தரமா ஜலதோஷம் பிடிச்சிடும். இந்த நாசமாப் போன மேற்கத்திய காற்று ஏன் இப்படி குளிர்ச்சியா இருக்குன்னே தெரியல. நான் இன்னொரு முறை  பீடியைப் பற்ற வைக்கிறேன்‌.

எப்படியாவது இரவுப் பொழுதைக் கடத்தி ஆகணும். நான் ஏற்கெனவே எட்டு பீடிகளைப் புகைச்சாச்சு. ஒரு விவசாயியாக இருக்குறதுல, இதுதான் சந்தோஷம். குளிர் அருகிலேயே வராத அளவிற்கு அதிர்ஷ்டம் உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. வெப்பத்தால அதை விரட்டி அடிச்சிருவாங்க.

தடிமனான மெத்தைகள், போர்வைகள், விரிப்புகள்! அவர்களுக்கு அருகிலேயே குளிர் வராது. வாழ்க்கை எவ்வளவு வினோதமா இருக்கு! நாங்க உழைக்கிறோம். 

எங்கள் செலவுல மத்தவங்க அனுபவிக்கிறாங்க.''

ஹல்கு எழுந்து தன் பீடியை கீழே கிடந்த மரத்தூள்களைக் கொண்டு நிரப்பினான்.

ஜாப்ராவும் எழுந்தது.

புகைத்துக் கொண்டே, ஜாப்ராவிடம் ஹல்கு கூறினான்: "நீயும் பீடி புகைக்கிறாயா? இது குளிரை விரட்டி அடிக்காது. ஆனால், இது சிறிய அளவில் மனதை லேசா இருக்கச் செய்யும்.''

ஜாப்ரா ஹல்குவையே பார்த்தது.

அதனுடைய கண்களில் அன்பு அளவற்று வழிந்துகொண்டிருந்தது.

"இந்த இரவுப் பொழுதின் குளிரைத் தாங்கிக்கொள். நாளைக்கு உனக்கு நான் வைக்கோலைப் பரப்பி விடுவேன். நீ அதற்குக் கீழே உட்கார்ந்துக்கலாம். 

அதற்குப் பிறகு உனக்கு குளிரே தோணாது.''

ஜாப்ரா தன் முன்னங்கால்களை ஹல்குவின் முழங்கைகளில் வைத்தவாறு, தன் வாயை ஹல்குவின் வாய்க்கு அருகில் கொண்டு சென்றது. ஹல்கு அதன் சூடான மூச்சை உணர்ந்தான்.

தன் பீடியைப் புகைத்துவிட்டு, இந்த முறை தூங்கியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துடன் ஹல்கு மீண்டும் படுத்தான். ஆனால், அவனுடைய உடல் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், ஒரு கெட்ட ஆவியைப் போல குளிர் அவனின் சரீரத்தை இறுகப் பற்றியிருந்தது.

 குளிரிலிருந்து தப்பிக்க முடியாத நிலை உண்டானபோது, அவன் மெதுவாக ஜாப்ராவைத் தூக்கி, அதன் தலையைத் தடவி விட்டு, தன் மடியில் அதைப் படுக்க வைத்தான்.

அதனிடமிருந்து கெட்ட வாசனை பெரிதாக வந்துகொண்டிருந்தாலும், தன் சரீரத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வண்ணம் நாயை வைத்திருந்ததன் மூலம் பல மாதங்களாக தான் அனுபவித்திராத ஒரு சந்தோஷ நிலையை ஹல்கு உணர்ந்தான்.

அதுதான் உண்மையான சொர்க்கம் என்ற உணர்வு ஜாப்ராவிற்கு உண்டாகியிருக்கும். ஹல்குவின் புனிதமான இதயத்தில் நாயின் மீது சிறிது கூட வெறுப்பு இல்லை. தன் நெருங்கிய நண்பனையோ அல்லது தன் நெருங்கிய உறவினரையோ அவன் இதே பாசத்துடன் அணைத்திருப்பான். தன்னை இப்படிப்பட்ட அவல நிலைக்குத் தள்ளிவிட்ட சூழல், இப்போது அவனைத் துயரத்திற்கு ஆளாக்கவில்லை.

இல்லை..‌ இந்த வினோதமான நட்பு அவனுடைய சந்தோஷத்தைப் பல திக்குகளுக்கும் பரவச் செய்தது.

அவனுடைய உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் பிரகாசமாக ஒளிர்ந்தது.

திடீரென ஒரு மிருகத்தின் அசைவுச் சத்தத்தை ஜாப்ரா கேட்டது. இந்த புதிய பாசப்பிணைப்பு அதனுள் ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கி இருந்தது. குளிர் காற்றின் கடுமையை அது சிறிது கூட உணரவில்லை. அது எழுந்து, தான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந்து பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது.

ஹல்கு அதைத் திரும்ப வரும்படி அழைத்தான்.

ஆனால், ஜாப்ரா திரும்ப வரவில்லை. அது வயலைச் சுற்றிச்சுற்றி வந்து குரைத்தது. ஒரு நிமிட நேரம் அது திரும்ப வந்து, மீண்டும் உடனடியாக போய் விட்டது. அடங்காத ஆசை என அதனுடைய இதயத்திற்குள் கடமையுணர்ச்சி ததும்பி ஓடிக் கொண்டிருந்தது.

3

மேலும் ஒரு மணி நேரம் கடந்து சென்றது. குளிர்ந்த காற்றின் வீச்சால் இரவுப்பொழுதே நடுங்க ஆரம்பித்தது. ஹல்கு எழுந்தான். அவன் தன் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு, தன் முழங்கைகளை மார்புப் பகுதியில் வைத்து, தன் தலையை அங்கு மறைத்து வைத்துக்கொண்டான். அது அவனுக்கு நிம்மதியைத் தரவில்லை. தன் உடலில் இருக்கும் ரத்தம் உறைந்து விட்டதைப்போல அவன் உணர்ந்தான். தன் ரத்த நாளங்களில் பனி ஓடிக்கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. எந்த அளவிற்கு இரவுப் பொழுது கடந்து சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அவன் ஆகாயத்தைப் பார்த்தான்.

விண்மீன்கள் இன்னும் பாதியைக்கூட தாண்டாமல் இருந்தன.

விண்மீன்களின் அந்த கூட்டம் எப்போது நேர் மேலே வந்துசேர்கிறதோ, அப்போதுதான் பொழுது விடியும். இன்னும் நான்கில் ஒரு பகுதிக்கும் மேலே இரவு எஞ்சியிருந்தது.

ஹல்குவின் வயலிலிருந்து ஒரு கல் எறியும் தூரத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது. இலைகள் உதிர ஆரம்பித்திருக்கும் காலமது. தோப்பில் ஒரு குவியலாக காய்ந்த இலைகள் கிடந்தன. ஹல்கு தனக்குள் கூறிக்கொண்டான்: "நான் அங்கு சென்று, கொஞ்சம் இலைகளை எடுத்துக்கொண்டு வந்து, நெருப்பை மூட்டி குளிர் காயவேண்டும்.

இலைகளை எடுத்துக்கொண்டு இங்கு நான் வருவதை யாராவது பார்த்தால், என்னை ஒரு பேய் என்று அவர்கள் நினைக்கலாம்.

அதற்குள் ஒரு மிருகம் மறைந்திருக்கலாமே!

யாருக்குத் தெரியும்? ஆனால், இப்போது... இந்த குளிரில் தாக்குப்பிடித்து நிற்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்!''

அவன் அருகிலிருந்த  துவரை வளர்ந்திருக்கும் வயலுக்குச் சென்று, சில செடிகளை வேருடன் பிடுங்கி, அவற்றை ஒன்றாக இணைத்துக் கட்டி,ஒரு துடைப்பத்தை உருவாக்கினான்.

எரிந்து கொண்டிருந்த வரட்டியின் ஒரு துண்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவனைப் பார்த்த ஜாப்ரா, அவனை நோக்கி ஓடிவந்து தன் வாலை ஆட்டியது.

ஹல்கு கூறினான்: "இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது... ஜாப்ரு.

வா... நாம தோப்புக்குப் போவோம். கொஞ்சம் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து எரிய வைத்து, வெப்பத்தை உண்டாக்குவோம். கொஞ்சம் நமக்கு சூடு கிடைச்ச பிறகு, நாம திரும்பி வந்து தூங்குவோம். இரவு இன்னும் நீளமா இருக்கு.''

ஜாப்ரா தன் சம்மதத்தை முனகல் மூலம் தெரிவித்தவாறு, தோப்பை நோக்கி முன்னால் நடந்தது.

தோப்பு இருளில் மூழ்கியிருந்தது.

கடுமையான காற்று பலத்த சத்தத்துடன் வீசிக்கொண்டும், இலைகளை இரக்கமே இல்லாமல் அல்லல்படுத்திக் கொண்டும் இருந்தது.

மரங்களிலிருந்து பனித் துளிகள் தொடர்ந்து கீழே விழுந்துகொண்டிருந்தன.

இமைக்கும் நேரத்தில் மருதாணி மலர்களிலிருந்து வாசனையைக் காற்று எடுத்துக்கொண்டு சென்றது.

ஹல்கு கூறினான்: "என்ன அருமையான வாசனை, ஜாப்ரு! இது உன் நாசியைத் தொடலையா?''

ஜாப்ரா ஒரு எலும்பைப் பார்த்து,  அதைக் கடித்தது.

எரிந்துகொண்டிருந்த வரட்டித் துண்டை ஹல்கு தரையில் போட்டான். அதைச் சுற்றிலும் இருந்த இலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தான். சில நொடிகளிலேயே அவன் ஒரு பெரிய குவியலைத் தயார் பண்ணிவிட்டான்.

அவனுடைய கைகள் குளிரில் விறைத்துவிட்டன. அவனின் வெறுமனான கால்கள் உணர்ச்சியற்று இருந்தன. அவன் ஒரு மலை அளவிற்கு இலைகளைச் சேகரித்து, இந்த குளிரிலிருந்து விடுதலை பெறுவதற் காக எரிய வைத்தான்.

அடுத்த கணத்தில் நெருப்பு பற்றி எரிந்தது.நெருப்பின் நாளங்கள் வேகமாக எழுந்து மேலே இருந்த மரத்தின் இலைகளைத் தொட்டன. நெருப்பு ஜுவாலைகளின் வெளிச்சத்தில், தோப்பிலிருந்த பெரிய மரங்கள் தங்களின் தலைகளில் அடர்த்தியான இருட்டைப் போர்த்திக்கொண்டிருப்பதைப் போல தெரிந்தன. அந்த எல்லையற்ற இருள் சமுத்திரத்தில், இந்த வெளிச்சம் பரவி, ஒரு படகைப் போல அசைந்தது.

தன்னை உஷ்ணப்படுத்திக் கொண்டு, ஹல்கு நெருப்பிற்கு முன்னால் அமர்ந்திருந்தான். குளிருக்குச் சவால் விடுவதைப் போல, அவன் தன் சரீரத்திலிருந்து  துணியைக் கழற்றி, அதைத் தன் ஒரு கையிடுக்கில் கட்டிக் கொண்டு,தன் கால்களை விரிய வைத்துக் கொண்டு இருந்தான். "வா... உன்னால் என்ன முடியுமோ.... 

அதைச் செய்.'' எல்லையற்ற ஆற்றலைக்கொண்ட குளிரை வென்ற அவன், தன் வெற்றிப் பெருமிதத்தை அடக்க முடியாமல் இருந்தான்.

அவன் ஜாப்ராவிடம் கூறினான்: "உனக்கு  இப்போதும் குளிரா இருக்குதா?''

ஜாப்ரா முனகியது.

"நமக்கு எப்பவும் குளிர் இருந்து கொண்டே இருக்குமா?'' என்பதைப் போல அது இருந்தது.

"நாம இதைப் பற்றி நினைக்கல. இல்லாவிட்டால்... நாம ஏன் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கணும்?''

ஜாப்ரா தன் வாலை ஆட்டியது.

"வா... நாம இந்த நெருப்புக்கு மேலே தாவுவோம். யார் தாண்டுறாங்க என்பதைப் பார்ப்போம். மகனே... நீயே உன்னை எரிச்சுக்கிட்டா... நான் உனக்கு எந்த சிகிச்சையும் செய்யமாட்டேன்.''

ஜாப்ரா பயம் நிறைந்த கண்களால் நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது. 

"முன்னிக்கிட்ட இதைச் சொல்லாதே.இல்லா விட்டால்... ஒரு சண்டை நடக்கும்.''

இதைக் கூறிவிட்டு அவன் மெதுவாக நெருப்பிற்கு மேலே தாவினான்...

ஜுவாலைக்குச் சற்று மேலே.‌.. ஆனால், எந்தவித ஆபத்தும் இல்லாமல். ஜாப்ரா வெறுமனே நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பிறகு... வந்து அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டது‌.

ஹல்கு கூறினான்: "வா... வா... இது சரியல்ல. இப்போது தாவு....'' இதைக் கூறிவிட்டு, அவன் மீண்டும் நெருப்பிற்கு மேலே தாவி, எதிர் பக்கத்திற்கு வந்தான்.

4

லைகள் எரிந்து முடிந்தன. மீண்டும் தோப்பு இருளில் மூழ்கியது.

சாம்பல்களுக்குக் கீழே நெருப்பு இப்போதும் உயிர்ப்புடன் இருந்தது. அது காற்றின் வீச்சில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அது சிறிது நேரத்திற்கு ஒளிர்ந்து கொண்டும், பிறகு தன் கண்களை மூடிக் கொண்டும் இருந்தது.

ஹல்கு மீண்டுமொரு முறை துணியைத் தன்னைச் சுற்றி போர்த்தினான்.

இப்போதும் வெப்பமாக இருந்த சாம்பலுக்கு அருகில் அமர்ந்து அவன் ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

அவனுடைய உடல் சூடாக இருந்தது. ஆனால், அது படிப்படியாக குளிர்ச்சியாக மாறியது. அவன் மிகவும் களைத்த நிலையில் இருந்தான்.

ஜாப்ரா கோபமாக குரைத்துக் கொண்டே வயலை நோக்கி ஓடியது. ஒரு மிருகக் கூட்டம் தன் வயலுக்குள் நுழைந்திருக்குமோ என்று ஹல்கு நினைத்தான். ஒரு வகையில் கூறுவதாக இருந்தால்... நீல மான்களின் ஒரு கூட்டம். அவை ஓடிக்கொண்டிருக்கும் சத்தமும் தாவிக் கொண்டிருக்கும் சத்தமும் அவனுக்குத் தெளிவாகக் கேட்டன. அவை வயலில் மேய்ந்துகொண்டிருக்கின்றன என்பதை அவை மெல்லும் ஓசையைக் கேட்பதிலிருந்து அவன் தெரிந்து கொண்டான்.

"இல்லை...'' - அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

"ஜாப்ரா இருக்கும்போது, எந்த மிருகமுமே வயலுக்குள் நுழைய முடியாது. அது அவர்களைக் கடித்து விரட்டி விடும். நான் வெறுமனே கற்பனை பண்ணுகிறேன்.

இப்போது எனக்கு எதுவுமே கேட்கவில்லை. நான் தவறாக நினைத்து விட்டேன்.''

அவன் ஜாப்ராவிற்காகக் கத்தினான்.

ஜாப்ரா தொடர்ந்து குரைத்துக் கொண்டேயிருந்தது. அது அவனிடம் வரவில்லை.

மிருகங்கள் மேய்ந்து கொண்டிருக்கும் ஓசையை அவன் மீண்டும் கேட்டான். இதற்குமேல் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்குத் தயாராக இல்லை. தான் இருந்த இடத்திலிருந்து நகர்ந்த அவன் ஆவேசமானான். எந்த அளவிற்கு நிம்மதியாக அவன் உட்கார்ந்திருந்தான்! இந்த குளிரில், வயலுக்குள் நுழைந்து மிருகங்களை விரட்டுவது என்பது முட்டாள்தனமாக அவனுக்குத் தோன்றியது. அவன் நீங்கவில்லை.

அவன் உரக்க கத்தினான்:  "ஓடு... ஓடு.. ஓடு...''

ஜாப்ரா மீண்டும் குரைத்தது.

மிருகங்கள் வயலை காலி பண்ணிக் கொண்டி ருந்தன.

பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. என்ன அருமையான அறுவடை! ஆனால், அந்த வில்லங்கமான மிருகங்கள் அதை நாசமாக்கிக் கொண்டிருந்தன.

தெளிவான தீர்மானத்துடன் எழுந்த ஹல்கு சில அடிகள் நடந்தான். ஆனால், இமைக்கும் நேரத்தில் வேகமாக வீசிய குளிர் காற்று, தேளின் கொடுக்கைப் போல தாக்கி அவனை ஆக்கிரமிக்க, அணைந்து கொண்டிருந்த நெருப்பை நோக்கி வந்த அவன், ஏதோ கொஞ்சம் உஷ்ணம் இருக்காதா என்று சாம்பலைக் கிளற ஆரம்பித்தான்.

ஜாப்ரா  சத்தமாக குரைத்துக் கொண்டேயிருந்தது. நீல மான்கள் வயலை அழித்துக் கொண்டிருந்தன.

ஹல்கு சூடான சாம்பலுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவனுடைய கையையும் காலையும் அலட்சியம் கட்டிப் போட்டிருந்தது.

அவன் துணியால் தன்னை மூடிக்கொண்டு, சாம்பலுக்கு அருகிலேயே தூங்க ஆரம்பித்தான்.

காலையில் கண் விழித்தபோது, சுற்றிலும் சூரியனின் வெளிச்சம் இருந்தது.முன்னி அவனை எழுப்பினாள்.

"இன்னைக்கு நீங்க தூங்கிட்டீங்களா? இங்கு நீங்க சந்தோஷமா படுத்திருக்கீங்க. அங்கு... பயிர்கள் அழிக்கப்பட்டு விட்டன.''

ஹல்கு எழுந்து கேட்டான்: "நீ வயலுக்குப் போனியா?''

"ஆமாம்....''- அவள் கூறினாள். "முழுப்பயிர்களுமே காலியாயிருச்சு.

இப்படி யார் தூங்குவாங்க? இரவு முழுவதும் நீங்க காவல் காத்து என்ன பயன்?''

ஹல்கு தன் செயலுக்கு ஒரு நியாயத்தைக் கண்டு பிடித்தான்.

"இங்கு நான் செத்துக்கிட்டு இருக்கேன். நீ பயிரைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கே... எனக்கு கடுமையான வயிற்று வலி!''

இருவரும் தங்களின் வயலை நோக்கி நடந்தார்கள். முழுப்பயிர்களும் மிதித்து துவம்சம் செய்யப்பட்ட நிலையில் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். ஜாப்ரா ஷெட்டில் கிட்டத்தட்ட உயிரற்ற நிலையில் படுத்திருந் தது.

இருவரும் தங்களின் வயலைப் பார்த்தார்கள். முன்னி கவலையில் மூழ்கினாள். ஹல்கு சந்தோஷமாக இருந்தான்.

முன்னி கூறினாள்: "இப்போ வரி கட்டுறதுக்கு, நாம 

தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்யணும்.''

ஹல்கு பதில் கூறினான்: "அதனால் என்ன?''

"குளிர்ந்த இரவு வேளையில் நான் இங்கு தூங்க வேண்டிய அவசியமில்லை.''

uday010825
இதையும் படியுங்கள்
Subscribe