Advertisment

அச்சமூட்டும் ஆறு கிரகக் கூட்டணி! -ஆர். மகாலட்சுமி

planets


2026 
வருடம், பிப்ரவரி 13 முதல் மார்ச் 3 வரை கோட்சாரம் மிகவும் தீவிரத்தன்மையுடன் உள்ளது.

Advertisment

கும்ப ராசியில் சூரியன், சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு என ஆறு கிரகங்களும் கூடி நிற்கின்றனர். இது அவ்வளவு நல்ல கோட்சாரமில்லை.

Advertisment

இது கும்ப ராசியில் நடக்கிறது. கும்பம் ஒரு காற்றுத் தத்துவம். எனவே வான்வழி ஆகாயம் சார்ந்த இடர்கள் ஏற்படும். எனினும் குரு பார்வை இருப்பதால் ஓரளவு பாதிப்பு குறையும். கும்ப ராசி மேற்கு திசையைக் குறிக்கிறது.

எனினும் எப்போதும் சனி+ ர


2026 
வருடம், பிப்ரவரி 13 முதல் மார்ச் 3 வரை கோட்சாரம் மிகவும் தீவிரத்தன்மையுடன் உள்ளது.

Advertisment

கும்ப ராசியில் சூரியன், சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு என ஆறு கிரகங்களும் கூடி நிற்கின்றனர். இது அவ்வளவு நல்ல கோட்சாரமில்லை.

Advertisment

இது கும்ப ராசியில் நடக்கிறது. கும்பம் ஒரு காற்றுத் தத்துவம். எனவே வான்வழி ஆகாயம் சார்ந்த இடர்கள் ஏற்படும். எனினும் குரு பார்வை இருப்பதால் ஓரளவு பாதிப்பு குறையும். கும்ப ராசி மேற்கு திசையைக் குறிக்கிறது.

எனினும் எப்போதும் சனி+ ராகு+ செவ்வாய் இணைவு உலக யுத்தத்தை உண்டாக்கும். எனவே ஒரு பெரிய போர் ஆரம்பிக்கும் சூழ்நிலை ஏற்படும். குரு பார்வை இருப்பதால் அந்தப் போர் மேகத்தைக் கலைத்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.

இது காலபுருஷனின் 11-ஆமிடத்தில் இருப்பதால், அரசியலில் அதிரடியான திருப்பங்களை உண்டாக்கி விடும்.

ஒரு அரசியல் தலைவர் பெரும் விபத்தைச் சந்திக்க நேரிடும். அரசியல் கூட்டங் கள் பெருவாரி மரணத்தை உண்டாக்கும்.

தேர்தல் சம்பந்தப்பட்ட வர்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். மக்கள் நிறைய கூடும் இடங்களில் பாதுகாப்பாக இருப் பது அவசியம்.

வெளிநாட்டுப் பரிமாற்றங்கள், பயணம் இவற்றில் கவனம் தேவை.

எப்போதெல்லாம் சனி, ராகு, செவ்வாய் சேர்ந்து நிற்கிறதோ அல்லது குரு ராகு சேர்க்கை உள்ளதோ அப்போது வெகுஜன மரணமும், பூமி அதிர்ச்சியும் ஏற்படும் என்று "முண்டேன் அஸ்ட்ராலஜி'' (Mundane Astrology)  கூறுகிறது. 

தற்போது குரு தனது 9-ஆம் பார்வையால் ராகுவைத் தொடர்பு கொள்கிறார் என்பதைக் கவனிக்கவும்.

சனி தற்போது ராசி சந்தியில் உள்ளார். இதுவும் நல்லதில்லை. இதனால் சில நாட்டுமக்கள் அகதிகளாக வெளியேறுவர்.

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாகும். விபத்துக்கள் அதிக மாகும்.

கும்ப ராசி குறிக்கும் நாடுகள்:

சுவீடன், ஜப்பான், சூடான், ரஷ்யா, போலந்து.

கும்ப ராசி குறிக்கும் தமிழ் நாட்டுப் பகுதிகள்:

சேலம், நாமக்கல், திருச்சி, கரூர்.

சூரியன் கிழக்கு திசையையும், புதன் வடக்கு திசையையும், சுக்கிரன் தென்கிழக்கு திசையையும், சனி மேற்கு திசையையும், ராகு தென்மேற்கு திசையையும், செவ்வாய் தெற்கு திசையையும் குறிப்பார்கள். இந்த இடங்களிலுள்ள மக்கள் கவனமாக இருந்து கொள்ளவும்.

சந்திரன் பிப்ரவரி 17, 18, 19-ல் கும்ப ராசியில் செல்வார். 

அப்போது...

கும்ப ராசியில் ஏழு கிரக கூட்டணி என்கிற நிலை உண்டாகும். நிஜமாகவே ரொம்ப அச்சமாக உள்ளது. இது பூகம்பம் உண்டாக்குமா? அல்லது சுனாமி ஏற்படுமா? அல்லது புயல் வருமா என அச்சம் இருக்கிறது.

ஏதோ ஒரு பார்வை சமாளிக்க வைத்துவிடும் எனும் நம்பிக்கையும் உள்ளது.

எல்லோரும் உலக நன்மைக்காக இந்த நாட்களில் மட்டுமாவது "கோளறு பதிகம்' படிக்கவும். எல்லா மதத்தினரும் அவரவர் சாமியைக் கும்பிடவும்.

அப்புறம் தெய்வம் விட்ட வழி. மேலே இருக்கிறவன் பார்த்துக்கிட்டா சரிதான்.

bala280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe