Advertisment

ஒரு வினோதமான கதை - ஹென்றி  தமிழில் : சுரா

ss1

 

ஸ்டின் நகரத்தின் வடக்கு பகுதியில் ஒரு காலத்தில் ஸ்மோதர்ஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு நேர்மையான குடும்பம் வாழ்ந்தது. ஜான் ஸ்மோதர்ஸ், அவரின் மனைவி, அவர், அவர்களின் மகள், ஐந்து வயது நிறைந்த சிறிய மகள்,அவளின் பெற்றோர்... 

Advertisment

ஒரு சிறப்பு கட்டுரை எழுதுவதற்கான தருணத் தில் நகரத்தின் மக்கள் எண்ணிக்கையில் ஆறு பேர் என்று வருவார்கள். ஆனால், உண்மை யிலேயே எண்ணும்போது, மூன்று பேர்தான் வருவார்கள்.

ஒரு இரவு வேளையில் சாப்பாடு முடிந்த பிறகு, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகிவிட்டது. ஜான் ஸ்மோதர்ஸ்

 

ஸ்டின் நகரத்தின் வடக்கு பகுதியில் ஒரு காலத்தில் ஸ்மோதர்ஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு நேர்மையான குடும்பம் வாழ்ந்தது. ஜான் ஸ்மோதர்ஸ், அவரின் மனைவி, அவர், அவர்களின் மகள், ஐந்து வயது நிறைந்த சிறிய மகள்,அவளின் பெற்றோர்... 

Advertisment

ஒரு சிறப்பு கட்டுரை எழுதுவதற்கான தருணத் தில் நகரத்தின் மக்கள் எண்ணிக்கையில் ஆறு பேர் என்று வருவார்கள். ஆனால், உண்மை யிலேயே எண்ணும்போது, மூன்று பேர்தான் வருவார்கள்.

ஒரு இரவு வேளையில் சாப்பாடு முடிந்த பிறகு, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகிவிட்டது. ஜான் ஸ்மோதர்ஸ் வேகமாக நகரத்திற்குள் சென்று ஏதாவது மருந்து வாங்குவதற்காக விரைந்தார்.

அவர் எப்போதுமே திரும்பி வரவில்லை.

சிறுமி குணமாகிவிட்டாள். கால ஓட்டத்தில் வளர்ந்து பெண்ணாக ஆனாள்.

தன் கணவர் காணாமல் போனதை நினைத்து தாய் மிகவும் கவலைப்பட்டாள்.

அவள் மீண்டும் திருமணமாகி, ஜான் ஆன்டோனியோ நகருக்கு நீங்குவதற்கு முன்னால் இருந்த விஷயமிது.

Advertisment

சிறிய பெண்ணும் உரிய நேரத்தில் திருமணம் செய்துகொண்டாள். பல வருடங்கள் கடந்தோடிய பிறகு, அவளுக்கும் ஒரு ஐந்து வயதுப்பெண் குழந்தை இருந்தது.

அவளின் தந்தை வெளியே சென்று எந்தக் காலத்திலும் மீண்டும் வராமல்போன காலகட்டத்தில் வாழ்ந்த அதே வீட்டில்தான் அவள் இப்போதும் வசிக்கிறாள்.

ஒருநாள் இரவு வேளையில்... ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை என்று கூறலாம்.... ஜான் ஸ்மோதர்ஸ் காணாமல் போன அதே நாளில்.. அவளுடைய சிறிய குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ஜான் ஸ்மோதர்ஸ் உயிருடன் இருந்து அவருக்கு ஒரு நிரந்தர வேலையும் இருந்திருந்தால், இப்போது அவர் அவளுடைய தாத்தாவாக இருந்திருப்பார்.

"நான் நகரத்திற்குள் சென்று அவளுக்கு மருந்து வாங்கிக்கொண்டு வருகிறேன்'' என்று ஜான் ஸ்மித் கூறினார் (அவர் வேறு யாருமல்ல... அவள் திருமணம் செய்து கொண்ட மனிதர்தான்).

"வேண்டாம்... வேண்டாம்.... அன்பு ஜான்...''- அவனுடைய மனைவி அழுதாள்:

"நீங்களும் நிரந்தரமாக காணாமல் போனாலும் போய் விடுவீர்கள். பிறகு.... திரும்பி வருவதற்கு மறந்து விடுவீர்கள்.''

அதனால், ஜான் ஸ்மித் போகவில்லை. சிறிய பன்ஸியின் (குழந்தையின் பெயரே பன்ஸி) படுக்கைக்கு அருகில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பன்ஸியின் நிலைமை மேலும் மோசமாவதாக தெரிய, ஜான் ஸ்மித் மீண்டும் மருந்து வாங்கச் செல்லும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால், அவருடைய மனைவி அவரை விடவில்லை.

திடீரென கதவு திறந்தது. குனிந்த, வளைந்த, நீளமான வெண்ணிற முடியைக்கொண்ட  ஒரு வயதான மனிதர் அறைக்குள் நுழைந்தார்.

"ஹலோ... இதோ..‌ தாத்தா...''- பன்ஸி கூறினாள். 

மற்ற அனைவரையும்விட, அவள் அவரை அடையாளம் தெரிந்துகொண்டாள்.

வயதான மனிதர் தன் பாக்கெட்டிலிருந்து மருந்து கொண்ட ஒரு புட்டியை வெளியே எடுத்து, ஒரு கரண்டி நிறைய பன்ஸிக்குப் புகட்டினார்.

அவள் உடனடியாக குணமாகி விட்டாள்.

"நான் சற்று தாமதமாகிவிட்டேன்''- ஜான் ஸ்மோதர்ஸ் கூறினார்: "ஏனென்றால், நான் ட்ராம் வண்டியை எதிர்பார்த்துகாத்திருந்தேன்.''

uday010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe