"புறமிசையுடையணாகும் புகழ்பெற வாழ நல்லன்
திறமுடன் காரியங்கள் சிறப்பொடு பூஜை செய்யும் -
வறுமையே உடையதாகும் அறிவு நூல் பலவும் கற்கும்
அரசு நெறி பலவும் பேசும் ஆதிரை நாளினானே.''
-விரும கண்டிகை
பொருள்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர், பிரயாணம் செய்வதில் ஆர்வமுடையவர். அரசு அதிகாரமுண்டு. ஆனாலும் செல்வத்தில் ஏற்ற- இறக்கம் உள்ளவன்.
ஆற்றங்கரையில் வளரும் மரம், ஆற்று நீரால் செழுமையாக வளரும். அதே ஆற்றின் மண் அரிப்பால், வேர் அறுந்து வீழும். பஞ்சபூதங்களே, உலகின் இயக்கத்திற்கு காரணமாக அமைகிறது. பஞ்சபூத சமன்பாடு மாறினால், உயிர்களும், பிரபஞ்சமும் பாதிக்கப்படுமென்பதே அடிப்படைக் கருத்து. ஜோதிடத்தின் ஆதரமாக விளங்கும் பஞ்சாங்கத்தின் கருத்தும் இதுவே. திதி (நீர்), வாரம்-
கிழமை (நெருப்பு), யோகம் (ஆகாயம்), கரணம் (நிலம்), நட்சத்திரம் (காற்று). இதில், ஜனன காலத்து நட்சத்திரமே, நம்மை இயக்கும் சக்தியாக செயல்படுகிறது.
5-திருவாதிரை
சிறப்பு: சனிக்கிழமையும், திருவாதிரை நட்சத்திரமும் கூடும் நாளில் பிறந்தவர், செல்வவளம் பெறுவார்.
பொதுவான குணம்: ராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமானதால், இந்த நட்சத்திரக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகமானவர்கள். பிறர் உதவியில்லாமல், தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே சமாளித்துக்கொள்ளும் திறமையுடையவர்கள்.
திருவாதிரை நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷ மாகவும் வைத்துக் கொள்வார்கள்.
ப் குடும்பம்: இல்வாழ்க்கை என்பது அதிக ஈடுபாடு இல்லாமல் அமையும்.
ப் கல்வி: அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். மத்திம வயதிற்கு மேல் படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகம்.
ப் தொழில்: சுயதொழில் நடத்தும் திறமைமிக்கவர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால், பணம் கிடைப்பதை அதிகம் விரும்புவார்கள்.
ப் திருமணப் பொருத்தம்: மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். அனுஷ நட்சத்திரத்தில் மணப்பெண் அமைந்தால் சிறப்பு.
ப் திருமண வாழ்க்கை: இவர்களுக்கு காதல் திருமணம் மட்டுமே மகிழ்ச்சி தரும்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையி-ருக்கும். ஆனால் குழந்தை பருவத்தில் அடிக்கடி நோய் தொல்லைத் தரும்.
திருவாதிரை நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: திருவாதிரை நட்சத்திரத்தில், பிறந்த பெண் கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவார்.
ப் குடும்பம்: திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவார்கள்.
ப் திருமணப் பொருத்தம்: ரோகிணி, ஹஸ்தம், ஸ்வாதி, திருவோணம், சதயம், புனர் பூசம்- 4, பூசம், ஆயில்யம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்களை தவிர்த்து மற்ற நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் 18 வயதுவரை சில நோயின் அறிகுறிகள் தொல்லை தரும். தைராய்டு பிரச்சினைகள், கழுத்து வீக்கம், தொண்டையில் பிரச்சினைகள், சுவாசம் சார்ந்த நோய்கள், காது பிரச் சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நட்சத்திரப் பலன்கள்
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.
செல்: 63819 58636