Advertisment

நலம் தரும் நட்சத்திரம்! 10 மிருகசீரிடம்

star
"கரியவாய் பெரியளாகும் கருணையும் இவள்பால் இல்லை 
அரியதாம் ஒன்றும் ஈயாள் அகங்கனி இல்லம் சாராள் 
உரிமைகள் பலதும் பேசும் உண்பதும் புளிப்பே யுண்ணும் 
பெருமுளை உருண்ட தோளாள் பெரு மிருகசீடத்தினாளே''                 -மதன நூல் 
Advertisment
பொருள்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவள்- அழகான உடலும், கருணையற்ற மனமும் உடையவள். ஆனாலும், பேச்சுத் திறமையால், பாராட்டப்படுவாள். 
Advertisment
இந்த பூவுலகில் பிறப்பதற்கு முன், கடவுள் எனும் குயவரால், கால  சக்கரத்தின் சுழற்சியால், நாம் வடிவமைக்கப்படுகிறோம். எந்த பொருளுக்கும், வடிவமே, அதன்  பயன்பாட்டை நிர்ணயிக்கிறது.நம் முன்ஜென்ம வினைப்பயனே, ஜனன காலத்து நட்சத்திரத்தைத் தீர்மானிக்கிறது. ஜனன காலத்து நட்சத்திரமே, நம் மனதின் எண்ணங்களை முடிவு செய்கிறது. நம் எண்ணங்களே, வாழ்க்கைப் பாதையை உருவாக்குகின்றன.
மிருகசீரிட நட்சத்திரத்தின் சிறப்பு
திங்கட்கிழமையும், மிருகசீரிட நட்சத்திரமும், பௌர்ணமி திதியும், கூடும் நாளில் பிறந்தவர்கள், சாதனை படைப்பார்கள். 
மிருகசீரிட நட்சத்திரத்தின் வ-மை
ப் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் மன உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார். 
ப் கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பவர்.
ப் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெளியிடங்களில் அதிக நண்பர்களைப் பெற்றிருப்பார்.
ப் எதையும் ஆராயும் நோக்கம் அதிகம் இருக்கும்.
ப் கூர்மையான புத்தியும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறனும் கொண்டிருப்பார்.
மிருகசீரிட நட்சத்திரத்தின் பலவீனம்
ப் அடிக்கடி கனவுலகில் மூழ்கிவிடுவதால், யதார்த்த வாழ்க்கையின் உண்மை புரியாது.
ப் ஆரம்ப கல்வியில் சில தடைகள் உண்டாகும்.

star1

கூட்டு கிரகப் பலன்
(மிருகசீரிட நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது)
ப் மிருகசீரிட நட்சத்திரத்தில் சூரியனிருக்க சிறந்த ஆலோசகராக இருப்பார்கள்.
ப் செவ்வாய் அமர்ந்திருக்க அதிக குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும்.
ப் புதன் அமர்ந்திருக்க செல்வம் அதிகம் உடையவர். 
ப் சுக்கிரன் அமர்ந்திருக்க கலைத் திறமைக்காக அரசாங்க விருது பெறுவான்.
ப் சனி அமர்ந்திருக்க அடிக்கடி செல்வத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.
ப் குரு அமர்ந்திருக்க நிலையான மனம் இருக்காது.
ப் ராகு அமர்ந்திருக்க புகழின் உச்சியை அடைவான்.
ப் கேது அமர்ந்திருக்க பிறரின் ஆதரவால் வாழ்க்கை நடத்துவான்.
மிருகசீரிட நட்சத்திரப் பாதப் பலன்
ப்  மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. சவால்களை எதிர்கொள்வதில் அதிக விருப்பம் கொண்டிருப்பார். போராட்ட குணம் அதிகமிருக்கும். 
ப் மிருகசீரிட நட்சத்திரத்தின் இரண்டா வது பாதம், கன்னி நவாம்சம். புதனால் ஆளப்படுகிறது. இரக்க சுபாவம் மிகுந்தவராக இருப்பார்கள். பகைவர்க்கும் அருளும் உள்ளம்கொண்டிருப்பார்.
ப் மிருகசீரிட நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம்.சுக்கிரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த
வர்கள் எப்போதும் சமாதானத்தையே விரும்புவார். எழுத்தாளராகப் புகழ்பெற விரும்புவார்.
ப் மிருகசீரிடம் நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், தவறுகளை யார் செய்தாலும் தட்டிக்கேட்பார். 
மிருகசீரிட நட்சத்திர நாளில்  செய்யத்தக்க சுப காரியங்கள்
ப் வழக்கு, விவாதங்களில் வெற்றி பெறலாம்.
ப் பசு, எருமை, குதிரை வாங்க ஏற்ற நாள்.
ப் புதிய நண்பர்களை சந்திப்பதால், நன்மையுண்டாகும்.
மிருகசீரிட நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை
ப் புதன்கிழமையும், மிருகசீரிட நட்சத்திர மும் கூடினால், முப்பது நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை விஷ யோகம். பிரயாணம் செய்யக்கூடாது.
பரிகாரம்
ப் மிருகசீரிட நட்சத்திர தினத்தன்று, பழநி- ஸ்ரீ தண்டாயுத பாணியை வழிபடுவது சிறப்பு.

bala040725
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe