"மாந்துளிர் போலு மேனி மனத்தரு கல்வி கற்கும் 
ஏந்திய குலத்துக் கெல்லாம் இசைந்ததோர் ராசனாவான் 
காய்ந்த பின் நடக்க மாட்டான் கனங்குழையாருக்கு நல்லான் 
சேர்ந்தவருக்கன்பனாகும் செய்ய பொற் கா-னானே.''
-மரண கண்டிகை 

Advertisment

பொருள்: தன் மனதிற்கேற்ற கல்வியை கற்பான். தன் குலத்தில் அரசனாக இருப்பான். பெண்களுக்கு நல்லவன். தன்னை சேர்ந்தவர்களிடம் அன்பு செலுத்துவான்.    

Advertisment

வீரனுக்கு, புல்லும், ஆயுதமாகவே தெரியும். சிற்பி எல்லா கல்லையும் சிலையாகவே காண்பான், குயவனுக்கு மண்ணெல்லாம் மண் பாண்டமே. 

அவரவர் மனதிற்கேற்ற தொழில் அமைந்தால் மட்டுமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். மனதின் காரகனாகிய சந்திரனும், குண காரகனாகிய சூரியனும் சுட்டிக்காட்டும் தொழிலே, ஒருவருக்கு பயனுடையதாக அமையும். ஜாதகத்தில் அமைந்துள்ள, சந்திரனுக்கும், சூரியனுக்கும் சாதகமான நட்சத்திரமே அதை சுட்டிக்காட்டும்.

Advertisment

கேட்டை  

கேட்டை நட்சத்திரத்தின் சிறப்பு

வீரம், அறிவு, அழகு, ரகசியமான மனம் கொண்டவர்கள்.

கேட்டை நட்சத்திரத்தின் வலிமை

ப் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதையும் எளிதாக புரிந்துகொள்ளும் புத்திசாலிகள். 

ப் நல்ல பேச்சுத்திறன் உடையவர்கள்.

ப் பிறர் மனநிலையை அறிந்து செயல்படுபவர்கள். 

ப் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தைரியசாலிகள். 

ப் தாராளமாக தர்மம் செய்வோர். 

ப் செல்வம் சேர்ப்பதில் ஆர்வமுடையவர்.

ப் பிரபலமானவர் நட்பு கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்தின் பலவீனம்

ப் தீயவர் நட்பால் தொல்லை உண்டாகும்.

கூட்டு கிரக பலன்
(கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது.)

ப் கேட்டை நட்சத்திரத்தில், சூரியனிருக்க, விஷம், ஆயுதம், நெருப்பு ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகும்.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க, பெற்றோ ரின் ஆதரவு அதிகம் உடையவர்.

ப் புதன் அமர்ந்திருக்க, பல கலைகளில் நிபுனராக இருப்பார்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, கணிதத்திலும், ஜோதிடத்திலும் வெற்றியுண்டு.

ப் சனி அமர்ந்திருக்க, அடிக்கடி சண்டை, சச்சரவு உண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, ஆயுள் குறைவு.

ப் ராகு அமர்ந்திருக்க, இரண்டு திருமணங்கள் அமையும்.

ப் கேது அமர்ந்திருக்க, வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரப் பாத பலன்

ப் கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதம், தனுசு நவாம்சம். இந்த பாதத்துக்கு அதிபதி குரு. அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம் இவர்களிடம் உண்டு. எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவார்கள். மனத்தில் பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். 

ப் கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம், மகர  நவாம்சம். இதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும் தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள்.                

ப் கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம், கும்ப நவாம்சம். இதற்கு அதிபதி சனிபகவான் கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர்களுக்கான எல்லா குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல், கலைகளில் ஈடுபாடு இருக்கும்.

ப் கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதம், மீன நவாம்சம், அதிபதி குருபகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங்களில் பிரியம் இருக்கும். வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை இருக்கும்.

கேட்டை நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

கடன்களை அடைத்தல், ரகசியங்களை அறிதல், ஒப்பந்தங்கள், ஆராய்ச்சிப் பணிகள், மருத்துவ சிகிச்சைகள், நீண்ட, கடினமான பயணங்களைத் தொடங்குதல், சவாலான சொத்து பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற காரியங்களுக்கு உகந்தது.

கேட்டை நட்சத்திர நாளில்  செய்யக் கூடாதவை

ப் திருமணங்கள், புதிய வீடுகளின் கிரகப்பிரவேசம், புதுமனை புகுவிழா போன்ற சுபமான காரியங்களுக்கு கேட்டை நட்சத்திரம் உகந்ததல்ல.

கேட்டை நட்சத்திரப் பரிகாரம்

ப் புதன்கிழமையன்று வரும் கேட்டை நட்சத்திர நாளில் பராய் மரக் கன்றுகளை (குட்டி பலா) நடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

(கேட்டை நட்சத்திரப் பலன் நிறைவுற்றது)

செல்: 63819 58636