Advertisment

ஒரு புதிய நுண்ணுயிர் (ஆங்கில கதை) ஓ. ஹென்றி தமிழில் : சுரா

ss

றிவியல் மீது அளவற்ற ஈடுபாடு வைத்திருந்த ஒரு மனிதர் ஹவுஸ்டனில் இருந்தார். விஞ்ஞானத்தின் புதிர்களுக்கு அவர் வெறித்தனமான மாணவராக இருந்தார். தன் வீட்டில் அவர் ஒரு சிறிய சோதனைக்கூடத்தை வைத்திருந்தார்.தன் பெரும்பாலான நேரத்தை அங்கு ரசாயனங்களைச் சோதனை செய்து பார்ப்பதிலும் பலவிதமான பொருட்களை ஆராய்ந்து பார்ப்பதிலும் செலவிட்டுக் கொண்டிருந்தார்.

Advertisment

சமீப காலமாக பலவிதமான நுண் கிருமிகளைப் பற்றிய கட்டுரைகளில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டாகியிருந்தது. பாஸ்டியரின் எழுத்துக்களையும், கோச் எழுதிய விஷயங்களையும் வாசிக்கவேண்டும் என்பதற்காக அவர் தன் வர்த்தகத்தையே ஒதுக்கி வைத்து விட்டார். நுண்கிருமி சம்பந்தப்பட்ட எந்தச் சிறிய விஷயமாக இருந்தாலும், அதைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.

Advertisment

ஒரு புதிய 900 சக்தி கொண்ட, இருப்பதைப் பெரிதாகக் காட்டும் கருவியை அவர் விலைக்கு வாங்கினார். நுண்கிருமிகளின் வாழ்க்கை பற்றிய மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையில் வெகு சீக்கிரம

றிவியல் மீது அளவற்ற ஈடுபாடு வைத்திருந்த ஒரு மனிதர் ஹவுஸ்டனில் இருந்தார். விஞ்ஞானத்தின் புதிர்களுக்கு அவர் வெறித்தனமான மாணவராக இருந்தார். தன் வீட்டில் அவர் ஒரு சிறிய சோதனைக்கூடத்தை வைத்திருந்தார்.தன் பெரும்பாலான நேரத்தை அங்கு ரசாயனங்களைச் சோதனை செய்து பார்ப்பதிலும் பலவிதமான பொருட்களை ஆராய்ந்து பார்ப்பதிலும் செலவிட்டுக் கொண்டிருந்தார்.

Advertisment

சமீப காலமாக பலவிதமான நுண் கிருமிகளைப் பற்றிய கட்டுரைகளில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டாகியிருந்தது. பாஸ்டியரின் எழுத்துக்களையும், கோச் எழுதிய விஷயங்களையும் வாசிக்கவேண்டும் என்பதற்காக அவர் தன் வர்த்தகத்தையே ஒதுக்கி வைத்து விட்டார். நுண்கிருமி சம்பந்தப்பட்ட எந்தச் சிறிய விஷயமாக இருந்தாலும், அதைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.

Advertisment

ஒரு புதிய 900 சக்தி கொண்ட, இருப்பதைப் பெரிதாகக் காட்டும் கருவியை அவர் விலைக்கு வாங்கினார். நுண்கிருமிகளின் வாழ்க்கை பற்றிய மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையில் வெகு சீக்கிரமே தன் கணக்கையும் சேர்க்க முடியும் என்று அவர் நம்பினார்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு தேவாலயங்களில் ஒன்றில் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அந்த மனிதரின் மனைவி அவர் தேவாலயத்திற்கு வர வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், தான் வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புவதாகக் கூறி அவர் கெஞ்சலுடன் மறுத்து விட்டார்.அவள் பிள்ளைகளுடன்  சென்றிருக்கும் வேளையில் தன் நுண்ணோக்கியுடன் அமைதியாக நேரத்தை நல்ல முறையில் தான் செலவிடப் போவதாக கூறி விட்டார்.

முன்னாள் அரசு மண்ணியல் நிபுணரான டம்பர், ஹவுஸ்டனின் வாய்க்கால் நீரைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி கட்டுரையை அவர் படித்திருக்கிறார். 

அந்த உயர்ந்த மனிதரின் முடிவுகளை தன் சொந்த ஆராய்ச்சியைக் கொண்டு சரி பார்க்க வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

அதனால், இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன், அவர் சமையலறைக்குள் நுழைந்தார். அங்கிருந்த செடிக்கு அருகிலிருந்த பெஞ்சின் மீது இருந்த... முழுமையாக நீர் இருந்த... ஒரு தகர டின்னை அவர் பார்த்தார். அதை உடனடியாக தன் சோதனைக்கூடத்திற்கு எடுத்துச் சென்று, தான் அமர்ந்து பணியில் ஈடுபட்டார்.

தன் மனைவியும் குழந்தைகளும் தேவாலயத்தில் நடைபெறும் இரவு விருந்திற்காக தாங்கள் நினைத்தபடி கிளம்பும் சத்தத்தைச் சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் கேட்டார். ஒன்று அல்லது இரண்டு ப்ளாக்குகளைத் தாண்டி அது இருக்கிறது. 

தனக்குக் கிடைத்திருக்கும் அந்த அருமையான...  அமைதி தவழும் நேரத்திற்காக தன்னைத் தானே  அவர் பாராட்டிக் கொண்டார்.

அவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பணியாற்றினார். வாளியிலிருந்து எடுக்கப்பட்ட வாய்க்கால் நீரையே திரும்பத் திரும்ப பலமான  நுண்ணோக்கி மூலம் சோதித்துப் பார்த்தார்.


__________________

றுதியில் வெற்றியை அறிவிக்கும் வகையில் அவர் தன் கையைத் தன்னுடைய கணுக்காலில் தட்டினார்.

"டம்பிள் கூறியது தவறு!"- அவர் ஆச்சரியத்துடன் கூறினார்: "அவர் கூறியிருக்கிறார்.....

"இது 'ஹேபேடிட் சிஸ்டால்லிஸ்' என்று. அவர் தவறாக கூறியிருக்கிறார் என்பதை என்னால்உறுதியாக கூற முடியும். இந்த நீரில் இருக்கும் நுண்கிருமிகளுக்குப் பெயர் 'ஸ்கைஸோ மைஸெடிக் பேக்டீரியா'. இவை 'ரோஸியோ பெர்சிஸினா' வகையைச் சேர்ந்த பெரிய கிருமிகளும் அல்ல.

நான் கண்டுபிடித்திருப்பது ஒரு புதிய நுண்கிருமி யாக இருக்குமோ? என் கைக்குள் அறிவியல் உலகில் கிடைக்கக்கூடிய புகழைக் கொண்டு வந்து விட்டேனோ?''

அவர் தன் பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருடைய குடும்பம் வீட்டிற்கு வந்தது. அவரின் மனைவி சோதனைக்கூடத்திற்குள் வந்தாள். பொதுவாக அவர் அவளை உள்ளே நுழைய விட மாட்டார். 

ஆனால், அந்தச் சூழலில் அவர் கதவைத் திறந்து, அவளைஉற்சாகத்துடன் வரவேற்றார்.

"எல்லன்...''- அவர் உரத்த குரலில் கூறினார்: "நீ போன பிறகு, நான் புகழ் கிடைக்கும் காரியத்தில் வெற்றி பெற்று விட்டேன். சரியாகக் கூறுவதாக இருந்தால்... அதிர்ஷ்டத்தை அடைந்து விட்டேன். வாய்க்கால் நீரில் நான் ஒரு புதிய பேக்டீரியாவைக் கண்டுபிடித்திருக்கிறேன். இதைப் போன்ற ஒன்றை அறிவியல் கூறியதே இல்லை. உன் பெயரை நான் இதற்கு வைக்கப் போகிறேன். உன் பெயர் நிரந்தர புகழை அடையப் போகிறது. நுண்ணோக்கி மூலம் சற்று இதைப் பார். "

அவரின் மனைவி ஒரு கண்ணை மூடிக்கொண்டு நுண்ணோக்கி வழியாக பார்த்தாள்.

"வினோதமான... சிறிய... வட்ட வடிவ நுண்ணுயிர்கள்...! இல்லையா?''- அவள் கூறினாள் :

"இவற்றால் உலகிற்குக் கேடு இருக்கிறதா?''

"நிச்சயமாக... மரணம்தான். இவற்றில் ஒன்றை உன் உணவுக் குழாய்க்குள் கொண்டு போ... அத்துடன் உன் கதை முடிந்தது. நான் 'லண்டன் லேன்ஸட்'டிற்கும் "நியூயார்க் அறிவியல் அகாடெமி'க்கும் இன்று இரவே எழுதப் போகிறேன். இவற்றை நாம் எப்படி அழைக்கலாம், எல்லன்? நாம் யோசிப்போம்... 'எல்லனோபெஸ்'.. அல்லது...

"எல்லனைட்ஸ்'... அல்லது... வேறு என்ன?''

"ஓ... ஜான்...கேடு கெட்ட மனிதரே!''- மேஜையின் மீது இருந்த தகர வாளியைப் பார்த்து விட்டு, அவருடைய மனைவி வீறிட்டாள்:

"உங்களிடம் இருந்தது  என் வாளியில் இருந்த கேல்வெஸ்டன் சிப்பிகள்! தேவாலய இரவு விருந்திற்காக நான் அவற்றை வாங்கியிருந்தேன்.

ஒரு வகையில் கூறுவதாக இருந்தால்... அவையும் நுண்ணுயிர்கள்தான்!            

uday010126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe