பொதிகை மலை என்றாலே சித்தர்களின் சொர்க்கபுரி என்று கூறலாம். ஆகவேதான் நாம் பொதிகை மலை குறித்து எழுதிய நூலுக்கு சித்தர்களின் சொர்க்க புரி பொதிகை மலை எனப் பெயர் வைத்தோம்.
சித்தர்கள் தாங்கள் இந்த பூவுலகை அருளாட்சி செய்ய மலைகளில் தங்கியே தவமேற்றி உள்ளனர். மலையெங்கும் வியாபித்து இருக்கும் ஆலயங்களில் ஏதாவது ஒரு சித்தர் அடங்கியோ, அல்லது அருள் புரிந்தோ இருந்தால் அந்தமலையே பெருமைப்படும். பக்தர்களால் போற்றப்படும். அந்த மலைக்கு பக்தர்கள் அருள் தேடிச் செல்வார்கள். அங்கோ தேடிச்செல் வோருக்கு மன அமைதியும் வேண்டிய வரமும் அள்ளித் தருகிறார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் எங்கே இருப்பார்கள். எப்படி தவமேற்று வார்கள். உடலுடனா அல்லது அரூபமாகவா என நாம் நினைத்து தேடினால் அதற்கு விடையே கிடைக்காது. அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
நதி மூலத்தினையும் ரிஷி மூலத்தினையும் தேடக்கூடாது என்பார்கள்.
உண்மைதான். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி, பூங்குளத்தில் தோன்றுகிறது என்று கூறினாலும் அதன் மூலத்தினை இது வரை யாருமே அறிந்ததில்லை. கண்டதில்லை. காண முயற்சித்ததும் இல்லை.
அதுபோலவே அகத்திய மாமுனிவர், 18 சித்தர்களில் முதன்மை பெற்றவர். தமிழ் இலக்கணத்துக்கு முதல் நூலாம் அகத்தியம் கண்டவர். தாமிரபரணியை தோற்றுவித்தவர். தென்னகத்தில் எங்கு கண்டாலும் அவர் சாட்சியாக அவர் உருவாக்கிய கோவில்களும் சுவடுகளும் காணப்படுகின்றன. அகத்தியரின் காலடித் தடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் உள்ளது. அந்த பாதத்துக்கு பூஜைசெய்து மக்கள் வணங்கிவருகிறார்கள்.
பொதிகை மலையில்தான் அகத்தியர் அருளுகிறார். அவரைத் தேடி மே மாதம் 1-ஆம் தேதி மக்கள் பொதிகைமலை உச்சிக்கு திரண்டு சென்று பூஜைசெய்து வணங்கி நிற்கிறார்கள். நாளுக்கு நாள் பொதிகை மலை செல்வோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதற்கு காரணம் அகத்தியரின் அருளே.
அந்த பயணத் தினைத்தான் முதன்முதலில் எழுதப் போகி றோம்.
அகத்தியர் யார்?
முத்தமிழின் முதுபெரும் தொண்டன்
திருமுனிவன்
குரு முனிவன்
குள்ள முனிவன்
கும்ப முனிவன்
அகத்தியன்.
இவையெல்லாம் அகத்தியரின் பல பெயர்கள்.
சங்கத்தமிழ் பாடல்கள் பல வந்தாலும் புகழ்பெற்றது பொதிகை மலை. அதன் குளிர்ந்த தன்மையும், வெண்மதியும், தென்றலென பூங்காற்று தவழ்ந்து விளையாடும் நிலையையும் உடைய பச்சைமலை என்று பெருமை பேசுவர். இதுபோன்ற பல பெருமைபெற்ற பொதிகை மலை உச்சியில் எத்திசையும் புகழ் மணக்கும், முத்தமிழின் முதுபெரும் தொண்டன் நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சித்தர்களின் முதன்மையானவர் அகத்திய முனிவர். யோக தியானங்களில், மிகச் சிறப்பான பயிற்சியைப் பெற்றவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பவர். சாதாரண மனிதனின் பார்வைக்குத் தென்ப
பொதிகை மலை என்றாலே சித்தர்களின் சொர்க்கபுரி என்று கூறலாம். ஆகவேதான் நாம் பொதிகை மலை குறித்து எழுதிய நூலுக்கு சித்தர்களின் சொர்க்க புரி பொதிகை மலை எனப் பெயர் வைத்தோம்.
சித்தர்கள் தாங்கள் இந்த பூவுலகை அருளாட்சி செய்ய மலைகளில் தங்கியே தவமேற்றி உள்ளனர். மலையெங்கும் வியாபித்து இருக்கும் ஆலயங்களில் ஏதாவது ஒரு சித்தர் அடங்கியோ, அல்லது அருள் புரிந்தோ இருந்தால் அந்தமலையே பெருமைப்படும். பக்தர்களால் போற்றப்படும். அந்த மலைக்கு பக்தர்கள் அருள் தேடிச் செல்வார்கள். அங்கோ தேடிச்செல் வோருக்கு மன அமைதியும் வேண்டிய வரமும் அள்ளித் தருகிறார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் எங்கே இருப்பார்கள். எப்படி தவமேற்று வார்கள். உடலுடனா அல்லது அரூபமாகவா என நாம் நினைத்து தேடினால் அதற்கு விடையே கிடைக்காது. அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
நதி மூலத்தினையும் ரிஷி மூலத்தினையும் தேடக்கூடாது என்பார்கள்.
உண்மைதான். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி, பூங்குளத்தில் தோன்றுகிறது என்று கூறினாலும் அதன் மூலத்தினை இது வரை யாருமே அறிந்ததில்லை. கண்டதில்லை. காண முயற்சித்ததும் இல்லை.
அதுபோலவே அகத்திய மாமுனிவர், 18 சித்தர்களில் முதன்மை பெற்றவர். தமிழ் இலக்கணத்துக்கு முதல் நூலாம் அகத்தியம் கண்டவர். தாமிரபரணியை தோற்றுவித்தவர். தென்னகத்தில் எங்கு கண்டாலும் அவர் சாட்சியாக அவர் உருவாக்கிய கோவில்களும் சுவடுகளும் காணப்படுகின்றன. அகத்தியரின் காலடித் தடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் உள்ளது. அந்த பாதத்துக்கு பூஜைசெய்து மக்கள் வணங்கிவருகிறார்கள்.
பொதிகை மலையில்தான் அகத்தியர் அருளுகிறார். அவரைத் தேடி மே மாதம் 1-ஆம் தேதி மக்கள் பொதிகைமலை உச்சிக்கு திரண்டு சென்று பூஜைசெய்து வணங்கி நிற்கிறார்கள். நாளுக்கு நாள் பொதிகை மலை செல்வோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதற்கு காரணம் அகத்தியரின் அருளே.
அந்த பயணத் தினைத்தான் முதன்முதலில் எழுதப் போகி றோம்.
அகத்தியர் யார்?
முத்தமிழின் முதுபெரும் தொண்டன்
திருமுனிவன்
குரு முனிவன்
குள்ள முனிவன்
கும்ப முனிவன்
அகத்தியன்.
இவையெல்லாம் அகத்தியரின் பல பெயர்கள்.
சங்கத்தமிழ் பாடல்கள் பல வந்தாலும் புகழ்பெற்றது பொதிகை மலை. அதன் குளிர்ந்த தன்மையும், வெண்மதியும், தென்றலென பூங்காற்று தவழ்ந்து விளையாடும் நிலையையும் உடைய பச்சைமலை என்று பெருமை பேசுவர். இதுபோன்ற பல பெருமைபெற்ற பொதிகை மலை உச்சியில் எத்திசையும் புகழ் மணக்கும், முத்தமிழின் முதுபெரும் தொண்டன் நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சித்தர்களின் முதன்மையானவர் அகத்திய முனிவர். யோக தியானங்களில், மிகச் சிறப்பான பயிற்சியைப் பெற்றவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பவர். சாதாரண மனிதனின் பார்வைக்குத் தென்படாத தன்மையை அடைந்தவர். பொதிகைமலையில் தன்னை நாடிவந்து தரிசித்து வணங்கும் பக்தர்களை ஆசீர்வதித்து அருள்புரிகிறார். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்குமுன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673 பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கும்ப லக்னத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் அகத்தியர். கும்ப ராசியில் பிறந்ததால் இவருக்கு "கும்ப முனி' என்று பெயர் வந்தது.
இவர் தனது இளமைக்காலக் கல்வியை வட மாநிலமான குஜராத்தில் தொடங்கினார்.
நந்தி, தன்வந்திரி, ஆகியோரின் சீடராக காஷ்மீர், சீனா, நேபாளம், மஞ்ஞெரி ஆகிய நாடுகளில் பயணம் செய்து பல அரிய பெரிய சக்திகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரைப் பற்றி இதிகாசங்களும், புராணங் களும் கூறுகிறது. அவர் சென்றுவந்த அந்தந்த நாட்டு வரலாறுகளும், பிரசித்தி பெற்ற நூல்களும் இவரின் பெருமைகளைச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன.
இவர் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை நிகழ் காலத்தில் நன்கு கண்டறியும் ஆற்றல் பெற்றவர் என்று பழம்பெரும் நூல்கள் தெரிவிக்கின்றன.
அகத்தியரைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள்.
அகத்தியர் வாழ்நாள் 3 யுகம் 34 நாள் என்றும், அகத்தியர் வாசம் செய்யும் பொதிகை மலை அழிவதற்குமுன்பே உலகம் அழிந்து விடும் என்கிறார்கள்.
சித்துக்கள் செய்பவர்கள் சித்தர் என்றும், சித்தி அடைபவர்கள்தான் சித்தர் என்றும் கூறுவர். மனம், சித்தி, புத்தி, அகங்காரம் என்ற நான்கையும் வென்றவர்களே சித்தர்கள் என்றும் பொருள் கூறலாம். கடவுளைக் காணமுயல்பவர்கள் பக்தர்கள். கடவுளைக் கண்டு தெரிவித்தவர்கள் சித்தர்கள்.
உடலில் இருந்து உயிர் பிரியாமல் மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக்கொண்டு இயற்கை எய்திய சித்தர்கள் பலர். அவர்கள் அடங்கிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் தனித்தன்மையும், ஒப்பற்ற சக்தியும் கொண்டு விளங்குகின்றன. அவர்கள் சமாதி பெற்ற இடங்களைப் பின்வருமாறு எழுத்தாளர் சக்தி சுப்பிரமணியன் பட்டியல் இடுகிறார்.
அகத்தியர் அனந்த சயனம், அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி, திருமூலர்- சிதம்பரம், நந்தீசா- திருவாவடுதுறை, போகர்- பழனி, ராமதேவர்- அழகர்மலை, இடைக்காடர்- திருவண்ணாமலை, சட்டமுனி- சீர்காழி, கமலமுனி- திருவாரூர், சுந்தரானந்தர்- மதுரை, குதம்பைச்சித்தர்- மயிலாடுதுறை, கருவூரார்- தஞ்சாவூர், கோரக்கர்- திருக்கழுக்குன்றம், தன்வந்தரி- வைத்தீஸ்வரன் கோவில், புலத்தியர்- பாபநாசம்.
ஒரு சித்தன் சிறிது நேரம் சமாதி நிலை யிலோ அல்லது தியான நிலையிலோ இருந் தால் பல ஆண்டுகள் உலகில் நல்ல அணுக்கள் வாழும்படி செய்துவிடுவான்.
பிரம்மன் செய்த கும்பத்தில் தோன்றியவர் அகத்தியர். ஊர்வசி மேல் மோகம்கொண்டு வீரியத்தைக் கும்பத்திலிடத் தோன்றியவர் அகத்தியர். புலத்திய முனிவரின் சகோதரியாகிய உலோப முத்திரை என்பவரை மணந்தவர் அகத்தியர். சிவபெருமானின் திருமணத்தைக் காண தெற்கே வந்து பொதிகை மலை கரையில் தங்கியவர் அகத்தியர். வில்லவன், வாதாபி என்னும் அரக்கர்களை வென்றவர் அகத்தியர்.
தாரகன் என்னும் அரக்கர் மற்றும் அவன் கும்பலை அழிக்க இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று பேரும் பூமிக்கு வந்தனர். இதனால் பயந்துபோன தாரகன் கடலில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டான். உடனே இந்திரன் அக்னியை ஏவி கடல்நீரை வற்றச்செய்து அரக்கர்களை அழிக்கக் கூறினார். ஆனால் பாவம் கடலில் ஒளிந்து இருக்கும் அரக்கர்களை நாம் ஏன் துன்புறுத்த வேண்டும் விட்டு விடுவோம் என சும்மா இருந்துவிட்டார் அக்னி. ஆகவே, தைரியம் அடைந்த தாரகன் கும்பல் பூமிக்கு வந்து தேவர்கள் மற்றும் நாட்டு மக்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
இதனால் வருத்தம் அடைந்த இந்திரன், அக்னியின் அசாத்திய தன்மையால்தான் இதுபோல் தாரகன் மறுபடியும் மக்களை வதைத்து விட்டான். முன்பே கடல்நீரை வற்றச்செய்து அக்னி அரக்கனைப் பிடிக்காமல் விட்டு விட்டானே என்று சாபம் இட்டார்.
இந்திரன் சாபத்தின்படி "அக்னி வாயுவுடன்கூடி பூமியில் போய் கும்பத்தில் கடல்நீரைக் குடிக்கக்கடவது' என்று சாபமிட்டார். அதன்படி பூமியில் அவர்கள் இருவரும் விழுந்ததால் அகத்தியர் உருவானார்.
அகத்தியரின் மாணவர்கள் பலர், அதில் குறிப்பிடத்தக்கவர் திரண தூமாக்கனி என்ற தொல்காப்பிய முனிவர். அதங் கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேப், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கை பாடினியன், நற்றத்தன், வாமனன் ஆகியோர் ஆவர்.
அகத்தியர் எழுதிய "அகத்தியர்' என்னும் நூல் ஐந்து இலக்கணம் அடங்கிய நூல். இவர் பல வைத்திய நூல்கள் எழுதியுள்ளார். இதில் பெருந்திரட்டு, ஆயுர்வேத பாஷ்யம், விதிநூன் மூவகைக் காண்டம், வைத்திய சிந்தாமணி, செந்தூரம் 300, மணி 4000, சிவசாலம், சக்தி சாலம், சண்முக சாலம், வைத்தியக் கண்ணாடி, வைத்திய ரத்நாகரம், வைத்தியம் 1500- 1600, கர்மவியாபாகம், கரிசல், பஸ்மம் 200, தண்டகம், யட்சனிநாடி போன்றவை ஆகும். இவர் முதல் தமிழ்ச் சங்கங்களில் புலவராய் இருந்தவர் "அகத்திய சம்பிதை' என்னும் வைத்திய வட நூலினைத் தமிழாக்கியவர்.
ஏற்கெனவே அகத்தியர் என்ற சப்த ரிஷிக்கு பொருள் "விந்திய மலையை அடக்கியவர்' என்பது ஆகும்.
அகத்தியரைப் பொறுத்தவரை பல இடங்களில் அவரது அரசாட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் முக்கிய இடமாக பொதிகை மலையே கருதப்படுகிறது.
அவர் அருள் வழங்கும் இடம் ஏக பொதிகையில் உள்ளது. இதை கறுக மேடு என்றழைக்கிறார்கள். முற்காலத்தில் இந்த இடத்திற்கு செல்ல நெல்லை மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணைக்கு செல்லவேண்டும். அங்கிருந்து படகின்மூலம் பாணதீர்த்தம் செல்ல வேண்டும். அங்கே வீற்றிருக்கும் சித்தி புத்தி விநாயகரை (வடநாட்டில் இருப்பதுபோல் தென்னகத்தில் இங்கு மட்டுமே தம்பதி சகிதமாக பிள்ளையார் உள்ளார்) வணங்கி விட்டு பாணதீர்த்தத்தில் இருந்து படிமீது ஏறி செல்லும்போது ஒரு இடத்தில் ஒரு பெரிய குகை உள்ளது.
இந்தக் குகையை அகத்தியர் போன்ற முனிவர்கள் வாசம்செய்யும் இடமாகக் கருதுகிறார்கள். இங்கு பெரிய யாகமெல்லாம் நடக்கிறது. இந்தக் குகையின்மீது ஏறி நின்று பார்த்தால் பாணதீர்த்தத்தின் மேற்பரப்பில் தாமிரபரணி ஓடிவருவது தெரிகிறது. இந்தப் பகுதி ஆபத்தான பகுதி. எனவே இப்போது சுற்றுலாப் பயணிகளை இங்கு அனுமதிப்பது இல்லை. பாணதீர்த்தம் சென்று அந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு மலைமீது ஏறி "கறுக மேடு' என்ற காட்டுப்பகுதியை அடையவேண்டும்.
"கறுக மேடு' பகுதி அருகே வசிக்கும் சில ஆதிவாசிகளின் துணைகொண்டு அங்குள்ள "கல்லருவி' என்ற காட்டுப் பகுதியை அடைய வேண்டும். அதன்பிறகுதான் பெரிய சோதனை ஏற்படும். கல்லாற்றின் அருகில் இருந்து செங்குத்தான மலைமீது ஏறி அங்குள்ள "சங்கு முத்திரை' என்னும் இடத்தை அடையவேண்டும். அங்கு இரவு பொழுதைக் கழிக்கும்போது கடுமையான குளிர் நம்மைத் தாக்கும். மீண்டும் விடிந்த பிறகு அங்கிருந்து பயணத்தைக் காட்டுப் பாதை வழியாகத் தொடரவேண்டும். அதன் பின் பொதிகை மலையின் சிகரத்தை அடையலாம். அப்போது நாம் சங்கிலியைப் பிடித்துக்கொண்டுதான் ஏறமுடியும். அது மட்டுமல்லாமல்; அகத்தியரை அபிஷேகம் செய்ய கீழிருந்து நாம் தண்ணீர் கொண்டு செல்லவேண்டும். இதனால் இந்த இடம் செல்லும்போதே நாம் பரி பக்குவம் அடைந்துவிடுவோம்.
இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 6,200 அடி உயரத்தில் உள்ளது. சுமார் 1,500 சதுர அடி பரப்பில் சமதளமான, கரகரப்பான, கற்பாறைகளைக் கொண்டது. இந்த இடம் அடர்ந்த மலைக் காடுகளுடனும் அமைந்துள்ளது. இம்மலையின் சுற்றுப்புறமும் சூழ்நிலையும் பயங்கரத்துடன் ஒரு புறம் இருக்கிறது. புனிதம் மறுபுறம் இருக்கிறது. ஆம், அகத்தியப் பெருமானின் சிலை இங்குள்ளது. இந்த இடத்திலுள்ள சக்திவாய்ந்த பல மூலிகைகளும், வளம்மிகுந்த காட்டு மரங்களும் மனதுக்கு ஒருபுறம் ரம்மியத்தைக் கொடுக்கிறது.
பொதிகை மலையில் பசுமைப் பொலிவோடும், வெண்மேகங்கள் நீலநிற வானில் அலைந்துகொண்டிருக்கிறது. இங்கு காற்று தென்றலாய் பிறந்துவருகிறது. அந்தப் பச்சைப்பசேலென்று பட்டு விரித்த பச்சைமலையான மணம் மிகுந்த பூமலையைப் பார்க்கும்போது நமது மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்படுகின்றது. அது பூமலை மட்டுமா....? புனித மலையும் அல்லவா? இங்குள்ள இந்த மலையில் தண்ணீர் புதியது. தென்றல் காற்று புதியது. இந்த இடம் தேடி செல்லும் நமக்கு புதியது. ஆகவே, இந்த இடத்திற்கு நாம் சென்று வந்தால் நாமும் புதியவர் ஆகிவிடுவோம்.
பொதிகை மலையின் செங்குத்தான கால் வழுக்கும் கற்பாறையின் மீது இரும்பு சங்கிலியின் உதவிகொண்டு உச்சிமலைக்கு ஏறிச் செல்கிறோம். அங்கே அகத்திய மாமுனிவர் தன்னந்தனியே அருள் ஜோதியாகி அவருக்கே உரிய தோற்றத்தில் குள்ளமுனியாக நின்றுகொண்டு காட்சியளிக்கிறார். அவரது தரிசனத்தைக் கண்டவுடன் அதுவரை நடந்துவந்த அலுப்பும், பட்ட கஷ்டமும், அட்டைகளிடம் இருந்து தப்பிக்க உப்பு போட்டு நடந்துவந்த நிலையெல்லாம் மறந்து, அகத்தியர் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சரணாகதி யாகி விடுவோம்.
உலகிலுள்ள அனைவரும் சமம் என்பதுபோல் எம்மதமும் சம்மதம் என்ற அளவில் நாமே இந்த குறுமுனிக்கு அபிஷேகம், ஆராதனைசெய்யலாம். பூஜை முடிந்தவுடன் பூமாலை சாற்றலாம். புதுப்பொலிவு நிரம்பிய புத்தாடையுடன் இருக்கும் ஏகாந்த குறு முனிவரை தரிசித்து வணங்கியவுடன் அவருடைய பூரண அருளும் நமக்கு கிடைத்துவிடும்.
சரி; இப்போது இந்த இடத்துக்கு நம்மால் செல்லமுடியுமா? வனத்துறை தடை விதித்துவிட்டது. எனவே இந்த வழியாக செல்ல இயலாது. அப்படியென்றால் எப்படிச் செல்லலாம்?
(சித்தர்களைத் தேடி லைப்பயணம் தொடரும்)
________________
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
1987-ல் இருந்து எழுதி வருகிறார் இதுவரை 83 நூல்களை எழுதியவர். தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணம், சித்தர்கள் தரிசனம், ஜமீன்கள் வரலாறு, களரி, ஆதிச்சநல்லூர், சிவகலை, கொற்கை என தொல்லியல் குறித்தும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாறு என களப்பயணமாக சென்றும் நூல்கள் எழுதியுள்ளார். குவைத்தில் மூன்று நாட்கள் என்ற நூலுக்காக குவைத்துக்கும் சென்று வந்தவர்.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல், தமிழக கலை பண்பாட்டுத் துறை மூலம் கலைநன்மணி, சிறந்த மாவட்ட தனிநபர் நூலகர் போன்ற அரசு விருதுகள் உள்பட 60-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
இவரது "நவீன தாமிரபரணி மகாத்மியம்' எனும் நூல், மகா புஷ்கரத்தினை முன்னிட்டு வேலாக்குறிச்சி ஆதீனகர்த்தா பொருளுதவியுடன் வெüவந்தது. "நதிகள் வரலாற்றில்' இந்த நூல் க்யூ ஆர் கோடு மூலம் வீடியோ பார்க்கும் வசதி கொண்டது. இந்த நூல் வெüயீட்டு விழாவில் 18 சன்னிதானங்களும் கலந்து கொண்டனர். ஆதிச்சநல்லூரில் தொல்லியலுக்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்தியாவிலேயே முதன் முதலில் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைய காரணமாக இருந்தவர். தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார். அதை நிறைவேற்றாத காரணத்தினால் நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தாமிர பரணியில் நீர் கருவைச் செடிகளை அகற்றும் பணி, மற்றும் சுத்தப்படுத்தும் பணியையும் செய்து வருகிறார்.