சித்தர்கள் என்றாலே சிறப்பானவர்கள். மலை முகடு எங்கும் அவர்கள் ஆட்சித்தான் நடைபெறும். இதற்கு மேற்குதொடர்சி மலையே சாட்சி. இந்த மலையில்தான் எத்தனை எத்தனை சித்தர்கள் அருள்கிறார்கள்.நாம் சொல்லும் ஆனையடி தம்பிரான் சித்தர், மிகவும் பிரபலமானவர். மகேந்திரகிரி மலை  அடிவாரத்தில் வாழ்ந்தவர். இவர்  தவமேற்றும்போது இவரை சுற்றி யானைகள்  எப்போதுமே  நிற்குமாம். ஆகவேதான் ஆணையடி தம்பிரான் என இவருக்கு பெயர். 
Advertisment
சரி; இவரைப்பற்றி அறியும்முன்பே, இவர் காடு மேடு என அலைந்து திரிந்து மூலிகை சேகரித்து இவ்வையகத்துக்கு பணியாற்ற காரணமாக இருந்த மகேந்திர கிரி மலையை பற்றியும், அங்குள்ள சித்தர்கள் வசிக்கும் தபோவனத்தினை பற்றியும் அறியவேண்டும். எனவே மகேந்திர கிரி மலை பயணத்தினை தொடர்வோம்.
Advertisment
பொதிகை மலை அகத்தியர் வாழும் ஆன்மிக மலை. இதைப்பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். ரிஷிகளில் தலைமையான அத்ரி முனிவர் வாசம் செய்யும் அத்ரி மலையும் பெருமைபெற்ற மலைதான். அவரைத் தேடி பயணம் விரைவில் நடைபெறும். குற்றாலம் மலையில் கொட்டிக்கிடக்கும் அருவிகள் மத்தியில் சித்தர் பெருமக்கள் தவம்செய்த பல இடங்கள் தற்போது குகைகளாகக் காட்சியளிக்கிறது. அவர்களுக்கு வருடந்தோறும் பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. அந்தப் பயணத்தினையும் விரைவில் தொடரப் போகிறோம்.  குற்றால மலையில் பரதேசி புடைதான் போதிதர்மர் வாழ்ந்த இடம்  எனப் போற்றப் படுகிறது. இவ்விடத்தில் அகத்தியர் உள்பட 18 சித்தர்களும் தவமேற்றினார்கள் என கூறப் படுகிறது. போதிதர்மர் இருப்பிடத்தினை தேடி  சீனர்கள்  குற்றால பரதேசி புடைக்கு வந்தார்கள் என்ற கூற்றும் உண்டு. அங்கு பாறையில் வித்தியாசமான எழுத்துருவை கண்டார்கள் என்பதெல்லாம் ஆன்மிக வரலாறு. அந்த எழுத்து இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழி எழுத்து என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மலைகளை போலவே போற்றுதலுக்குரிய  மலை மகேந்திரகிரி மலை.
நெல்லை மாவட்டத்தில்  எம்பெருமா னின் திவ்ய தேசங்களில் பாண்டி நாட்டு திருப்பதியின் கடைசி தலமான திருக்குறுங் குடிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் மகேந்திரகிரிமலை அமைந்துள்ளது. இம்மலை சிவபெருமானும் உமையவள் பார்வதியும் வாசம் செய்யும் அற்புத மலை யாகும். இதையறிந்து பலபக்தர்கள் இங்கே நடைபயணமாக சென்று  சித்தர்கள் அருளை பெற்றுள்ளார்கள். 
Advertisment
இம்மலையில் 18 சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. பல்வேறு பாதங்களும் இங்கு காணப்படுகின்றன. "கமன சித்தர் வந்து இங்கு காயசித்தி விளைவிப்பார்' என்ற குற்றாலக் குறவஞ்சியின் பாடலுக்கு உண்மை கற்பிக்கும் மலை இதுவாகும்.
இங்குள்ள 18 சித்தர்களின் முதல் சித்தராகச் சங்கிலி சித்தர் ஏடுகளில் கூறப் பட்டுள்ளார். நாம் எல்லா இடத்திலும் அகத்தியர் தான் முதல் சித்தர் என்கிறோம். 

hills1

அவரை சங்கிலி சித்தர் என்கிறார்கள். ஒருவேளை அகத்தியரின் மற்றொரு பெயர் சங்கிலி சித்தராக இருக்குமோ?.
முன்னொரு காலத்தில் உலகம் சுபிட்சம் பெற சிவபிரானும், பார்வதியும் தபசு செய்த இடம் மகேந்திர கிரியில் உள்ளது. அந்த இடங்களில் அவர்களின் பாதங்கள் பதிந்திருப்பதும், அதை தரிசிப்பதும் சிறப் பானதாகும். தற்போது நாம்  இம்மலைக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி கிடையாது. தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்பு ஆன்மிக பெரு மக்கள்  இம்மலையில் பலநாள்களாக அமர்ந்து தவம் புரிந்துள்ளனர். அதனால் புத்துணர்ச்சி பெற்று, சித்தர்களின் அருள்பெற்று மலை அடிவாரத்துக்கு வந்து புண்ணியராய் வாழ்ந்துள்ளனர். தற்போதும் இவர்கள் இந்தப் பயணத்தினைப் பற்றி பெருமை யோடு அசைபோடுகிறார்கள். என்ன செய்வது நமக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நாம் அங்கே சென்றுவந்த முதியவர்கள் அசைபோடுவதை கேட்டால் நம்மை அறியாம லேயே மெய்சிலிர்க்கிறது. 
 நமது முன்னோர்கள் மகேந்திரகிரி யாத்திரையை எப்படி செய்தனர் என நாம் தெரிந்துகொள்வோம்!
மகேந்திரகிரி யாத்திரை கொடமாடி என்று அழைக்கப்படும் ஆனையடி தம்பிரான் ஆலயத்திலிருந்து துவங்குகிறது. எல்லாவற்றிற் கும் மூல ஆதாரமாகச் சதாசிவ நிலையம் விளங்குகிறது. இவ்வாலயத்திற்கு வடக்கே அத்தியடி விநாயகர் ஆலயம் உள்ளது.  நாம் ஏற்கெனவே கூறியபடி இங்கு வாழ்ந்த ஆனையடி தம்பிரான் சுவாமிகள்முன்பு யானைகள் வந்து நிற்குமாம்.  இவர் பெரிய தவவலிமை பெற்றவர். அவரை பற்றித்தான் நிறைய பேசப்போகிறோம். இவரை காண வருபவர்கள் ஆற்றில் குளித்துவிட்டு, தங்களது பழைய ஆடையைக் கலைத்துவிட்டு, புது ஆடையுடன்தான் வருவார்களாம். ஆடையை கலைந்து தண்ணீரில் எரிந்துவிட மாட்டார்கள்.அப்படி செய்தால் அது பெரிய பாவம். எனவே தவறுதலாக புரிந்துகொள்ளக் கூடாது. 
  பாவத்தினை தீர்க்க வருபவர்கள். பாவத்தினை ஏற்றுவிடக்கூடாது.  இவ்விடம் சித்தர்கள் கூட்டம் வாழும் இடம். தற்போது கூட நாம் இங்கே சென்றுவரலாம். ஆனால் கவனமாக செல்லவேண்டும். ஆங்காங்கே சித்தர்கள் உருவமற்ற நிலையில் தவத்தினை மேற்கொண்டு வருவார்கள். எனவே இங்கு உமிழ்வது, சிறுநீர் கழிப்பது போன்றவை  கூடாது. இங்கு வருபவர்களும் கட்டுப் பாடாகவே இருந்தார்கள். ஆகவேதான் அந் நாட்களில் மும்மாரி மழையும் பொழிந்தது.
மகேந்திகிரி மலையில் பல அபூர்வ  தீர்த்தங்களும், கடவுளர்களின் பாதங்களும் உள்ளன. எனவே அதைத் தரிசித்தால், முக்தி நிச்சயம் கிடைக்கும். மலைக்கு செல்லும் நமது முன்னோர்கள் நாற்பத்தொரு நாட்கள்  விரதமிருப்பார்கள். தானாகச் சமையல் செய்து பாசிப்பயிறு, அவல், பேரீச்சை பழம், பால் போன்றவற்றை மட்டும் அருந்துவார்கள்.  அம்பாள் பூஜையைத் தினமும் செய்து வருவார்கள். அதன்பின்னே பயணத்தினைத் துவங்குவார்கள். மகேந்திரகிரி மலையில் அதிகமான கடவுளர்களின் பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திற்கும் ஒரு காத தூரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதுக்கள் வாசம் செய்யும் குகைகள் பல இங்கு உள்ளன.
இப்பாதங்களைத் தரிசிக்கும் பக்தர்கள் ஒவ்வொரு தீர்த்தத்தின் முன்னும் நின்று மூன்றுமுறை கையைத் தட்டி அத்தீர்த்தத்தில் மூன்று முறை மூச்சுவிடாமல் நீராடி எழவேண்டும். தேவி பாதங்களை தீர்த்தாலும், பன்னீராலும் சுத்தம்செய்து வாசனை பொடிகள் அடங்கிய திருமஞ்சனத்தைப் பாதங்களில் சாத்தி பத்தி கொளுத்தி, கற்பூரம் காட்டி, பஞ்சாமிர்தம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்தியம் படைத்து வணங்குதல் வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பாதத்திலும் செய்தால் சித்தியும், முக்தியும் கிடைக்கும் என்று ஏடுகள் கூறுகின்றன.
சிறு வயது முதலே மகேந்திரகிரிக்குச் சென்றுவந்த பெரியவர் மாடசாமியிடம் இந்தப் பயணம் குறித்து கேட்டோம். அவர் பெருமூச்சு  விட்டபடியே, "அதுவெல்லாம் ஒரு பொற்காலம்' என்று பேசத் துவங்கினார். 

hills2

"இனி உயிர் பிழைக்கமாட்டார். அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது' என கடைசி காலத்தில் அவரது முன்னோர்கள் உருவாக்கி வைத்த ஆசிரமத்தில்  விட்டுவிட்டு சென்று விட்டனர். அதற்கு காரணம். அவரது உயிர் மகேந்திரகிரி மலை அடிவாரத்திலுள்ள ஆலயத்தில் போகட்டும் என நினைத்தனர்.  
என்ன ஆச்சரியம் கொஞ்ச காலத்தில் அவருக்கு உயிர் வந்தது. அவர் தனது குடும்பத்தினை பார்க்க தனியாளாய் பேருந்தில் ஏறி சென்றார்.  குடும்பத்தாரால்  இனி உயிர் பிழைக்க மாட்டார் என விட்டுச் சென்ற பெரிய வருக்கே உயிர் கொடுத்த மலை இந்த மலை என்று ஆரம்பித்தார். "தற்போது இந்த மலைக்கு செல்ல இயலாது. வனத்துறை நம்மை வளைத்து பிடித்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விடுவார்கள். சிறைத் தண்டனையும் உண்டு. எனவே தற்போது அந்த புண்ணிய பூமிக்கு யாராலும் செல்ல இயலவில்லை' எனப் பெருமூச்சு விட்டவர் இம் மலையைப் பற்றி மேலும் பேசினார்.
கொடுமுடி அணைக்கட்டின் ஒருபகுதி வழியாகதான் நாம் மகேந்திர கிரி மலைக்கு ஏறவேண்டும். முதலில் பேச்சி மொட்டை என்னும்  இடத்தினை அடையலாம்.  இந்த இடத்துக்கும்  பணக்குடி அருகேயுள்ள ரோஸ்மாபுரம் சுடலை கோவிலில் இருந்துகூட ஒரு வழி உண்டு. அதன்பிறகு சங்கு தீர்த்தம், வீணை தீர்த்தம், கிருஷ்ணர் பாதத்தினைத் தரிசித்து, அதைத் தொடர்ந்து நாம் அடர்ந்த  காட்டுக்குள் நடந்துசென்றால், சிவன் பாதம், இராமர் பாதம், சுப்பிரமணியர் பாதம் என வரிசையாகப் பாதங்களை தரிசனம் செய்துகொண்டே  செல்லலாம். அதன்பிறகு பஞ்சவடி என்ற இடத்தினை அடையலாம். அங்கே ராகு- கேது என்ற இரு அருவி கொட்டிக் கொண்டிருக்கும். அதன் சற்று கீழே இரண்டு மலை மொட்டை உண்டு. ஒன்றுக்குக் கும்பகிரி என்று பெயர். மற்றொன்றை கும்பகர்ணன் மொட்டை என அழைக்கிறார்கள். இந்த இடங்களையெல்லாம் நாம் கொடி முடியாறு அணைக்கட்டு மேலே நின்று பார்த்தாலே தெரியும்.
 அதன் அருகே மகேந்திர கிரி மலை உள்ளது. இந்த மலையை மேகக்கூட்டம் மிக பிரமாதமாக மறைத்து விளையாடுகிறது. அதனருகேதான் ஆஞ்சனேயர் கோட்டை உள்ளது. இவ்விடம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இந்த இடத்தில் தற்போதும் ஆஞ்சனேயர் வாசம் செய்கிறார் எனப் பக்தர்கள் நம்புகிறார்கள். அடுத்து நடந்துசென்றால் கொண்டை முறிச்சான் மலை உள்ளது. இந்த இடத்தில் மிக கடுமையாக காற்று அடிக்கும்போது, மரத்தின் கொண்டையைக்கூட முறித்து விடுமாம். இதனால்தான் இதற்கு இப்பெயர் விளங்குகிறது. அதையும் தாண்டி சென்றால் நாடுக்காணி தொண்டு என்ற இடம் வரும். இந்த இடத்தில் நான் சிறுவனாக இருந்தபோது மாடு மேய்க்க சென்றுள்ளேன். 
தொடர்ந்து நாம் சென்றால் மனோன் மணி தாய் பாதத்தினைத் தரிசிக்கலாம். அங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் முத்துக்குளி தீர்த்தம் உள்ளது. அங்கே இராமர் தீர்த்தம், பசுபதி தீர்த்தம், புணாக்கீஸ்வரர் தீர்த்தம், அண்டன் கூடம் போன்றவை உள்ளன. இங்கெல்லாம் தரிசனம் செய்துவிட்டு, தொடர்ந்து மலை ஏறும்போது அணையா தீபத்தினை நாம் அடையலாம். இங்கு பல நூறு ஆண்டுகளாக தீபம் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் பெரியவர்கள். அவ்விடத்துக்குப் பலமுறை முயற்சித்தும் என்னால் செல்லமுடியவில்லை. அதன்பின் மாயன் பரம்பு  உள்ளது. இந்த இடத்தில்தான் மாயன் பிறந்தார் என்ற கருத்தும் உண்டு. 
அடுத்து நெட்டையர் கால் வழியாக சின்ன மாஞ்சோலை எஸ்டேட் நடுக்காடு பங்களா வந்து சேர்ந்துவிடலாம். இவ்விடம் ஆங்கிலேய பெண் துறவி கார்மைக்கேல் அம்மையார் தங்கிருந்த பங்களா உள்ளது. இந்த இடத்துக்கு, மலையடிக்குறிச்சியில் இருந்து செல்ல பாதை வசதி உள்ளது. ஆனால் யாத்திரிகர்கள், அங்கிருந்து மீண்டும் தாயார் பாதம் வந்து அதிலிருந்து வேல்தீர்த்தம், தச்சன் குகை, வண்ணாத்தி பாறை வழியாக நம்பி கோவிலை வந்தடைவார்கள். அதன்பின் அங்கிருந்து திருக்குறுங்குடி வந்து தங்களது யாத்திரையை முடித்துகொள்ளலாம் என்றார்.
அந்தக் காலத்தில் பல சாதுக்கள் இங்குவந்து வருடக்கணக்கில் தவம் இருப்பார்கள். சில இடங்களில் மிகப்பெரிய குகைகள் உள்ளது. அந்தக் குகையில் பல நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மேலும் சித்தர்கள்  வாழும் இடங்களுக்கு மனிதர்கள் செல்லக்கூடாது என்ற விதியும் உண்டு.
அற்புதமான இந்த இடங்களுக்குச் சென்றுவந்த அந்த காலங்கள் பொற்காலம் என வியந்து நின்றார்.
தமிழகம்தான் எத்தனை பெரிய புண்ணிய பூமி. இந்த பூமியில் அபூர்வ மலைகளில் அற்புத தெய்வதரிசனங்களை எண்ணிப் பார்க்கும்போது வியப்பாகத்தான் உள்ளது. இந்தப் புண்ணிய பூமியில் நாமும் வாழ்கிறோம் என எண்ணும்போது பெருமிதமாகத்தான் உள்ளது. மகேந்திரகிரி மலையில் சுப்பிரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்சவடி, பெரிய பாதம், அகஸ்தியர் பாதம், அம்பிகை சியாயமளாதேவி பாதம், அம்பிகை மனோன் மணி தாயார் பாதம், கிருஷ்ணர் பாதம், தாய் பாதம் உள்பட பல பாதங்கள் உள்ளன.
தாய் பாதமே எல்லாவற்றிலும் சிறப்பானதாகும். மேலும் இங்கு அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம், நயினார் அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிகோவில் தீர்த்தம், ஆஞ்சனேயர் கோட்டை தீர்த்தம் உள்பட பல தீர்த்தங்களும் உள்ளன. மேலும் வரலாற்று சிறப்புமிக்க பஞ்சவடி என்ற ஐந்து குழிகளை உடைய இடமும் இங்கு உள்ளது.
இந்த இடத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தனர் என அறியமுடிகிறது. ஆஞ்சனேயர் கோட்டை என்ற இடம் வானரங்கள் வாழுமிடமாக உள்ளது. இவ்விடத்தில் இருந்துதான் ஸ்ரீஅனுமன் இலங்கைக்குச் சென்றதாகக் கூறப் படுகிறது.
சிவனடியார் பாதம் அருகிலுள்ள பஞ்சவடிக்குப் பக்கத்தில் தேவவனம் என்ற மலர் தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் சித்தர்கள் மலர் பறித்து எம்பெருமாள் சிவபெருமாளையும், உமையாள் பார்வதி தேவியையும் தினசரி வழிபட்டு வருகிறார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. இவ்விடத்திலுள்ள ஒரு கல்வெட்டில் "தேவ வனம் மானுடர்கள் செல்லக்கூடாது' என்று பொறிக்கப்பட்டுள்ளது. 
இப்போதெல்லாம் மகேந்திரகிரி மலைக்கு செல்ல இயலாது. தற்போது கொடிமுடியாறு அணைக்கட்டு அருகிலுள்ள சாதுக்கள் பீடத்தினையும் சாதசிவ நிலையத்தினையும் தரிசித்து விட்டு வருவது நன்மையாகும். இங்குள்ள அத்தியடி விநாயகர், சப்தகன்னிகள் போன்ற  தெய்வங்களை வணங்குவதும் சிறப்பானதாகும். பௌர்ணமிதோறும் அத்தியடியில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இங்கு பல பக்தர்கள் தரிசனம் செய்துவருகிறார்கள்.
ஆனையடி தம்பிரான் வாழ்ந்து பிரதிட்சை செய்த சதாசிவம் கோவிலை அணை கட்டும்போது இடிக்க முயற்சிசெய்தும் இயலவில்லை. எனவே இங்குள்ள அணைக் கரைக்குள் மிக அருமையாகச் சதாசிவம் ஆலயத்தினைக் கட்டி வைத்துள்ளனர். இங்கு மூலவர் உள்ள இடத்தில் அபூர்வ ஓலைச்சுவடிகள் அடங்கிய பெட்டி வைத்து வணங்கப்படுகிறது.
 இனி, அணைக்கட்டை கட்டவிடாமல் தடுத்த ஆனையடி தம்பிரான் சித்தர் குறித்து அடுத்து காணலாம்.
(சித்தர்களை தேடி மலை பயணத்தினை தொடர்வோம்)