பூஜை செய்யும் பொருட்கள் அவர்களிடம் தானே இருக்கிறது. என எல்லோருமே அதிர்ந்துவிட்டனர். பாதை மாறி போய் விட்டார்களோ... அய்யோ. திக்கு தெரியாத காட்டில் எங்கே போய் தேடுவது. எப்படி தேடுவது? குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இல்லாமல் எப்படி பூஜை செய்வது. அர்ச்சகர்கள் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். சூரியன் மறைந்துவிட்டது. இரவுக்குள் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடித்துவிட்டு மற்றொரு இடத்தில் தங்கி, கிழே இறங்கவேண்டும். சப்தகன்னிகளுக்கு பூஜை செய்யக்கூடிய பூ, பழங்கள், ஆடை, அணிகலன்கள், வாசனை திரவியங்கள் எல்லாமே அவர்கள் வசமே உள்ளது. அந்த பொருட்கள் இல்லாமல் எப்படி பூஜை செய்வது.
சப்தகன்னிகளை ஏமாற்றி வரவழைக்க பூஜை என்றார்களே. இங்கே அதற்குமுன்பே நமக்கு பெரிய ஏமாற்றம் நிகழ்ந்துவிட்டதே என அதிர்ந்தனர் விவசாயிகள்.
ஆனாலும் அவர்கள் ஒரிடத்தில் நின்று அகத்தியரிடம் கோரிக்கை வைத்தனர். "அகத்தியப் பெருமானே இந்தக் காடு உம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குதய்யா. நாங்க இங்க எங்களுக்காக வரலைய்யா. வீடு வேணும், மனை வேணும், எம்புள்ளைக்கு வேலை வேணுமுன்னு வரலைய்யா?. மழை தண்ணீ இல்லை. காடு கரை விளைச்சல் இல்லாம கிடக்குதய்யா. அய்யா தாமிரபரணி வற்றாம இருக்க நீரு உம்ம கமண்டலத்திலுள்ள நீரை கவிழ்த்து நதியை உருவாக்கினீரு. இதுவரைக்கும் அது வத்தலை. இனிமேயும் வத்தாது. ஆனா காடு கழனி செழிக்க இந்த தண்ணி போதாதய்யா. அதுதான் பூஜைக்கு வந்து இருக்கோம். எங்களை நாங்க வருத்திக்கிட்டு வந்திருக்கோம். வனத்துறை அனுமதி தரலை. ஆனாலும் நாங்க கஷ்டப்பட்டு அனுமதி வாங்கிட்டு வந்திருக்கோம். தயவுசெஞ்சி பூச பொரு ளோட காணாம போன எங்க மக்களை கொண்டு வருமய்யா' என மனம் உருக வேண்டி நின்றனர்.
எனக்கே மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. "இவ்வளவு கஷ்டப்பட்டு வந்துகூட, தீடீர்னு பூஜை தடைப்பட்டா நல்லாவா இருக்கும். இதுபோல இன்னொரு பூஜை ஏற்பாடு செய்ய முடியுமா? வனத்துறைத்தான் நமக்கு முயற்சி செஞ்சு தருமா?' சினிமா படத்தில் வருவதுபோல திகில் நிறைந்த காட்சியாகத்தான் இருந்தது.
ஆனால் சில பெரியவர்கள் அனுபவமிகுந்தவர்கள் அங்கே சென்ற கால் தடத்தினை வைத்து ஆய்வுசெய்தனர். ஓரிடத்தில் நாலு பக்கம் வழி பிரிந்தது. அதில் ஒரு பக்கம் மாஞ்சோலைக்கு செல்லும் பாதை. மற்றொரு பக்கம் வாணதீர்த்தம் செல்லும் பாதை. மற்ற இரு பாதைகளும் நாம் வரும் பாதை, பூஜை செய்ய செல்லும் பாதை. இந்த இடத்திலுள்ள கால்தடத்தினை நன்கு ஆய்வு செய்தனர் பெரியவர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/hill1-2026-01-30-14-59-42.jpg)
வாணதீர்த்தம் செல்லும் அடர்ந்து காணப்பட்ட பாதையில் உள்ள புல்செடிகளுக்கு மேலே மக்கள் நடந்துபோன கால் தடம் கிடந்தது. அதன் வழியாகத் தான் மக்கள் தவறி சென்று இருக்க வேண்டும் என கண்டு பிடித்துவிட்டனர்.
உடனே அவர்களை தேடி ஒரு குழுவை அனுப்பினார்கள். மற்ற குழுவினர் தலையருவி நோக்கி நடந்தனர். அவர் களை சரியாக கூட்டிச்செல்ல இரண்டு பேரை முன்னும் பின்னும் அரணாக அனுப்பினர்.
பின்னால் வருபவர்கள் பாதை மாறி சென்று விடக்கூடாது என்று மற்ற பாதைகளை அ

பின்னால் வருபவர்கள் பாதை மாறி சென்று விடக்கூடாது என்று மற்ற பாதைகளை அங்குள்ள மரங்களிலுள்ள கிளைகளை தூக்கி போட்டு அடைத்து வைத்தனர். அதன்பின் அங்கே கிடந்த ஒரு பாறாங்கல்லை உருட்டி வைத்துவிட்டு, அதில் போகக்கூடாது என அடையாளம் போட்டு விட்டு, பூஜைக்கு போகும் இடம் நோக்கி அம்பு குறியிட்டனர். அதன்பின் நடக்க ஆரம்பித்தோம்.
மேலே செல்ல செல்ல பல பிரச்சினைகள் எங்களை தொற்றிக்கொண்டன. ஆனால் கமிட்டி தலைவர் கட்டபொம்மன் உறுதியாக சொன்னார்.
"அகத்தியர் புண்ணியத்தில எல்லாம் நல்லது நடக்குமய்யா. சும்மா நம்மளை சாமி பயங்காட்டுதாரு. இவனுவ வாரனு வளா, இடையில விட்டுட்டு போறானுவளான்னு சோதிச்சி பாக்காரு. நீங்க வேணுமுன்னா பாருங்க. தப்பி போனவிய நிச்சயம் கரைட்டா வந்திருவானுவ. நாம போய் பூஜைக்கு வேண்டிய வேலையை செய்வோம்'' அர்ச்சகர்களை அழைத்துக் கொண்டு தலையருவி நோக்கி நடந்தார்.
தொடர்ந்து கடினமான பயணம் எங்களை தொற்றிக்கொண்டது.
மூன்றாவது ஆற்றை கடக்கும்போது கிளைகளைப் பிடித்துக்கொண்டு தலை கீழாய் இறங்கினோம். சருக்கி விளையாடுவது போலவே சருகிக்கொண்டே சென்றோம்.
இடையில் குச்சி ஏதாவது இருந்து குத்திவிட்டால் நமது உடலிலுள்ள பாகங்கள் கிழிந்துவிடும். அந்த அளவுக்கு படுபாதாள மாக இருந்தது. கீழே சறுக்கியபடியே இறங்கினோம். அங்கே மற்றொரு அழகாக மணிமுத்தாறு நதி எங்கள் கண்ணில் பட்டது. ஆற்றில் சிறிது நேரம் இளைப்பாறினோம்.
பூஜை நடந்து முடியும்போது இரவு இங்கு தான் தங்கப்போகிறோம். சமையல் வேலையெல்லாம் இங்கேதான் நடைபெறும். இந்த இடத்துக்குத் "தாழ்வாரம்' என்று பெயர் என்று கூறினார்கள். அழகான இடம். ஆனால் ஆபத்து அதிகம். தீடீர் மழை பொழிந்தால் இவ்விடத்தில் தீடீர் வெள்ளம் ஏற்படும் என்றார்கள்.
"அகத்தியப் பெருமானே காப்பாற்று மய்யா' என கூறிவிட்டு தொடர்ந்து மலை ஏற ஆரம்பித்தோம். பயணம் மிகவும் கடுமையாக இருந்தது. இந்த பயணத்தில் எங்கள் முன்னால் பலிகொடுக்க அழைத்துசென்ற இரண்டு கிடாய் மிக வேகமாக ஓடிச்சென்றது. அப்போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தோம். ஆச்சரியமாக இருந்தது. இந்த பூஜைக்கும், இரண்டு கிடாய்க்கும் என்ன சம்பந்தம் என்பதை கட்டபொம்மன் அய்யா நம்மிடம் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் இந்த காட்டுக்குள் இந்த கிடாய் இரண்டு வேமாக இலக்கை நோக்கி ஓடுவது ஆச்சரியம்தான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/hill2-2026-01-30-15-00-21.jpg)
நடக்க போகிற விபரீதம் புரியாமல் கிடாய் இரண்டும் வேகமாக சென்றது. கயிற் றைப் பிடித்தவரை இழுத்துக்கொண்டு அருவியை நோக்கி ஓடியது. இந்தக் கிடாவை காட்டுக்குள் அழைத்து வருகிறோம். இங்கே சிறுத்தை, புலிகள், கரடி போன்றவை வாழும் இடம். யானைகள்கூட அதிகமாக வசிக்கும் வனம். இதுபோன்ற கிடாய் வாசத்தினை மோப்பம் பிடித்தால் எங்கிருந்தாலும் மிருகங்கள் சாடி வந்துவிடுமே. ஆனால் எதுவுமே நடக்கவில்லையே. மிகப்பெரிய பூஜைக்கு செல்கிறார்கள். ஆகவே நாம் இவர்களை எதுவும் செய்து விடக்கூடாது என மிருகங்களே ஒதுங்கி விட்டனவோ?. இதுவே பெரிய இறையருள்தானே.
தற்போது ஏறும் ஏற்றம்தான் மிக கடினமானது. உச்சக்கட்டம் என்பார்களே. அதுபோன்ற ஒரு ஏற்றம். எங்களோடு வந்த திரைப்பட இயக்குனர் முத்தமிழ் அவர்களின் கால் பிசகிவிட்டது. இதனால் அவரால் நடக்கவே இயலவில்லை. அதுவரை மிகவும் உற்சாகமாக படம் எடுத்துக்கொண்டு வந்தவர். நடக்க இயலாமல் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். அவரை எங்கள் குழுவினர் கைபிடியாக பிடித்து மேலே ஏற்றினர்.
சுமார் 15 நிமிடம் நடந்திருப்போம். எங்கோ அருவி விழும் சத்தம் கேட்கிறது. அருகில்தான். ஆனால் கண்ணுக்கு தெரியவில்லை. சிறிது தூரத்தில் செடி, கொடிகளுக்கு இடையே பார்த்தபோது அருவி தெரிந்தது. என்ன அழகு. பார்க்கும்போதே மனது கொள்ளை கொள்வதுபோலவே இருந்தது. "நாம் சொர்க்கலோகத்தில் நிற்கிறோமோ' என எண்ணும் அளவுக்கு, மிக அழகான இடத்தில் நின்று கொண்டிருந்தோம். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நம்மை சொக்க வைக்கும் தலையருவி.
மணிமுத்தாறு தலையருவி சுமார் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்துகொண்டிருந்தது. இந்த அருவி அருகேயுள்ள கசம் சுமார் 800 அடி ஆழம் கொண்டதாம். அந்த தடாகம் ஆபத்து என்று தெரியாமல் மிக அமைதியாக இருந்தது. இந்த பூஜையே தடாகத்தில் தான் நடக்கவுள்ளது. அதற்கான பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் பூஜை பொருள் வரவில்லையே.
அகத்தியப் பெருமானே உன்னை நம்பி வந்துவிட்டோம். எங்களுக்கு எப்படியாவது பூஜை பொருட்களை கொண்டு வா என அனைவரும் அகத்தியரை நோக்கி வணங்கி நின்றோம்.
எப்படியும் தப்பிச்சென்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் வந்திருந்த 20 அர்ச்சகர்களும் பூஜைக்காக குளித்து தயாரானார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே தப்பிச்சென்றவர்கள் பூஜைப் பொருட்களுடன் வந்து சேர்ந்தனர். மக்கள் அனைவருக்கும் சந்தோஷம். "தென்னாட்டுடைய சிவனே போற்றி. எந்நாட்டுடைய இறைவா போற்றி' என சந்தோஷமாக குரல் எழுப்பினர்.
உண்மைதானே. பூஜைப் பொருட்கள் மட்டும் வரவில்லையென்றால் பூஜை சிறக்குமா? எல்லாம் சித்தர்களின் அருள். அந்த சித்தர்களின் தலைமை சித்தர் அகத்தியப் பெருமான். அந்த அகத்தியர் வணங்கும் தலையாய இறைவன் சிவபெருமான். அதனால்தான் இந்த சிவனை போற்றி வணங்கி நிற்கிறார்கள்.
வேதவிற்பன்னர்கள் அமர்ந்து மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தனர். அந்த மந்திர சத்தம் காட்டுக்குள் எதிரொலித்தது. அந்த சத்தம் ஆடாத செடி கொடிகளைகூட அசைக்க வைப்பதுபோலவே இருந்தது. சப்த கன்னிகளை வடிவமைத்து அவர்களுக்கு மலர்சாத்தி, துணி உடுத்தி பல்வேறு அபிசேகங்கள் செய்தனர். பூஜையின் மந்திர ஒலி, மணம் நிச்சயம் சப்தகன்னிகள் காதில் விழுந்திருக்கும்போல.
இந்த வருடம் எங்களுக்கு ஒரு வித்தியாச மான அனுபவம் காத்திருந்தது. ஆம்; அதுவரை மேகம் எங்கே என்று தெரியாமல் இருந்த வானம் தீடிர் மேக கூட்டமானது. தொடர்ந்து தூறல் வந்தது. இது அருவியில் இருந்து விழும் தூறல் என நினைத்தோம். மறுநிமிடம் சாரல் ஆனது. ஆகா... சாரல்தானே! மழை இரவுதான் வரும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே அங்கு மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது.
சப்த கன்னியர்கள் பூஜைக்கு மயங்கி விட்டார்கள் போலும். எங்கள் பாறையை நாசமாக்கி விடாதீர்கள் என பக்தர்களை பார்த்து கூறுவதுபோலவே இருந்தது. அந்த மழையிலும் விடாமல் மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
பூஜை முடிந்தது. தொடர்ந்து முழுக்க முழுக்க இது பாமர மக்கள் இறைவனை வரவழைக்க மூர்க்கத்தனமாக செய்யும் பூஜை. ஆம்; கொண்டுவந்த கிடாய் ஒன்றின் தலை அறுக்கப்பட்டது. அந்த கிடாய் ரத்தத்தினைப் பாறை முழுவதும் தேய்த்தனர்.
அதன்பின் கிடாயின் தலையை உலைமூடியில் வைத்து கசத்துக்குள் விட கட்டபொம்மன் குழுவினர் கிளம்பினர். மழை பெய்து வழுக்கியது. கசத்துக்குள் விழுந்தால் அதோ கதிதான். ஆனாலும் அவர் இடுப்பில் துண்டை கட்டி மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அந்த உலை முடியை கசத்துக் குள் விட்டார்.
அதன்பின் அனைவரும் கீழே இறங்கி னோம். இருட்டிவிட்டது. தாழ்வாரத்தில் வந்து பூஜை சமையல் செய்தோம். மழை விடிய விடிய பெய்துகொண்டே இருந்தது. கவனம் வெள்ளம் வந்துவிடக்கூடாது என அனைவரும் விழித்திருந்தோம். சமையல் செய்ய உப்பு இல்லை என அந்த கொட்டும் மழையில் கூட இருட்டில் மாஞ்சோலை சென்று உப்பு வாங்கிவந்தனர் ஒரு குழுவினர். அதுவேறு ஒரு வரலாறு.
அந்த திக்கு தெரியாத காட்டில் இரவு தங்கி பூஜைசெய்து விட்டு மறுநாள் கீழே இறங்கினோம்.
கிழேவந்தபோது இரவு மணிமுத்தாற்றிலும், கல்லிடைக்குறிச்சியிலும் நல்ல மழை பொழிந்தது என கூறினார்கள் அப்பகுதி மக்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை நெல்லை மாவட்டத்தில் மழைக்கு பஞ்சமும் இல்லை. மீண்டும் பூஜைசெய்ய அவசியமும் ஏற்பட வில்லை.
மலையில் வாழும் சித்தர்கள், நாங்கள் தொடர்ந்து தியானத்தில் இருக்கிறோம். அடிக்கடி இங்கேவந்து தொந்தரவு செய்து விடாதீர்கள் என தொடர்ந்து மழைபொழிய வைத்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றியது.
இந்த அருவிக்கு சற்று மேலேதான் மாஞ்சோலை, காக்காச்சி மலை, நாலு மூக்கு, குதிரை வெட்டி ஆகிய இடங்கள் உள்ளன. இங்கு தான் சீசன் தோறும் நல்ல மழை பொழிந்துகொண்டிருக்கிறது.
எல்லாம் மலைவாழ் சித்தர்களின் அருள்.
தொடர்ந்து மற்றொரு மலைக்குள் செல்வோம். அந்த மலையில் அருளும் சித்தர்களும் சிறப்பானவர்களே.
இந்த மலையின் பெயர் மகேந்திரகிரி.
மலைமீது ஏறும்போதே மகேந்திரகிரி மலையின் வளத்தைப்பற்றி ஆய்வுசெய்வது நலம் என்று நினைத்தேன். மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது என்பது அதிகமான நபர்களுக்குத் தெரியாது. நெல்லையில் வசிப்பவர்கள்கூட மகேந்திரகிரி, பொதிகைமலை, அத்ரிமலை, தோரணமலை, குற்றாலமலை, சதுரகிரி மலையைப்பற்றி அறியாமல் உள்ளனர். இது வேதனையான விஷயம். ஆனாலும் நம் மலை வளம் பற்றி வெளிநாட்டவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எனவேதான் ஜப்பான் நாட்டுக்காரர்கள், மலையைப் பாதுகாக்க உதவிகள் புரிந்துவருகின்றனர்.
மலைகள் என்றால் பாறைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்ல மூலிகைகளின் நந்தவனமும் இணைந்ததுதான். எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தேகொண்டு காற்றுடன் கலந்து மூலிகை காற்றாகவும், தண்ணீருடன் கலந்து மூலிகை நீராகவும் வெளிவருகிறது. தென்மேற்குப் பருவ மழையின் உச்ச காலம் இந்த மலையின் மேற்குப் பக்கம் மழையாகவும் கிழக்குப் பக்கம் மழைச் சாரலாகவும் விழுகிறது. ஈரக்காற்றுடன் தென்றலாகத் தவழ்ந்து சில நேரங்களில் தமிழகத்தில் பலத்த காற்று மட்டும் வீசும். மழை மேகங்கள் நமது பகுதியில் மேற்கிலிருக்கும் மலை முகடுகளால் தடுக்கப்பட்டு தமிழகப் பகுதிக்கு மழையில்லாமல் செய்துவிடுகின்றன. ஆனாலும் இங்குபெய்யும் மழையை வைத்தே வற்றாத ஜீவநதிகளாகத் தமிழகத்தில் தாமிரபரணி உள்பட பல நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இராமாயணத்தில் இராவணன் சீதையைக் கடத்தி இலங்கையில் சிறை வைக்கிறார். சீதையைத் தேடி அனுமன் புறப்படுகிறார். மகேந்திரகிரி மலையின் மேலிருந்து இலங்கை நோக்கி வான்வழியாகச் சென்றுள்ளார்.
அதற்கான சுவடுகள் மகேந்திரிகிரி மலையில் உள்ளது.
இந்த மகேந்திரகிரி மலையின் பள்ளத்தாக்கு பகுதியில் பலமான சுழற்காற்று வீசுகிறது. இங்குதான் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அமைந்துள்ளது. மகேந்திரகிரி மலை 1,800 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளன. சிற்றருவிகள் ஏராளம். இது அரசாங்கத்தால் பாதுகாக்கப் பட்ட பகுதியானதால் இங்கு யாரும் சென்றுவர அனுமதியில்லை. கடந்த 25 வருடகாலங்களுக்குமுன்பு யாத்ரீகர்கள் சென்றுவர அனுமதி உண்டு. இப்போது முழுவதுமாக அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
ஆரல்வாய்மொழிக்கும் பணகுடிக்கும் இடையே அதிகமான சுழல் காற்று வீசும். இப்பகுதியில் சிவப்பு மண் அதிகமிருப்பதால் அவை சில நேரங்களில் காற்றடிக்கும்போது சாலைகளை மூடிவிடுகின்றன. இந்தச் செம்மண் பகுதியில் கலந்தபனை என்ற ஊருக்கு அருகே சென்னா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பாசனமுறையைக் கண்டு வெளிநாட்டவரே வியந்து போற்றி யிருக்கிறார்கள். "நதியின் வேதனை' என்ற கட்டுரை எழுதுவதற்காக இந்து தமிழ் பத்திரிகை நிருபர் நண்பர் டி.வி. சஞ்சீவிகுமார் அவர்களோடு இந்த ஏரிக்குச் சென்றேன். அதிசயிக்கும்வண்ணம் இங்கு நீர்மேலாண்மை இருந்தது கண்டு பிரமித்து நின்றோம்.
மகேந்திரகிரி மலையில் பலத்த காற்று வீசுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. கன்னியாகுமரிக்கு செல்லும் போது ஆரல்வாய்மொழி அருகே கண்கூடாகக் காணலாம்.
இந்த மகேந்திரகிரி மலையின் சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. இவற்றில் சில அபூர்வ மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
தொழுகண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக்கிழங்கு, மலைநீலி,
நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சி செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப்பூண்டு, பொன்னாவாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகாவில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம்மிக்க அரிய மூலிகைகள் இங்குள்ளன.
மூலிகைகள் அதிகமாக உள்ளது என்றாலே அங்கே சித்தர்கள் வாசம் இருக்கும். அருள் இருக்கும். அவர்களின் சுவாசம் இருக்கும்.
அதனால்தான் இங்கு ஒரு சித்தர் தான் வாழ்ந்த குடிலை இடித்து அணையை கட்ட அரசு முயற்சித்தபோது, அதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால் அந்த கோவிலை அணைக்குள் வைத்து கட்டியுள்ளனர்.
ஆகா, அந்த அற்புத சித்தர் யார்? அந்த கோவிலுக்கு பெயர்தான் என்ன?
(சித்தர்களை தேடும் மலைப்பயணம் தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us