சுமார் 65 வயதுடைய ஒருவர் தன் மனைவியுடன் நாடியில் பலன் கேட்கவந்தார். 

அவர் தன்னைப் பற்றியும், தான் வந்த காரணத்தையும் கூறத் தொடங்கினார். "தனக்கு பல தொழில்கள் இருப்பதாகவும், அதில் நிறைய பணம் சம்பாதித்துள்ள தாகவும். ஆனால், வம்சம் விளங்க ஒரு வாரிசு மட்டும் கிடைக்கவில்லை என்றார்.

Advertisment

வேத, சாஸ்திரம் அறிந்த குருக்கள் ஒருவர் எவ்வளவோ, பிரார்த்தனை, பூஜைகளை செய்தும் வாரிசு கிடைக்கவில்லை.

Advertisment

அதனால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து மகனாக வளர்த்துவாருங்கள் என்றார்.

வேதம், சாஸ்திரம் படித்த அந்தக் குருக்கள் கூறியதைக்கேட்டு நாங்கள், ஒரு மகனைத் தத்தெடுக்க முடிவு செய்தோம். அந்த குருக்கள், உங்கள் சாதியிலேயே ஒரு பையனை ஜாதகம் பார்த்து தத்தெடுக்கலாம் என்று கூறினார். எங்கள் உறவினர் கள், குழந்தைகள், பலரின் ஜாதகங்களை பிரபலமான, மிகப்பெரிய ஜோதிடரிடம் சென்று பலன் பார்த்தோம். அவர் என் மனைவி வழி உறவில், ஒரு பையனின் ஜாதகம் அருமையாக உள்ளது. இவர் பெற்றோரை மதித்து காப்பாற்றுவான். கடவுள் பக்தி உள்ளவன். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பிதுர்க் கடனை முறையாகச் செய்வான். இன்னும் ஏதேதோ கூறி, இந்த ஜாதகனைத் தத்தெடுக்கச் சொன்னார். ஜோதிடர் கூறியபடியே அந்த குருக்களைக் கொண்டு, நிறைய பணம் செலவுசெய்து பூஜை, யாகம், மந்திரங்களைக் கூறி அந்த எட்டு வயதுப் பையனைத் தத்தெடுத்துக் கொண்டோம்.

எங்கள் சொந்த மகனாக ஏற்று, படிக்க வைத்தோம். என் தொழிலிலும் அவனை துனையாக வைத்து கற்றுக் கொடுத்தேன்.  26 வயதில் அவனுக்குத்  திருமணம் செய்துவைத்தேன். திருமணம் முடிந்த இரண்டு வருடங்களில் விதி விளையாடத் தொடங்கியது.  தொழில், நிர்வாகத்தில் பல திருட்டுத்தனங்களைச் செய்து, கொஞ்சம், கொஞ்சமாக ஏமாற்றி வந்துள்ளான். என்னை எதுவும் கேட்காமலேயே, எல்லாவற்றையும் செய்கிறான். இப்போது நாங்கள் மதிப்பிழந்து அனாதைபோல் ஆகிவிட்டோம். தத்தெடுத்த மகனால் எங்கள் வாழ்க்கை தடம் மாறிவிட்டது. எல்லாம் இழந்துவிட்டோம்.  இந்த நிலைக்கு காரணம் அறியவும், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வழி கேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.

Advertisment

தத்தெடுத்த மகனால் தடம் புரண்டுபோன இவர் வாழ்க்கைக்கு காரணம் விதியல்ல. வேதம், சாஸ்திரம், ஜோதிடம் என்று மற்றவர்கள் கூறியதைக்கேட்டு, ஒரு குழந்தைக்காக ஊர் ஊராக அலைந்து பரிகாரம் செய்து ஏராளமான பணத்தை இழந்தான். இறந்தபின்பு தன் ஆத்மா சாந்தியடைய வேண்டும், என்ற பொய்யான கட்டுக் கதைகளை நம்பி எவனோ ஒருவன் பெற்ற பிள்ளையை தன் மகன் என்று தத்தெடுத்து வளர்த்தான். மகனாக வளர்த்தவன் துரோகச் செயலால், இன்று மனம் ஒடிந்த நிலை,  இறந்தபிறகு ஆன்மா சாந்தியடைய நினைத்த இவனுக்கு இப்போதே ஆன்மா சாந்தி இல்லாமல் போய்விட்டது. அடுத்தவர்கள் பேச்சைக்கேட்டு, இவன் சுய அறிவற்று செய்த செயல்தான் காரணம்.

இவன் குழந்தையைத் தத்தெடுக்க ஜோதிடம் பார்த்த ஜோதிடனும் பொய்யான, தவறான பலனைக் கூறிவிட்டான். இந்த குழந்தை "பித்ரு தோஷம்' உள்ளவன்.  இந்த தோஷமுள்ளவர்கள், கவனிப்பாரற்ற நிலையில் விடப்படுவான். பெற்றவர்களே புறக்கணிக்கும் நிலை உண்டாகும். மூன்றாம் மனிதர் ஆதரவில் வாழ வேண்டும். முன்னோர்கள் தேடிய பூர்வீக சொத்துகளை அனுபவிக்க முடியாது. பெற்ற தந்தைக்கு, இவன் சம்பாதித்து சோறு போடமுடியாது போன்ற இன்னும் பலவிதமான பலன்களை பித்ரு தோஷம் தரும்.

இந்த பித்ரு தோஷ பாதிப்பினால், பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு இவனுக்கு தத்து மகனாகி மூன்றாம் மனிதனான இவன் ஆதரவில் வாழ்ந்தான். அவன் பிறந்த வம்ச முன்னோர்கள் சொத்து கிடைக்கவில்லை. உண்மையான பெற்ற தந்தையை கவனிக்கவில்லை. இவன் வேறு ஒருவன் விந்து ரத்தத்தில் பிறந்தவன்.  தத்து மகன் திதி, தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டால், அது இவன் ஆன்மாவை சாந்தியடையச் செய்யாது. அவனைப் பெற்ற தந்தைக்கும், அவன் வம்ச முன்னோர்களுக்கு வேண்டுமென்றால் சேரலாம். 

இவன் மகனை சட்டப்படி தத்து எடுக்கவில்லை, வேத, சாஸ்திரப் படிதான் தத்தெடுத்தான்.  அதனால் அரசு சட்டப்படி இவனுக்கு மகனாக மாட்டான்.  மேலும் தொழில், நிர்வாகம் அனைத்தும் இவன்பெயரிலேயே உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டாம்.  அவன் பெயரில் சில சொத்துகளை வாங்கியுள்ளான். மேலும் பணமும் அவன் பெயரிலுள் ளது, ஆதலால், அவனைப் பொறுப்பு களில் இருந்து விலக்கிவிடச் சொல். 

அந்த சொத்து, பணத்தை இவன் கேட்க வேண்டாம். வீட்டில் இருந்து வெளியேற்றிவிடச் சொல். இனியாவது வேதம், சாஸ்திரம், ஜோதிடம் என நம்பி அலைந்து அவர்கள் கூறுவதைக்கேட்டு, எதையும் செய்யவேண்டாம். சுய அறிவால் அறிந்து, அனுபவத்தால் புரிந்து, செயல்பட்டு வாழச்சொல். அகத்தியன் யான் துணையிருப்பேன் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் அருள் என்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அவர் கூறியபடியே செய்கின்றேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267