யம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மேற்கு வெங்கடாஜலம் சாலையில் இயங்கிவரும்  "அமோகா ஓவர்சீஸ் கன்சல்டன்ட்' நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கார்த்திக் முருகன் அவர்களைச் சந்தித்து இறை பக்தியினால் அவர் பெற்ற அபார சக்தி, அசத்தலான வெற்றிகளை பற்றி கேட்டோம். விரிவாக நம்மிடம் கூறினார்.    

Advertisment

"நான் சிறுவயது முதலே தெய்வ பக்தியில் தீவிரம் காட்டியவன். பூஜையறையில் சாமி கும்பிட துவங்கிவிட்டால் எனக்கு நேரம், காலம், சுற்று சூழ்நிலை எதுவுமே தெரியாது. புராண காலத்தில் முனிவர்கள் கடவுள் நேரில்வந்து வரம் தரவேண்டி யுகயுகமாக நீண்ட நெடிய காலம் தவம் இருப்பார்கள். முதலில் அவர்கள் முகத்தில் தாடி பெரிதாக வளர துவங்கும். பிறகு புற்று அவர்களை சுற்றி வளர்ந்து அவர்களை முழுவதுமாக மூடிவிடும். அப்போதும் விடாமல் தெய்வ துதியை கடும் மழை, புயலை, சூறாவளி காற்றை தாங்கி சொல்லிக்கொண்டே இருந்து கடும் சோதனைகளைச் சந்தித்து கடவுளை நேரில் தரிசித்து வரங்கள் பெறுவதுபோல், நான் தீவிர ஐய்யப்ப சுவாமி, முருகப் பெருமான் பக்தன் என்பதால் இரு தெய்வ தோத்திரங்கள், தமிழ் பாடல்களை மனதிற்குள் மணிக்கணக்கில் பாடி அருள்வேண்டியதால், சிறுவயதில் ஏழ்மையிலும் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தி தெருவிளக்கில் படித்து "முதல் மதிப்பெண்' பெற்று தேர்ச்சிபெற்று கல்வியில் சாதனைகள் புரிந்து பட்டம் பெற்று கலைவாணியின் முழுமையான அருள்பெற்றதால் கடின உழைப்பில் முன்னேறி "மகாலட்சுமி' அருளும் பெற்று இன்று மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கௌரவமான, வசதியான அனைவராலும் மதித்து போற்றப்படும் இனிய இல்லறம் நடத்துவதோடு வெளிநாடுகளில் நம் நாட்டு ஏழை எளிய, நடுத்தர, வசதி படைத்த மாணவ- மாணவிகள், எம்.பி.பி.எஸ், இன்ஜினியரிங் மற்றும் அனைத்து உயர் படிப்புகளும் படிக்கவைத்து, அதுவும் குறைவான நியாயமான செலவில் படித்து டாக்டர், என்ஜினியர் மற்ற துறை வல்லுநர்களாகி லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் "அமோகா ஓவர்சீஸ் எஜூகேஷனல் கன்சல்டன்ட்' நிறுவனத்தை பலரும் பாராட்டும் வகையில் கடந்த பதினெட்டு வருடங்களாக நடத்தி வருகிறேன்.

இன்றும் எனக்குள் இருக்கும் தீவிர தெய்வபக்தியே இதற்கு மூலகாரணம் என்று உறுதியாகக் கூறுவேன். 

ஒவ்வொரு வருடமும், ஐய்யப்பனுக்கு விரதமிருந்து மாலை போட்டு சபரிமலை சென்று ஐய்யப்ப சாமியை வேண்டி பிரார்த்தனை செய்துவருவேன்.

Advertisment

பழநி, திருச்செந்தூர், மருதமலை, சென்னை வடபழனி முருகன் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனியாகவும், குடும்பத்துடனும் முருகப் பெருமான் திருக்கோவில்கள் பலவற்றை தேடிப்போய் மனமுருக சாமி கும்பிடவும் நான் தவறுவதில்லை.

ஐயப்பன், முருகன் வேண்டுதல்களில் எனது நலம், என் குடும்ப நலனை விட வெளிநாடுகளில் உள்ள தரமான பல்கலைக்கழகங்களில் நல்ல தரமான உணவு, சிறந்த பாதுகாப்பான எங்கும் இயற்கையான, பசுமையான சுற்றுசூழல் நிறைந்த பாதுகாப்பான வசதியுடன் மருத்துவ பொறியியல், எம்.பி.ஏ போன்ற உயர் கல்வி படிப்புகளில் நான் உடன் சென்று சேர்த்துவிட்டு திரும்பும்போது எனது மாணவ- மாணவிகளை நன்கு படித்து தேர்ச்சிபெற்று நிறைய சம்பாதித்து அவர்கள் பெற்றோர்களுக்கு, குடும்பத்தினருக்கு மனநிறைவு, சந்தோஷம், பெருமை தரவேண்டும் என்றுதான் மனமுருக பிரார்த்தனை செய்வேன். 

அமோகாமூலம் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களிலும் மாணவ- மாணவிகளை படிக்க வைத்து வாழ்வில் அவர்களின் லட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றியை அளித்துவருகிறேன்.

மாணவ- மாணவிகள் படிக்க விரும்பும் அயல்நாட்டுக் கல்வியை பெற்றுத்தந்தும், பாஸ்போர்ட், விசா, கல்விக் கடன் ஆகிய அடிப்படை தேவைகளை பெற்றுத்தந்தும் "நான் டாக்டர் படிப்புதான் படிப்பேன்' என்பதில் மிக உறுதியாக இருக்கும் மாணவ- மாணவிகளுக்கு அயல்நாட்டில் படிக்க அத்தனை உதவிகளையும் செய்து தந்து அமோக வெற்றியைப் பெற்று வர ஆண்டவன் அருள், எனது முறையான நேர்மையான, கடும் உழைப்பும் காரணமாக இருக்கிறது.''

அமோகா மூலம் அயல்நாடுகளில் படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் தொடர்பு கொள்ள வேண் டிய கைபேசி எண்கள்: 97516 2255597516  44555.