சிம்மாசன யோகம்
ஒரு மனிதரின் ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில், 8-ஆம் பாவத்தில், 2-ஆம் பாவத்தில், 3-ஆம் பாவத்தில், 12-ஆம் பாவத்தில் அனைத்து கிரகங்களும் இருந் தால், சிம்மாசன யோகம் உண்டாகும். அதனால், ஜாதகர் அரசரைப்போல வாழ்வார்.6-ஆம் பாவத்தில் செவ்வாய், ராகு, 8-ஆம் பாவத்தில் சுக்கிரன், 2-ஆம் பாவத்தில் சூரியன், புதன், சனி, 12-ஆம் பாவத்தில் கேது, குரு இருந்தால், அது ஒரு சிம்மாசன யோக ஜாதகம்.

த்வஜ யோகம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் பாவ கிரகமும், லக்னத்தில் சுப கிரகங்களும் இருந்தால், அந்த மனிதருக்கு ஒரு பெரிய தலைவராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை த்வஜ யோகம் என்று கூறுகிறார்கள்.
மேஷ லக்னத்தில் சந்திரன், குரு, செவ்வாய், 8-ஆம் பாவத்தில், விருச்சிகத்தில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் இருந்தால், அரசரைப் போல வாழ்வார்கள்.
ஹன்ஸ யோகம்
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில், 9-ஆம் பாவத்தில், 7-ஆம் பாவத்தில், லக்னத்தில் கிரகங்கள் இருந்தால், ஜாதகர் தன் குலத்தைக் காப்பாற்றக்கூடிய பெரிய மனிதராக இருப்பார். இதை ஹன்ஸ யோகம் என்று கூறுவார்கள்.லக்னத்தில் சந்திரன், ராகு, செவ்வாய், 5-ஆம் பாவத்தில் சூரியன், புதன், 7-ஆம் பாவத்தில் சனி, கேது, 9-ஆம் பாவத்தில் சுக்கிரன், குரு இருந்தால், ஜாதகர் தன் குலத்தைக் காப்பாற்றும் முக்கிய மனிதராக இருப்பார்.
காரிகா யோகம்
ஒரு ஜாதகத்தில் சூரியனும் 7 கிரகங்களும் 10-ஆம் பாவத்தில், 11-ஆம் பாவத்தில் இருந்தால், லக்னத்தில், 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் ஏழையாக பிறந் திருந்தாலும், மன்னரைப்போல வாழ்வார். இதை காரிகா யோகம் என்று கூறுவார்கள்.லக்னத்தில் சந்திரன், சூரியன், புதன், ராகு, செவ்வாய், 7-ஆம் பாவத்தில் சனி, சுக்கிரன், குரு, கேது இருந்தால், ஜாதகர் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும், அரச வாழ்க்கையை வாழ்வார்.
ஏகாவலி யோகம்
இதற்கு இன்னொரு பெயர் கிரகமாலா யோகம். லக்னத்திலிருந்து 7-ஆம் பாவத்திற்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால், ஜாதகர் அரசரைப் போல வாழ்வார்.
லக்னத்தில் சந்தி ரன், ராகு, 2-ஆம் பாவத்தில் செவ்வாய், 3-ஆம் பாவத்தில் புதன், 4-ஆம் பாவத்தில் சூரியன், 5-ஆம் பாவத்தில் குரு, 6-ஆம் பாவத்தில் சுக்கிரன், 7-ஆம் பாவத்தில் சனி, கேது இருந்தால், அதற்கு ஏகாவ- யோகம் என்று அர்த்தம். ஜாதகர் மகாராஜாவைப்போல வாழ்வார்.
செல்: 98401 11534
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us