Advertisment

லாபத்தை அள்ளித்தரும் 27 யோகங்கள்!  -கடுக்கரை மா. ஆறுமுக பெருமாள்

27yogam

 

பொதுவாக ஜோதிடத்தில் பலவகையான யோகங்கள் இருந்தாலும், அவற்றுள் சில யோகங்கள் பொது மக்களிடம் வழக்கத்தில் உள்ளன. 

சில யோகங்களை ஜோதிடம் பயின்ற பல வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர். 

Advertisment

இன்னும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. யோகங்கüல் ஒன்றான அனந்தாதி யோகத்தினை தெரிந்துகொள்வது எவ்வாறென காண்போம்.

கிழமை அல்லது நட்சத்திரங்கள் மூலமே அறிய இயலும் இந்த யோகமானது ஒவ்வொரு கிழமையிலும் வரும் நட்சத்திர காலத்தை கொண்டு கணக்கிடப்படுவதாகும். இவ்வாறு கணக்கிடும்போது அதற்கென்றுள்ள சில விதிகளை நாம் அறிந்திருத்தல் வேண்டும். இந்த முறை பழம் பெரும் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

ஒரு குறிப்பிட்ட தினத்தன்று செவ்வாய்க்கிழமை பூச நட்சத்திரம் என்றால் இந்த அனந்தாதி யோகம் என்ன கூறும்? அதற்கான பலன் எப்படியிருக்கும் என கண்டுகொள்ளலாம். இந்த யோகங்களை கொண்டு கணக்கிடும்போது ஒவ்வொரு கிழமைக்கும் வரும் நட்சத்திர யோகத்தை எந்த நட்ச

 

பொதுவாக ஜோதிடத்தில் பலவகையான யோகங்கள் இருந்தாலும், அவற்றுள் சில யோகங்கள் பொது மக்களிடம் வழக்கத்தில் உள்ளன. 

சில யோகங்களை ஜோதிடம் பயின்ற பல வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர். 

Advertisment

இன்னும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. யோகங்கüல் ஒன்றான அனந்தாதி யோகத்தினை தெரிந்துகொள்வது எவ்வாறென காண்போம்.

கிழமை அல்லது நட்சத்திரங்கள் மூலமே அறிய இயலும் இந்த யோகமானது ஒவ்வொரு கிழமையிலும் வரும் நட்சத்திர காலத்தை கொண்டு கணக்கிடப்படுவதாகும். இவ்வாறு கணக்கிடும்போது அதற்கென்றுள்ள சில விதிகளை நாம் அறிந்திருத்தல் வேண்டும். இந்த முறை பழம் பெரும் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

ஒரு குறிப்பிட்ட தினத்தன்று செவ்வாய்க்கிழமை பூச நட்சத்திரம் என்றால் இந்த அனந்தாதி யோகம் என்ன கூறும்? அதற்கான பலன் எப்படியிருக்கும் என கண்டுகொள்ளலாம். இந்த யோகங்களை கொண்டு கணக்கிடும்போது ஒவ்வொரு கிழமைக்கும் வரும் நட்சத்திர யோகத்தை எந்த நட்சத்திரத்தை முதலாக வைத்து கணக்கிட வேண்டுமென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை அஸ்வினி முதலாவதாகவும், திங்கள் மிருகசீரிடம், முதலாவதாகவும், செவ்வாய்க்கிழமை ஆயில்யம் முதலாவதாகவும், புதன்கிழமைக்கு ஹஸ்தம் முதலாவதாகவும், வியாழக்கிழமை உத்திராடம் முதலாவதாகவும் இவ்வாறு வெள்ளி, சனிக்கிழமைக்கு உரிய பாவத்தை அறிந்து பலனை அறியலாம்.

ஜனன ஜாதகத்தின்மூலம் எப்படி அறிவது?

ஒருவரின் ஜாதகத்தில் இந்த அனந்தாதி யோகப் பலன் எவ்வாறு அமைந்துள்ளது என காண்போம். 

ஒருவர் சனிக் கிழமை பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் இந்த பூச நட்சத்திரம் எத்தனையாவது யோகப் பலனையுடையது என பார்க்கவேண்டும். சனிக்கிழமை சதயம் முதல் எண்ணி காணுதல் வேண்டும். 

அதனால் சனிக் கிழமை பிறந்த பூச நட்சத்திரம் அனந்தாதி யோகத்தில் 12-ஆவது யோகத்தை உடையதாகின்றது. எவ்வாறெனில் சதயம் முதலாக எண்ணினால் பூசம் 12-ஆவது நட்சத் திரமாகிறது. 

இந்த பன்னிரண் டாவது யோகம் மானச யோகம். இதன் பலன் சன்மானங்கள் பரிசுகள் பெற்று, சிறந்த பாக்கிய சாலிகளாகவும் வாழலாமாம்.

யோகங்களின் பெயரும் பலன்களும்

1. அனந்த யோகம்- அது பணவரவையும் தன லாபத்தையும் அள்ளித் தருவது.

2. கால தண்ட யோகம்- காரிய விக்னத் தையும், இடையூறுகளையும் தருவது.

3. தர்ம யோகம்- சித்தியையும் பெருமையையும் தரும்.

4. பிரசாபதி யோகம்- இஷ்ட சித்தி எதை எண்ணினாலும் எண்ணம் ஈடேறுமாம்.

5. சௌமியா யோகம்- தனவரவை பெருக்கித் தரும். செல்வம் சுலபமாகும்.

6. துர்வாஞ்ச யோகம்- அதிக பலன் தராது. தொல்லை மிகும். எண்ணம் ஈடேறாது.

7. ஸ்ரீ வத்ச யோகம்- சகல சௌபாக்கியம் லாபத்தைத் தரும்.

8. வச்ர யோகம்- இது கலகத்துக்கு துணைபோகும். வீண் வம்பை தரும்.

9. முத்தக யோகம்- இதுவும் நன்மை தராது.

10. சந்திர யோகம்- சுப நிகழ்ச்சிகளையும் ஆறுதலான செய்திகளையும் தரும்.

11. மித்திர யோகம்- பூமி, அசையா சொத்தை பெற்றுத்தரும்.

12. மானச யோகம்- வெகு மதியை பெற்றுத் தரும்.

13. பத்ம யோகம்- இது மித்ர லாபம் தருவது. 

14. வம்ப யோகம்- அறுசுவை தரும் போஜன யோகம்.

15. உற்பாத யோகம்- துக்கம், துயரம் தரும்.

16. மிருத்யூ யோகம்- இதுவும் சலனத்தைத் தரும்.

17. காரண யோகம்- இது மக்கள் செல்வாக்கை தரும்.

18. சித்த யோகம்- சகலவிதமான சித்தியும் தருவது.

19. சுப யோகம்- இது சுபகாரியங்களுக்கு துணைவரும் அற்புத யோகம்.

20. அமுத யோகம்- லாபத்தை அள்ளி, அள்ளித் தரும்.

21. முசல யோகம்- நற்பலனைத் தர தயங்கும்.

22. சுதா யோகம்- இதுவும் அசுபத்திற்கே துணை போகும். 

23. மாதங்க யோகம்- கஷ்டத்தைத் தர முயலும்.

24. ராட்சக யோகம்- காரியத் தடைகளைத் தரும்.

25. கர யோகம்- இது அதிக பலனை தடையின்றி தருவது.

26. திர யோகம்- இது தீர்க்க சித்தி தரும்.

27. வர்த்தமான யோகம்- அதிகமான லாபத்தை தந்துகொண்டே இருக்குமாம். 

ஒவ்வொருவரும் அவர்களின் யோக பாவத்தை நடக்கும் நட்சத்திர காலம் கிழமையை வைத்தே தீர்மானித்து பலன் அறியலாம்.

அதுமட்டுமல்ல சந்திரனின் சஞ்சாரத்தை தழுவி உலக லாபங்களை அறிந்துகொள்ள இந்த அனந்தாதி யோகப் பலன்களைத் தங்களது நட்சத்திரங்களிலிருந்து எண்ணிக் காண்பதும் உண்டு. எவ்வாறெனில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்று திருவாதிரை நட்சத்திரமானால், திருவாதிரை அஸ்வினிக்கு ஐந்தாவது என்று கணக்கிட்டு ஐந்தாவது யோகம் சௌமியம். எனவே தனலாபம் வருமென்று அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.

இன்னும் சில யோகங்களின் பெயர்கள்

1. விஷ்கம்பம், 2. பிரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்கியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9. சூலம், 10. கண்டம், 11. விருத்தி, 12. துருவம், 13, வியாகதம், 14. அரிஷணம், 15. வச்சிரம், 16. சித்தி, 17. வியதீபாதம், 18. வரியான், 19. பரீகம், 20. சிவம், 21. சித்தம், 22. சத்தியம், 23. சுபம், 24. சுப்பிரம். 25. பிரமியம், 26. மகேந்திரம், 27. வைதிருதி.

இதுமட்டுமல்ல; பெண்கள் புஷ்பவதியான தினங்களிலும் இவ்விதமே மாதம், கிழமை, திதி நட்சத்திரங்களையும் பார்க்கும்போது மேற்குறிப்பட்ட யோகப் பலன்களையும் பார்த்து களத்திர சுகஸ்தானங்களையும் மற்றும் ஆயுள் ஸ்தானம் அறிந்து பயன்பெறலாம்.

செல்: 93801 73464

bala160825
இதையும் படியுங்கள்
Subscribe