துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு
சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் திருப்பூரில் 1957-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சி.கே.பொன்னுசாமி, கே.ஜானகி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தூத்துக்குட
துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு
சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் திருப்பூரில் 1957-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சி.கே.பொன்னுசாமி, கே.ஜானகி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகவிய-லில் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பின்போது இவர், டேபிள் டென்னிசில் சாம்பியனாகவும்,ஓட்டப்பந்தய வீரராகவும் இருந் துள்ளார்.
தனது 17 வயதி-லிருந்தே ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம் முதலி-ய அமைப்புகளுடன் தொடர்புடையவராக இருந்துள்ளார். 1974-ஆம் ஆண்டு பாஜகவின் முன்னோடிஅமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்தார்.
இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோயம்புத்தூரி-லிருந்து இரண்டு முறை இந்திய மக்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதாகட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலி-ருந்து சென்னை வரை 19,000 கி.மீ. தூரத்துக்கு ரத யாத்திரை மேற்கொண்டார்.
நதிகள் இணைப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டம், போதை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
2020–இல், இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார். இது சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை
மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998, 1999 பொதுத் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தல்களில் ராதாகிருஷ்ணன் 1998-இல் 150,000 வாக்குகள் முன்னணியிலும், 1999 தேர்தலி-ல் 55,000 வாக்குகள் முன்னணியிலும் வெற்றி பெற்றார்.
2004-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு திமுக வெளியேறிய பிறகு, புதிய கூட்டணி அமைப்பதில் பணியாற்றிய மாநிலத்தலைவர்களில் இவரும் ஒருவர். 2004 தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பணியாற்றினார்.
2014-இல், இவர் கோயம்புத்தூர் தொகுதியி-லிருந்து மக்களவைக்கு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல், இவர் 3,89,000 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் கோயம்புத்தூரி-லிருந்து 2019 தேர்த-லில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
பதவி ஏற்பு
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், நாட்டின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். வரும் 2030-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
தமிழகத்தில் இருந்து 3 பேர் புதிதாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனையும்சேர்த்து இதுவரை 15 பேர் துணை குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். கடந்த 1952 முதல் 1962 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், கடந்த 1984 முதல் 1987 வரை வெங்கட்ராமன் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இப்பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ராதாகிருஷ்ணன் வகித்த பதவிகள்:
1998 - 12-வது மக்களவை உறுப்பினர்
1998 - 99 உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம். உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்.
1999 13-வது மக்களவை உறுப்பினர் (இரண்டாவது முறை)
1999 - 2000 உறுப்பினர், வணிகக் குழு உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்.
2000 - உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்.
2023 - 2024 ஜார்கண்ட் மாநில ஆளுநர்.
2024 - 2025 மராட்டிய மாநில ஆளுநர்.