Advertisment

கள்ள (சாராய) குறிச்சி-வீட்டுக்கு வீடு ஒப்பாரி!

sss

kallasaraya kurichi

கள்ளக்குறிச்சி நகரில் 57 உயிர்களை பலிவாங்கியுள்ளது விஷச்சாராயம். முதல் நாள் மூன்று மரணத்தோடு தொடங்கியது, அடுத்தடுத்த நாட்களில் அது அதிகரித்தபடியே இருக்கிறது. இன்னும் 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி நகரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், நகர காவல்நிலையம் அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு அருகிலுள்ளது கருணாபுரம். ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதி. இங்கு நாம் சென்றபோது, தினம், தினம் இறப்பு நடப்பதால் காவல்துறையினரை களமிறக்கி நகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அந்தப் பகுதி முழுவதும் யூடியூபர்கள் நிறைந்திருந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தைரியம் தருவதற்காக அரசின் சார்பில் மனநல மருத்துவ முகாம் அமைத்து கவுன்சிலிங் தந்துகொண்டிருந்தனர்.

சாராய வியாபாரி கன்னுக்குட்டியிடம் சுரேஷ், பிரேம் ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்து இறந்ததில் தொடங்கியது இந்த விவகாரம்.

சாராயச்சாவு என்ற செய்தி டி.வி.களில் ஒளிபரப்பாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தை கலெக்டர், எஸ்.பி சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேட்டி தந்தனர். சாவு வீட்டுக்கு வந்தவர்கள் குடித்த சாராயம் அடுத்த ஒருமணி நேரத்தில் வேலையை காட்டத்தொடங்கியது. முதல்நாள் 12 பேராக இருந்தது, மறுநாள் 32, அதற்கடுத்த நாள் 45, இப்போது 57 பேராக உயிரிழப்புகள் வந்துநிற்கிறது.

கள்ளச்சாராயத்தில் இறந்தவருக்கு இடுகாட்டில் இறுதிக் காரியம் செய்துகொண்டிருந்த வளர்மதி நம்மிடம், “""எங்கம்மா தனக்கோட்டி பூ வியாபாரம் செய்யறவங்க, சாவுக்கு வந்தவர்கள் சாராயம் வாங்கிவர அதைக் குடிச்சு எங்கம்மா இறந

kallasaraya kurichi

கள்ளக்குறிச்சி நகரில் 57 உயிர்களை பலிவாங்கியுள்ளது விஷச்சாராயம். முதல் நாள் மூன்று மரணத்தோடு தொடங்கியது, அடுத்தடுத்த நாட்களில் அது அதிகரித்தபடியே இருக்கிறது. இன்னும் 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி நகரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், நகர காவல்நிலையம் அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு அருகிலுள்ளது கருணாபுரம். ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதி. இங்கு நாம் சென்றபோது, தினம், தினம் இறப்பு நடப்பதால் காவல்துறையினரை களமிறக்கி நகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அந்தப் பகுதி முழுவதும் யூடியூபர்கள் நிறைந்திருந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தைரியம் தருவதற்காக அரசின் சார்பில் மனநல மருத்துவ முகாம் அமைத்து கவுன்சிலிங் தந்துகொண்டிருந்தனர்.

சாராய வியாபாரி கன்னுக்குட்டியிடம் சுரேஷ், பிரேம் ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்து இறந்ததில் தொடங்கியது இந்த விவகாரம்.

சாராயச்சாவு என்ற செய்தி டி.வி.களில் ஒளிபரப்பாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தை கலெக்டர், எஸ்.பி சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேட்டி தந்தனர். சாவு வீட்டுக்கு வந்தவர்கள் குடித்த சாராயம் அடுத்த ஒருமணி நேரத்தில் வேலையை காட்டத்தொடங்கியது. முதல்நாள் 12 பேராக இருந்தது, மறுநாள் 32, அதற்கடுத்த நாள் 45, இப்போது 57 பேராக உயிரிழப்புகள் வந்துநிற்கிறது.

கள்ளச்சாராயத்தில் இறந்தவருக்கு இடுகாட்டில் இறுதிக் காரியம் செய்துகொண்டிருந்த வளர்மதி நம்மிடம், “""எங்கம்மா தனக்கோட்டி பூ வியாபாரம் செய்யறவங்க, சாவுக்கு வந்தவர்கள் சாராயம் வாங்கிவர அதைக் குடிச்சு எங்கம்மா இறந்துட்டாங்க''’என்றார்.

கருணாபுரம் காலனியில் விஷச்சாராயத்துக்கு தனது மகள் வளர்மதி, மருமகன் சுரேஷை பலிகொடுத்த முனியம்மா நம்மிடம், ""என் வீட்டுக்கு பக்கத்தில்தான் சாராய வியாபாரி கன்னுக்குட்டி வீடு. அவனோட தம்பி தாமோதரன் இரண்டு பேருமே 30, 35 வருஷமா சாராயம் விக்கிறாங்க. இதோ இந்த தெருவுல, வீட்ல வச்சிதான் விற்பாங்க. எல்லோரும் இங்கவந்து வாங்கிக் குடிப்பாங்க, யாரும் இதுவரை அவுங்களைக் கேட்டதில்லை. கொரோனா காலத்தில் நல்லா சம்பாதிச்சாங்க. அவுங்க புள்ளைங்கள நல்லா படிக்கவச்சாங்க, அவுங்க வித்த சாராயத்த குடிச்சிட்டு என் பொண்ணும், மாப்ளயும் இறந்துபோனாங்க, என் பேரப்புள்ளைங்க அநாதையா நிக்கிறாங்க. அந்த பிள்ளைங்க எங்கபோனாங்கன்னு தெரியல, அவுங்க வீட்ல ஸ்டாலின் படம் ஒட்டியிருந்தாலும், அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டவர்தான்''’’என அழுதார்.

மஞ்சுளா, ""என் தங்கை கணவர் சுப்பிரமணி, அவரோட சம்பந்தி பாலு இருவரும் மார்க்கெட்ல மூட்டை தூக்கறவங்க. சாராயம் குடிச்சிட்டு படுத்தவங்க, வயிறு எரியுதுன்னு ஆஸ்பிட்டல் போனவங்க அடுத்தடுத்த நாள்ள இறந்துட்டாங்க. தெருவில் ஊருக்கு நடுவில் வச்சி வித்துக்கிட்டு இருந்துருக்காங்க, போலீஸýக்கு தெரிந்தும் இதை தடுக்கக் காணோம்''’என்றார்.

கல்வராயன் மலையிலிருந்து காய்ச்சப்படும் சாராயம் விற்பனைக்கு இப்போதும் வந்தாலும், கடந்த காலங்களைப்போல் இல்லாமல் ஓரளவு அங்கு காய்ச்சுவது குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரியிலிருந்து மெத்தனால் வாங்கிவந்து அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யத்துவங்கினர். காய்ச்சும் சாராயம் அதீதமாக குடித்தால் மட்டுமே உயிர்ப் பலியாகும். மெத்தனால் சாராயம் அப்படியல்ல, அதில் தண்ணீர் சரியான அளவில் கலக்கவில்லை என்றால் அது நேரடியாக நுரையீரலை பாதிக்கும், சில நிமிடங்களில் உயிரை கொல்லும். கடந்த சில ஆண்டுகளாக இந்த மெத்தனால் சரக்கு தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சக்கைப்போடு போட்டுள்ளது. சரக்கை வெளியிலிருந்து கொண்டுவருவது, உள்ளூர் போலீஸ், கலால் போலிஸýக்கு கப்பம் கட்டும் வேலைகளை செய்துவந்தது கன்னுக்குட்டியின் அக்கா மகன் மாயா என்கிற மாதவன், செல்வம் இருவரும்தான். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை’’ என்றார்கள்.

இந்த விஷச்சாராயத்தால் குடும்ப தலைவரை இழந்த குடும்பங்கள் கண்ணீரோடு இதிலிருந்து கடந்துசெல்ல முயல்கின்றனர். ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. போன்றவை அரசியல் செய்யத்துவங்கியுள்ளன. "கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் சாராய விற்பனையை தடுக்கமுடியவில்லை என ஓய்வுபெற 8 மாதங்களே இருந்த நிலையில் வேதனையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றார்' என பா.ஜ.க. மாநில தலைவர் ட்வீட் செய்தது பரபரப்பானது. இதற்கு மறுப்பு தெரிவித்து, “"என் மகள், மருமகள் பிரசவத்துக்கு நாங்கள் அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக வி.ஆர்.எஸ். தந்தேன். அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'’என அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்டு எச்சரித்தார்.

விஷச்சாராய சாவுகள் நடந்ததும் தமிழ்நாடு முழுவதும் அவசர அவசரமாக சாராயம் விற்பவர்கள், காய்ச்சியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது, வடதமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராய வியாபாரிகள் கைதுசெய்வது தொடர்ந்த பின்பும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஏ.டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால், எஸ்.பி. செந்தில்குமார் உட்பட மூவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "அரசுத்துறையில் ஒருவரை ஒரு இடத்தில் பணியமர்த்தினால் அங்கு மூன்று ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்பது விதி. காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்கிற கலால் பிரிவில் ஓராண்டுக்கு ஒருமுறை இடமாறுதல் வழங்குகின்றனர். அதற்கு காரணம் கலால் பிரிவு பொன் முட்டையிடும் வாத்து போன்றது. அதனால் அங்கு வர கடும் போட்டி நிலவுவதால் ஓராண்டுக்கு ஒருமுறை இடமாறுதல் செய்கின்றனர். அதிலுள்ள ஒவ்வொருவரும் ஏரியாவைப்பொறுத்து ஓராண்டில் 10 முதல் 15 லட்சம் வரை சம்பாதித்துவிடுகிறார்கள். இதெல்லாம் ஏ.டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வாலுக்கு தெரிந்தும் சரிப்படுத்தவில்லை. அதேபோல் செயல்படாத கம்பெனிகள் பெயரில் மெத்தனால் வாங்கி விற்கப்படுவதையும் தடுக்கவில்லை. அது வருவாய்த்துறை வேலை என தட்டிக்கழித்தனர்.

டாஸ்மாக் கடைகள் உருவாகி அரசாங்கமே மது விற்கத் தொடங்கியபின் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த ஆட்சியாளர்கள் கள்ளச்சாராய விற்பனையை பெருமளவில் தடுத்தனர். பூரண மதுவிலக்கு வேண்டும் என சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ச்சியாக போராடியது, நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றால் நெடுஞ்சாலையோ ஓரக்கடைகளை மூடியது, கடைகளை குறைத்தது, கடைகளின் நேரத்தை குறைத்தது, மதுவின் விலையை அதிகரித்தது. அதோடு கொரோனா கால லாக்டவுனால் மீண்டும் பழைய சாராய வியாபாரிகளை ஊரல் போடவைத்து சாராயம் காய்ச்ச வைத்ததால் சாராய விற்பனை அதிகரித்தது.

கடைக்கு சென்று ஒரு குவாட்டர் வாங்க வேண்டும் என்றால் குவாட்டர் 140, கடைக்காரருக்கு 10 என 150 ரூபாய், அதற்கு கப்பு, வாட்டர், சைட்டிஷ் வாங்க 50 ரூபாய் என 200 ரூபாய் தேவைப்படுகிறது. இதுவே சாராயம் என்றால் ஒரு பாக்கெட் 50 ரூபாய், சைடிஸ்க்கு 50 என 100 ரூபாயில் முடிந்துவிடுகிறது. இதனால் எளிய குடிமகன்கள் பாக்கெட் சாராயத்தை விரும்புகிறார்கள். அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான் மாதாமாதம் மாமூல் தரப்படுகிறது. வருமானம் அதிகம் வந்தால் போலீஸýம் சாராயத்துக்கு மறைமுகமாக ஆதரவு தந்தனர். அதனால்தான் நீதிமன்றம், காவல்நிலையத்தின் சுற்றுச்சுவருக்கு அருகிலேயே வைத்து கன்னுக்குட்டி கும்பலால் விற்க முடிந்தது'' என்றார்கள்.

விசாரணையைத் துவங்கிய ஆணையர்.

விஷச்சாராய சாவுகளை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஜூன் 21ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவர்கள், சாராயம் விற்பனையான இடம், இறந்தவர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். நீதிமன்றம் மற்றும் காவல்நிலையத்துக்கு மிக அருகில், அதுவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சாராய வியாபாரிகள் கைது

சாராய வியாபாரியான கன்னுக்குட்டிக்கு சங்கராபுரம் சேஷசமுத்திரம் சின்னதுரை சரக்கு சப்ளை செய்துள்ளார். சின்னதுரைக்கு மொத்த வியாபாரியான புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த மாதேஷ் சப்ளை செய்துள்ளார். ஆந்திராவிலிருந்து மெத்தனாலை சென்னைக்கு கொண்டுவந்து அங்கிருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரி மூலமாக கொண்டுவந்துள்ளனர். கெட்டுப்போன மெத்தனாலை மாதேஷ், சின்னதுரை மூலமாக விற்பனை செய்துள்ளார். அதனை கன்னுக்குட்டி, மாதவச்சேரி ராமர், விரியூர் ஜோசப்ராஜா வாங்கி விற்பனை செய்துள்ளனர். அதனை குடித்தவர்களே இறந்துள்ளார் என்கிறது சி.பி.சி.ஐ.டி. கள்ளக்குறிச்சி போலீஸôர் கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரனை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. கச்சிராப்பாளையம் போலீஸôர், ஜோசப்ராஜா, ராமர், சின்னதுரையை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மாதேஷ், முத்து, விருத்தாசலத்தில் செராமிக் கம்பெனி நடத்தும் ஜோதி, கேசவனை விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.

nkn260624
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe