Advertisment

குஜராத்திலிருந்து தமிழகத்திற்கு ஓடிவரும் கொரோனா நோயாளிகள்! -திராவிட மருத்துவக் கட்டமைப்பு

g

ஐ.பி.எல்.லில் கடைசிக்கட்ட ஓவர்களில் ஹிட் பிளேயர்கள் வெளுத்தெடுப்பதுபோல இந்தியாவை அடித்தாடிக்கொண்டிருக்கிறது கொரோனா. எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு கொரோனா பாதிப்பில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

Advertisment

g

ஒருபக்கம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, இன்னொரு பக்கம் கொரோனா வைரஸைக் கட்டுப் படுத்தும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு, தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் பற்றாக்குறை. உலகநாடுகள் இந்த இக்கட்டு களிலிருந்து மீள உதவிக்கரங்கள் நீட்ட முன்வந்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால் பல மாநிலங்களில் கொரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் இடமே இல்லையெனும் மிக மோசமான அவலம். இதற்கு எந்த நாடு உதவ முடியும்?

இந்தியப் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், நோயாளிகளைப் படுக்க வைப்பதற்கு இடமின்றி, மருத்துவமனை வராண்டாவிலும், மருத்துவமனைக்கு வெளியிலும் கொரோனா நோயாளி களைப் படுக்கவைத்த அவலம் நிகழ்ந்தது. அகமதாபாத் போன்ற நகரங்களில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசையி

ஐ.பி.எல்.லில் கடைசிக்கட்ட ஓவர்களில் ஹிட் பிளேயர்கள் வெளுத்தெடுப்பதுபோல இந்தியாவை அடித்தாடிக்கொண்டிருக்கிறது கொரோனா. எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு கொரோனா பாதிப்பில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

Advertisment

g

ஒருபக்கம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, இன்னொரு பக்கம் கொரோனா வைரஸைக் கட்டுப் படுத்தும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு, தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் பற்றாக்குறை. உலகநாடுகள் இந்த இக்கட்டு களிலிருந்து மீள உதவிக்கரங்கள் நீட்ட முன்வந்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால் பல மாநிலங்களில் கொரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் இடமே இல்லையெனும் மிக மோசமான அவலம். இதற்கு எந்த நாடு உதவ முடியும்?

இந்தியப் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், நோயாளிகளைப் படுக்க வைப்பதற்கு இடமின்றி, மருத்துவமனை வராண்டாவிலும், மருத்துவமனைக்கு வெளியிலும் கொரோனா நோயாளி களைப் படுக்கவைத்த அவலம் நிகழ்ந்தது. அகமதாபாத் போன்ற நகரங்களில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசையில் நிற்கும் அவலமும் நடந்தது.

Advertisment

இது குஜராத்தில் மட்டும் நடக்கவில்லை... உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிக முள்ள மாநிலங்களில் எல்லாம் நடந்தது. அதேபோல் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பல மாநிலங்களில், நோயாளிகளின் உறவினர்கள் பரிதவித்ததையும், நீண்ட வரிசைகளில் காத்திருந்ததையும் இந்தியா கண்ணீர்வழியும் விழிகளுடன் கண்டது.

g

ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்தும் படுக்கை வசதியில் லாததால் மருத்துவமனையை ஒட்டிய மரத்தடியில், ப்ளாட் பாரத்தில், ஆக்ஸிஜன் சிலிண்ட ருடன் சிகிச்சை மேற்கொள்ளும் காட்சிகள் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதெல்லாம் நடந்துகொண்டிருக் கும்போதே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “"உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸி ஜன் தட்டுப்பாடு என தவறான தகவலைப் பரப்பினால் அவர் களது சொத்து பறிமுதல் செய்யப் படுவதோடு, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் படுவர்''’என நேரடியாகவே மிரட்டல் விடுத்தார்.

இதே உத்தரப்பிரதேசத்தில் தான் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நூற்றுக்கணக் கான குழந்தைகள் இறந்தனர். தன் சொந்தக்காசில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கித் தந்ததுடன், உண்மையைப் பேசியதற்காக மருத்துவர் கஃபீல்கான், மாதக் கணக்கில் சிறையிலடைக்கப்பட்டு வழக்குமேல் வழக்கைச் சந்திக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

gg

தொட்டதற்கெல்லாம் குறளின் பெருமை பேசிய பா.ஜ.க. எம்.பி. தருண் விஜயை தமிழகத் துக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். சமீபத்தில் தன் உறவினர் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரும், ப்ளாஸ்மாவும் கிடைக்காமல் அவதிப்பட்டதை ட்விட்டரில் குறிப்பிட்டு, "நாம் எதை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறோம்' எனப் புலம்பி யிருந்தார்.

மத்திய அமைச்சர் வி.கே. சிங்கும் தன் சகோதரருக்கு உத்தரப்பிரதேசத்தின் காசியா பாத்தின் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். தவிரவும், குஜராத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு அம்மாநிலத்தில் உள்ள மருத்துவ மனைகளில் இடம்கிடைக்காததால், தமிழகத் தின் நுங்கம்பாக்கம் மருத்துவ மனையில் இடம் கிடைக்குமா என விசாரித்திருக்கிறார். அவர் களும் வரச் சொல்லவே தனி விமானம் ஏற்பாடு செய்து சென் னைக்கு சிகிச்சைக்கு வந்திருக் கிறார். அவரைப் போல பலரும் தமிழகத்திற்கு ஓடி வருகிறார்கள். ஆனால், சாதாரண மக்களின் கதி?

gகுஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் பாடும் திண்டாட்டம்தான். இறந்த பலருக்கும் உடலை எடுத்துச்செல்ல மார்ச்சுவரி வேன் கிடைக்க வில்லை. தனியார் வேன் கிடைக் காதவர்கள் உடலைத் தாங்களே எடுத்துச்சென்றனர். தகன மேடைகளிலும், சுடுகாடுகளிலும் பிணங்களை வரிசையில் வைத்து எரிக்கும் நிலை பல மாநிலங்களில் ஏற்பட்டது.

தென்கிழக்கு டெல்லியில் பிணங்களை எரிக்கக் கடும் நெரிசலும் வரிசையும் ஏற் பட்டதால், பொதுப்பூங்கா ஒன்று சுடுகாடாக மாற்றப்பட்டு, அதில் பிணங்களை எரிக்க 20 மேடைகள் உருவாக்கி இரவும் பகலும் எரிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம், சுகாதாரத்துறையின் மோசமான கட்டமைப்புதான். ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவராவது வேண்டும். இது குஜராத்தில் 4,300 பேருக்கு ஒருவரெனவும், மகாராஷ்டிராவில் 4,800 பேருக்கு ஒருவரெனவும் உத்தரபிரதேசத் தில் 24,000 பேருக்கு ஒருவர் எனவும் உள்ளது.

தமிழகத்தில் 465 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மருத்து வர்கள் உள்ளனர். தமிழகத்தில் மருத்துவமனைகளும் மருத்துவக் கல்லூரிகளும் அதிகம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா கிளினிக் என சிறிய அளவிலான கட்டமைப்பிலும் அதிகளவில் மருத்துவ சேவை கிடைக்கிறது. தமிழகத்தில் ஓரளவு ஆக் ஸிஜன் தட் டுப்பாடு இருந்தாலும், கொரோனா நோய்த்தொற்றில் மூன்றாம், நான்காமிடத்தில் இருந்தாலும், மருத்துமனைக்கு வெளியே கட்டில் போட்டு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படவில்லை. நோயால் இறந்தவர்களை சுடு காட்டில் எரிப்பதற்கு வரிசையில் நிற்கும் அவலம் வரவில்லை.

50 ஆண்டுகாலம் தமிழகத் தை மாறி மாறி ஆளும் திராவிடக் கட்சிகள் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு இது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சுகாதாரக் கட்டமைப்பிலோ, மக்களின் நல வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பிற கட்டமைப்பிலோ குறைகூறும்படி விட்டுவிடவில்லை. அந்த வகை யில் தமிழர்கள் அதிர்ஷ்ட சாலிகள்தான்.

nkn010521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe