சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

Advertisment

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது. இவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘அடி அலையே...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை ஷான் ரோல்டன் மற்றும் தீ பாடியிருக்க ஏகாதசி எழுதியிருந்தார். சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா கதாபாத்திரத்தின் காதலை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருந்தது. 

Advertisment

இப்பாடல் யூடியூபில் 1.3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது மேலும் இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரம் ரீல்ஸ் வீடியோக்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அறிவித்த ஜிவி பிரகாஷ் தன்னுடைய நூறாவது படம் மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் யுவன் பாடும் புகைப்படத்தை பகிர்ந்து கூஸ்பம்ஸாக இருக்கிறது எனவும் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து சுதா கொங்கரா கூறுகையில், “நானும் பவதாரணியும் ஒரு படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் அவன் உருவாக்கிய பாடலை கேட்க எங்களை அணுகியவன் இப்போது என் படத்தில் பாடுகிறான். வாழ்க்கை ஒரு வட்டம். இந்தப் பாடல் ஒரு அதிரடி பாடலாக இருக்கும். யுகபாரதி சிறப்பான வரிகளை கொடுத்துள்ளார்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment