இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதையடுத்து அவர் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இது அவர் தயாரிக்கும் 9வது படமாகும். கடைசியாக இவர் தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கு முன்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘வை ராஜா வை’ படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இதனை மணிரத்னம் வெளியிடுகிறார். அதில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/08-34-2026-02-27-12-41-16.jpg)