பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்பு சீவி’. இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார். உசிலம்பட்டி பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இப்படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய யுவன், “சின்ன வயதில் விஜயகாந்த் படங்கள் பார்ப்பேன். அவருடைய டிரஸ், ஃபைட் எல்லாம் ரசிப்பேன். அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். ஒரு முறை கல்யாணம் முடிஞ்சு அவர் எங்க வீட்டுக்கு வரும்போது அவர் முன்னாடி நான் டான்ஸ் ஆடியிருக்கேன். அவர் உள்ளே வந்ததும் அப்பாவுடைய பாட்டு போட்டு நானும் என்னுடைய கசின்ஸும் டான்ஸ் ஆடினோம். அங்க இருந்து இப்போது இங்கு வந்திருக்கு. 

Advertisment

பொன்ராம் சார் கதை சொன்னதும் யார் ஹீரோன்னு கேட்டேன். சண்முக பாண்டியன்னு சொன்னதும் ஒரு செகண்ட் கூட யோசிக்காம ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்துல நான் இருக்கணும்னு நினைச்சேன். ஏன்னா விஜயகாந்த் சார் நிறைய பேருக்கு ஒரு தூணா இருந்திருக்காரு. சண்முக பாண்டியனுக்கு இந்த சினிமாவுல கண்டிப்பா ஒரு இடம் இருக்கு. இந்த படக் கதை கேட்டு நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். ரொம்ப நாள் கழிச்சு படத்துல இருக்குற காமெடி சீன்-லாம் ரொம்ப ரசிச்சேன். 

கேப்டன் சாருக்கு நான் தென்னவன் படம் மியூசிக் பன்னேன். ஆனா அதுக்கு முன்னாடி அலெக்சாண்டர் படத்துக்கு ஒரு பாட்டு போட்டிருக்கேன். அரவிந்தன் படம்(யுவனின் முதல் படம்) முன்னாடி இது நடந்திருக்கு. அலெக்சாண்டர் படம் அண்ணன் மியூசிக்ல ஸ்டார்ட் ஆச்சு. ஆனா ஒரு இந்தி படத்துக்காக அண்ணன் மும்பை போயிட்டார். அதனால புரொடியூசர் பஞ்ச சுப்பு என்னிடம் இந்த படத்தை ரீ ரெக்கார்டிங் பண்ண சொன்னார். அப்போ தான் படத்துல ஒரு பாட்டு பேட்டேன். அங்க இருந்து தான் என்னுடைய சினிமா கேரியர் ஸ்டார்ட் ஆச்சு. இன்னைக்கு அவருடைய மகனுக்கு மியூசிக் பண்றது எங்க ஃபேமிலில ஒருத்தருக்கு பண்ற மாதிரி நினைக்கிறேன். இன்னைக்கு மட்டும் இல்ல எப்ப கூப்பிட்டாலும் அவருக்காக நான் மியூசிக் பண்ணுவேன்” என்றார்.  

Advertisment