அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’ நேற்று உலகமெங்கும் ரீ ரிலிஸானது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் வரவேற்றனர். இவர்களோடு படக்குழுவினரான இயக்குநர் வெங்கட் பிரபு, வைபவ், மகத் உள்ளிட்ட பலரும் திரையரங்கில் படம் பார்த்து ரசித்தனர்.

Advertisment

இப்படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் அஜித்தோடு அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான பாடல்களும் குறிப்பாக தீம் மியூசிக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

Advertisment

09 (28)

இந்த நிலையில் ரீ ரிலீஸிற்கு ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு குறித்து யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஒரிஜினல் வெளியீட்டுக்கு பின் 15 ஆண்டுகள் கடந்தாலும் மங்காத்தா படம் மீதான ஆர்வம் உண்மையிலேயே வேற லெவல். லவ் யூ மக்களே. ஏகே-50ன் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.