உலகின் பிரபல யூடியூபராக இருப்பவர் மிஸ்டர் பீஸ்ட். அமெரிக்க யூட்யூபரான இவர் தொழிலதிபராகவும் இருக்கிறார். யூட்யூபில் சவாலான வீடியோக்கள், டிராவல் வீடியோக்கள், உதவி செய்யும் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இப்போது வரை இவரது யூட்யூப் சேனலில் 911 வீடியோ போட்டு 446 மில்லியன் சப்ஸ்க்ரைபர் வைத்துள்ளார்.  

Advertisment

இந்த நிலையில் இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் “ஹே இந்தியா, நாம எல்லாரும் சேர்ந்து ஏதாவது செய்யலாமா?” எனவும் பதிவிட்டுள்ளார். இது உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisment

இதனால் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என ஆவலோடு கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் சௌதி அரேபியாவில் நடந்துள்ள ‘ஜாய் ஃபோரம் 2025’ விழாவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று கான் நடிகர்களுடனும் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்துள்ளதால் இது வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு மூன்று கான்களும் ஆமிர் கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ பட திரையிடலின் போது மும்பையில் சந்தித்தனர். அதன் பிறகு இப்போது சந்தித்துள்ளனர்.