சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பயணித்து வருபவர் யோகி பாபு. ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். பின்பு நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார், இப்போது நகைச்சுவை நடிகராகவும் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.  

Advertisment

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து, பின்பு தமிழை தாண்டி இந்தியில் ஷாருக்கானுடன் நடித்து மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து வருகிறார். இப்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் சூர்யாவின் கருப்பு படத்திலும் மற்றும் ரவி மோகன் இயக்கத்தில் ஆன் ஆர்டினரி மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் இவர் வெள்ளித்திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட யோகி பாபு, “அமீர் அண்ணன் நடிப்பில், சுப்ரமணியம் சிவா அண்ணன் இயக்கத்தில்  உருவான ‘யோகி’ திரைப்படம் வெளியாகி  16 ஆண்டுகள்  ஆகின்றது. அமீர் அண்ணன் மற்றும் சுப்ரமணியம் சிவா அண்ணன் இருவருக்கும் என்றும் கடமைப்பட்டு உள்ளேன். நான் வெற்றிகரமாக இயங்கி வர முக்கியமான வேர்களான இயக்குநர்கள் மற்றும் எனது தயாரிப்பாளர்கள் - திரைத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் நண்பர்கள், எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் - எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி . உங்கள் கலைஞன் - நகைச்சுவை நடிகன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.