Advertisment

விவாதத்தைக் கிளப்பிய ‘டாக்சிக்’ படத்தின் டீசர்

20 (62)

கேஜிஎப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதிகப்படியான வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக, இவருக்கு  இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் தற்போது நடிக்கும் படம் டாக்சிக். 

Advertisment

இப்படத்தினை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இதில், நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா, ஹீமா குரோஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்யின் ஜனநாயகன் படத்தைத் தயாரித்த கேவிஎன் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. மார்ச் 19 அன்று இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் யஷின் கதாபாத்திர போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ அவரது பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோவில், கவர்ச்சியுடன் கூடிய ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது வரவேற்பையும் சில விமர்சனத்தையும் சந்தித்தது. 

Advertisment

இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு விதமான கெட்டப்பில் யஷ் தோன்றுகிறார். இதிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மற்றும் அதீத வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதே நேரத்தில், கடந்த டீசரை காட்டிலும் இந்த டீசர் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

toxic yash Geetu Mohandas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe