தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பல்வேறு கொண்டாட்டங்கள், போட்டிகள் போன்றவற்றில் மக்கள் ஈடுபட்டாலும் சினிமா இல்லாமல் அந்த பண்டிகை முழுமையடைவதில்லை. எனவே தான் பொங்கல் , தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் முக்கிய திரைப்படங்கள், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற பொங்கலுக்கு ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் மக்கடையே அதிகரித்து வருகின்றன.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்துள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் "வேல்டு ஆப் பராசக்தி" என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இரண்டு முறை மக்கள் பார்வைக்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி அது வைரலாகி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. "வேல்டு ஆப் பராசக்தி" என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்பட்ட அதே தலைப்பில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது படக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/08-2025-12-30-16-03-04.jpg)