Advertisment

"வேல்டு ஆப் பராசக்தி" மேலும் நாட்கள் நீட்டிப்பு!

2

வரும் பொங்கலுக்கு திரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பராசக்தி மற்றும் ஜனநாயகன் ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளன. ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இருபடங்களும் வருகின்ற பொங்கலுக்கு முன்னதாக வெளியாக உள்ளன. அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள படம் தான் பராசக்தி. ஏற்கனவே கலைஞர் வசனத்தில், சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி தமிழ்திரையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும் அப்படத்தின் வசனங்கள் திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே சமூகத்தில் உள்ள பல சிக்கல்கள் குறித்தான கேள்விகளையும் எழுப்பியது. 

Advertisment

இதனைத்தொடர்ந்து  அதே பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், பசில்  ஜோசப், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10 அன்று வெளியாகவுள்ளது. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரவமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், அடி அலையே, ரத்னமாலா மற்றும் நமக்கான காலம் போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

இதற்கிடையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதன்  நீட்சியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேல்டு ஆப் பராசக்தி (world of parasakthi ) என்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 25 ம் தேதி முடிய இருந்த இந்த நிகழ்ச்சி வருகின்ற 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பகல் 12 மணி - இரவு 10 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor sivakarthikeyan Parasakthi valluvar kottam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe