டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் 6ஆம் தேதி வெளியான படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தனர். காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. படத்தின் வெற்றியை முன்னிட்டு சமீபத்தில் நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழு சென்னையில் நடத்தியது. இதில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது 18 வருட சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் வெற்றியை பார்ப்பதாக நெகிழ்ச்சியடைந்தார். அதே போல் அபிஷன் ஜீவிந்தும் ரஜினி சார் கொடுத்த மோட்டிவேஷன் தான் நாயகனாக மாற உதவியது எனத் தெரிவித்திருந்தார்.
இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 25 நாட்களில் உலகமுழுவதும் ரூ.35 கோடிகளை கடந்தது. இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 6ஆம் தெதி இப்படம் வெளியாகிறது.
Follow Us