மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் திரிஷ்யம். இப்படம் த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக அமைத்திருந்தது. மேலும், படத்தின் ஒவ்வொரு கட்சிகளும் சிறப்பான முறையிலும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது. இப்படி, சுவாரஸ்யம் மிக்க கதைக்களத்தைக் கொண்டிருந்தால், இப்படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
இதில், கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழிலும், இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றிகளை அடுத்து மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதுவும், மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்தது. இதிலும், மோகன்லால் மற்றும் மீனா நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தின் வெற்றியை அடுத்து, தற்போது மீண்டும் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் படம் குறித்தான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், இப்படத்தின் நான்காம் பாகம் வருமா? என்றும் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு மேலும் இந்த கதையை வளர்த்துக் கொண்டே போக எனக்கு விருப்பம் இல்லை. அப்படி வளர்த்துக் கொண்டே போனால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும். அதனால், இப்படம் மூன்றாம் பாகத்துடன் நிறைவடைகிறது" என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/t-2026-02-07-15-43-11.jpeg)