Advertisment

எப்போது திரைக்கு வரும் "லவ் இன்சுரன்ஸ் கம்பெனி"?

WhatsApp Image 2026-02-07 at 2.55.16 PM

கோமாளி படத்தின் மூலமாகத் தமிழில் இளம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் கதைக்களம் மற்றும் பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது. இப்படம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில், இவரின் அடுத்த படைப்பும் மக்களிடம் பெருமளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பாராத விதமாக "லவ் டுடே" படத்தில் கதாநாயகனாகக் களமிறங்கினார். இவர் நடிப்பில் வெளியான முதல் படமே மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்தது.  

Advertisment

இதையடுத்து, இவரது நடிப்பில் ட்ராகன், டியூட் போன்ற படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றிகளின் காரணமாக, தற்போது இவர் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் " லவ் இன்சுரன்ஸ் கம்பெனி". இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ட்ராகன், டியூட் போன்ற படங்கள் வெளியாகியதால், இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், படத்தின் தலைப்பை வைத்துப் பார்க்கும் போது இது நிச்சயம் காதல் படமாகத் தான் இருக்கும். எனவே, இப்படத்தினை காதலர் தினத்தன்று வெளியிட்டால் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பலராலும் கூறப்படுகிறது.  

Advertisment

எனினும், படக்குழுவின் தரப்பிலிருந்து எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ் ஜெ சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாத போதிலும்,  இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pradeep Ranganathan vignesh shivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe