இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 மற்றும் பாலிவுட்டில் ஆமீர்கானுடன் ஒரு படம் பண்ண கமிட்டாகி இருந்தார். இதனிடையே ரஜினி - கமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒன்றாக நடிக்கும் படத்தை இவர் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. 

Advertisment

அதேபோல் பாலிவுட்டிலும் அவர் இயக்க உள்ள ஆமிர்கானின் படமும் கைவிடப்பட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் அவர் கைதி 2 படம் இயக்குவதாக பரவலாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நாயகனாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்திற்காக தற்காப்புக்கலையும் அவர் கற்றுக் கொண்டிருந்தார். ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி நடிகை வாமிகா கபி, இதில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வாமிகா கபி பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தவர். தமிழில் செல்வராகவன் எழுத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். இப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 

இப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் இறவாக்காலம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப் சீரிஸில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ போர்ஷனில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

Advertisment