அறிமுக இயக்குநர் சராங் தியாகு இயக்கத்தில் மினி ஸ்டூடியோ தயாரிப்பில் கடந்த 7ஆம் தேதி வெளியான படம் ஆரோமலே. இப்படத்தில் கிஷ்ன் தாஸ், ஹர்ஷத் கான், சிவாத்மிகா, மேகா ஆகாஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சித்து குமார் இசையமைத்திருந்த இப்படம் காதல், நட்பு ஆகியவை கலந்து ஒரு ஃபீல் குட் படமாக உருவாகியிருந்தது. 

Advertisment

இப்படம் ரசிகர் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா பட காட்சிகளும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகளையும் இசையையும் பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை பயன்படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதையடுத்து நீதிபதி, விண்ணைத்தாண்டி வருவாயா பட காட்சிகளையும் இசையையும் ஆராமலே படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இப்படம் இயக்குநர் சராங் தியாகு கௌதம் மேனனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.