தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை விசித்ரா. தமிழில் ஜாதி மல்லி, வீரா, வில்லாதி வில்லன், முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பின்பு சின்னத்திரை சீரியலிலும் நடித்து வந்தார். அதே போல் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வலி வாழ்க்கையை ஒரு கணம் நிறுத்துகிறது, ஆனால் அது மனித ஆன்மா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு வடுவும் உயிர்வாழ்வின் கதையைக் கொண்டுள்ளது. மருத்துவமனையில் நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவர்களின் திறமையும் உறுதியும் இந்த குணப்படுத்தும் பயணத்தில் என்னை வழிநடத்தியது.
இந்த செயல்முறையின் ஒவ்வொரு அடியிலும் அன்பு, பொறுமை மற்றும் நிலையான ஆதரவுடன் என்னுடன் நின்ற எனது அன்பான கணவர், எனது குடும்பத்தினர் மற்றும் எனது நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. உங்களை வலிமையுடனும் கருணையுடனும் தாங்கும் மக்களால் சூழப்பட்டிருக்கும்போது மீள்வது இலகுவாக இருக்கிறது” என்றுள்ளார்.
Follow Us