இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது விஷ்ணு விஷாலிடம் இன்றைய அறிமுக தயாரிப்பாளர்களிடமோ அல்லது அனுபவ தயாரிப்பாளர்களிடமோ ஒரு தயாரிப்பாளராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அட்வைஸ் கொடுக்கும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை. என்னுடைய சஜெசன் தயாரிப்பாளர்களுக்கு அல்ல ஹீரோஸ்களுக்கு. அவங்க சம்பளம் கம்மியா வாங்குனா படம் மேக்கிக்குக்கு நிறைய செலவு பண்ணலாம், அவ்வளவுதான்” என்றார். 

Advertisment

பின்பு அவரிடம் படத்தில் அவரது தலையீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஹீரோக்கள் தலையிடாத சினிமாக்கள் வெற்றி பெறுகிறதா. ஒரு ஹீரோவாக படத்திற்கு நானும் பொறுப்பு. என்னுடைய தயாரிப்பில் மட்டுமில்லை மற்ற தயாரிப்பில் நடிக்கும் படங்களிலும் அப்படித்தான் நினைப்பேன். என்னுடைய பொறுப்பும் படத்தில் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் வெறும் டைரக்டரை நம்பி வருவதில்லை. 

படத்தில் ஏதாவது குறை இருந்தால் ஹீரோவை தான் முதலில் திட்டுகிறார்கள். ஹீரோவை திட்டுகிறார்கள் என்றால் எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று தானே அந்த்தம். அந்தப் பொறுப்பின் காரணமாக தலையிடுவேன். இது எந்த டைரக்டரராக இருந்தாலும் சரி தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, என்னுடைய கருத்தை கண்டிப்பாக சொல்வேன். அதனால்தான் என்னுடைய பெரும்பாலான படங்கள் வெற்றிப் படமாக இருக்கிறது” என்றார். 

Advertisment