Advertisment

“பான் இந்தியா என்ற வார்த்தை தவறாக மாறிவிட்டது” - காரணம் சொன்ன விஷ்ணு விஷால்

புதுப்பிக்கப்பட்டது
10 (2)

இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான், அவர்களுக்கு நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். 

Advertisment

கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்  200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். 

ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார்.  தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்” என்றார்.  

actor vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe