Advertisment

2 இன் 1; விஷ்ணு விஷாலுக்கு படக்குழு சர்ப்ரைஸ்!

13 (35)

தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இவ்விருதினை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 

Advertisment

இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

Advertisment

இந்த நிலையில் ராட்சசன் படத்திற்காக விஷ்ணு விஷாலுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்ட அதே நாளில் அவர் சினிமாவுக்கு வந்து 17ஆண்டுகள் கடந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கொண்டாடும் விதமாக அவருக்கு அவர் நடித்து வரும் ‘கட்டா குஸ்தி 2’
படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

actor vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe