Advertisment

“சுலபமாக பழியை போடுகிறார்கள்...” - விஷ்ணு விஷால் கவலை

19 (11)

இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது விஷ்ணு விஷாலிடம் அவரது அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் போலீஸ் படங்களை அவர் எப்படி பார்க்கிறார் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் “அப்பா எப்போதுமே நிறைய படங்கள் பார்ப்பார். குறிப்பாக பயம் நிறைந்த படங்கள் என்றால் ரசித்து பார்ப்பார். நான் ஒவ்வொரு முறையும் போலீஸ் கதாபாத்திரம் நடிக்கும்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பார். 

Advertisment

இந்தப் படத்திற்கு போலீஸ் அதிகாரிகளை ஒன்றிணைத்து ஒரு ஷோ போட்டோம். அதில் அப்பாவுடைய நண்பர்கள் எல்லாருமே கலந்து கொண்டார்கள். அனைவருமே படத்தில் காண்பித்தது போல் ஒரு விஷயம் நடந்தால் என்ன செய்வது என்று அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்களுடைய முன்னெடுப்பு சரியானது என்று பாராட்டினார்கள். ஒரு உண்மையான போலீஸ் அதிகாரிகள் இதை சொல்லும் போது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா எனக்கு எப்போதுமே மிகவும் சப்போர்ட்டாக இருப்பார். நான் துவண்டு போகும்போது என்னை ஊக்கப்படுத்துவார். எல்லாரும் சினிமாவில் பார்த்த போலீசை நான் நிஜத்தில் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு போலீஸ் என்பது வித்தியாசமாக மாறிவிட்டது. ஆனால் நான் சின்ன வயதில் பார்த்த போலீஸ் வேறு. உண்மையான வாழ்க்கையில் ஒரு போலீஸ் அதிகாரியாக அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. 

இன்றைக்கு சோஷியல் மீடியாவில் ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் தப்பு யார் பக்கம் இருக்கிறது எனத் தெரியாமல், ஒரு அதிகாரி மேல் தான் தப்பு என சுலபமாக பழியை போடுகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் அப்படி கிடையாது. அப்போது தைரியமாகவும் நேரடியாகவும் இருந்தார்கள். அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்” என்றார். 

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe