இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழு, தற்போது கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது விஷ்ணு விஷாலிடம் மலையாள சினிமாக்கள் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர், “நிறைய படங்கள் இருக்கிறது. ஆர்டிஎக்ஸ் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தது. ஆவேசம் படமும் பிடித்தது. அதில் ஒட்டுமொத்த படமும் சிறப்பாக இருந்தது.
அதேபோல் பசில் ஜோசப்பின் படங்கள் ரொம்ப பிடிக்கும். கண்ணூர் ஸ்குவாட் படம் இன்ஸ்பைரிங்காக இருந்தது. இந்தப் படத்தில் வரும் ஆர் என் ஐ சம்பந்தமான காட்சிகளுக்கு அந்தப் படத்தை வைத்து தான் டைரக்டருடன் விவாதித்தோம்” என்றார். மேலும் டொவினோ தாமஸின் ஏஆர்எம், பிரித்விராஜின் குருவாயிர் அம்பலநாடா, பசில் ஜோசப்பின் ஜெய ஜெய ஜெய ஹே போன்ற படங்களும் பிடிக்கும் என்றார்.
Follow Us