இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/17-17-2025-11-22-12-42-34.jpg)