விஷால் தற்போது ‘மகுடம்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சுந்தர் சி இயக்கத்தில் ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சாக நடந்து வருகிறது. 

Advertisment

இதனிடையே சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷால் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் செய்த உடற்பயிற்சி வீடியோவை சாய் தன்ஷிகா பகிர்ந்திருந்தார். 

Advertisment

07 (24)

இதனை தொடர்ந்து விஷாலே தான் செய்யும் உடற்பயிற்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அப்பதிவில், “தலை முதல் கால் வரை மனதில் சமநிலை இருப்பது, உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் உலகின் உச்சியில் இருப்பது போல் உணர வைக்கும். பாசிட்டிவிட்டி தொடரும், எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உலகின் இந்தப் பகுதியை அறிமுகப்படுத்தியதற்கு சாய் தன்ஷிகாவிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.