சுந்தர் சி படங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளாக இவர் இயக்கிய கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இன்றும் லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இதனிடையே விஷாலை வைத்து இவர் இயக்கிய ஆம்பள படம் கடந்த 2015 ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இந்த கூட்டணி ‘மதகஜராஜா’ எனும் படத்தின் மூலமாக ஒன்றிணைந்து. இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் கிடந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்குப் பிறகு, மீண்டும் இக்கூட்டணி ‘புருஷன்’ படத்திற்கு இணைந்துள்ளனர். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதில் ஆம்பள இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
Follow Us