ஆம்பள, ஆக்‌ஷன், மதகஜராஜா போன்ற படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளது விஷால் - சுந்தர் சி கூட்டனி. இப்படத்தில் ஆம்பள படத்திற்கு இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தை சுந்தர் சி-யின் அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண் குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதன் படி இன்று படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்று சுந்தர் சி பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘புருஷன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் புரோமோவை பார்க்கையில் விஷாலும் தமன்னாவும் கணவன் மனைவியாக இருக்க, சீரியல் நடிகராக வருகிறார் யோகிபாபு. விஷால் வீட்டிற்கு வரும் யோகிபாபு, தமன்னாவை ரசிக்க அவருக்கு டீ போட சொல்கிறார் தமன்னா. அதன்படி விஷால்டீ போட வில்லன் கேங்க் விஷால தாக்க வர சண்டைக்காட்சிகள் நடைபெறுகிறது. 

Advertisment

இதில் ஹைலைட்டாக ‘புருஷனா இருக்குறது முக்கியமில்ல... புருஷன் புருஷனா இருக்குறது தான் முக்கியம்’ என யோகி பாபு பேசும் வசனம் அமைந்துள்ளது. இப்படம் கணவன் - மனைவி உறவின் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு நடந்து வருவதாக டைட்டில் ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.