தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான தேர்தல் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (22-02-26) நடைபெற்றது. இத்தேர்தலில், ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி மற்றும் முரளி ராம​சாமி தலைமையிலான ராம நாராயணன் அணி போட்டியிட்டது.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜிகேஎம். தமிழ்க்​குமரன் 788 வாக்​கு​கள் பெற்று, 527 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். மேலும் செய​லா​ளர் பதவிக்கு போட்​டி​யிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன்​, பொருளாளர் பதவிக்கு போட்​டி​யிட் ட சுபாஷ் சந்​திர​போஸ்​ ஆகியோ​ரும் வெற்​றி பெற்றுள்​ளனர்​. இத்தேர்தலில் ரஜினி, விஷால் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாக்களித்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விஷால், விஜய்யின் ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது, “ஒருத்தர் மட்டும் குரல் கொடுத்தால் பத்தாது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் அனைவரும் போய் நிற்க வேண்டும். அதற்காகத்தான் தேர்தலில் தோற்பவர்களோடும் ஜெயிப்பவர்கள் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அதை செய்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.
இந்த விவகாரத்தில் சங்கம் தலையிட முடியாது. நீதிமன்றங்கள் இருக்கிறது. கேவிஎன் நிறுவனம் எங்கள் சங்கத்திற்கு வந்திருந்தால் எதாவது நடந்திருக்கும். நீதிமன்றத்தில் விவகாரம் இருக்கும் போது நாங்கள் எப்படி தலையிட முடியும். சென்சார் போர்டு என்பது ஒரு பகுதி. 7 கோடி பேர் பார்க்கும் ஒரு திரைப்படத்தை 5 பேர் முடிவு செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் அதுதான் விதிமுறை. அதை நாம் பின்பற்ற வேண்டும்” என்றார்.
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் கடந்த மாதம் 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்து தணிக்கை சான்று கிடைக்காததால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பின்பு வழக்கை வாபஸ் செய்து தற்போது மீண்டும் மறு தணிக்கைக்கு சமர்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/19-75-2026-02-23-12-49-33.jpg)