Advertisment

“எனக்கு பிடித்த நடிகர்...” - தென்னிந்திய சினிமா குறித்து பேசிய விரேந்திர சேவாக்

18 (42)

தெலுங்கு திரைத்துறையினர் விளையாடும் டோலிவுட் ப்ரோ கிரிக்கெட் லீக், இபிஜி குரூப் சார்பில் கடந்த 21ஆம் தேதி நடந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் நடந்த இந்த அறிமுக விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு தொடரை அறிமுகப்படுத்தினார். இவர் இத்தொடரின் கௌரவத் தலைவராகவும் செயல்படுகிறார். 

Advertisment

நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விரேந்திர சேவாக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, “தென்னிந்திய சினிமாவின் தீவிர ரசிகன் நான். நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு தெரியாததால் அப்படங்களை இந்தியில் பார்ப்பேன். என்னுடைய விருப்பமான தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. 

Advertisment

அதேபோல் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸும் பிடிக்கும். பாகுபலி படத்தை இரண்டு முறை நான் பார்த்துள்ளேன். நான் இப்போது ரிட்டையர்டு ஆகிவிட்டதால் வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார். மகேஷ் பாபு கடைசியாக குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அல்லு அர்ஜுன் கடைசியாக புஷ்பா 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது அட்லி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். பிரபாஸ் கடைசியாக கல்கி 2898 ஏடி படத்தில் நடித்திருந்தார். இப்போது  ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

movies virender sehwag
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe