அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நேற்று முன் தினம் நடந்தது. அதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் அங்கு இசை கச்சேரியும் நடந்தது. இதனாலும் விஜய்யின் கடைசி படம் என்பதாலும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை கோலாகலமாக்கினர். கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்து கொண்டனர். இதூ மலேசியா சாதனை புத்தகத்தில் அதிக பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இடம் பிடித்தது.
இந்நிகழ்வினில் வினோத் பேசும்போது, “இந்த படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு டவுட் இருக்கு. இது ரீமேக்னு நினைச்சு பயத்தோடு இருக்கிறவங்களுக்கும்... இல்ல கொஞ்சம் ரீமேக்கு மீது புதுசுன்னு குழப்பத்துல இருக்குறவங்களுக்கும் நான் சொல்ல விரும்புறது, ஐயா இது தளபதி படம். அதனால உங்க மைண்ட்ல எது இருந்தாலும் அத அழிச்சிட்டு வாங்க. 100 சதவீதம் விறுவிறுப்பான என்டர்டைன்மென்ட் படத்தை பாக்க வாங்க. நீங்க ஆடிப்பாடி கொண்டாடுறதுக்கும் மொமென்ட்ஸ் இருக்கு. அமைதியா உட்கார்ந்து யோசிக்கிறதுக்கும் ஒரு மொமென்ட்ஸ் இருக்கு. இன்னொரு விஷயம், இந்த படத்தோட முடிவுல 15 நிமிஷம் ஃபேஎவல் இருக்கு, எமோஷனலா அழுதுட்டு போற மாதிரி இருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. படத்தோட முடிவுல ஒரு நம்பிக்கை தான் இருக்கு. ஏன்னா தளபதிக்கு இது முடிவு கிடையாது ஆரம்பம்” என்றார்.
Follow Us