லூமியர்ஸ் நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராபின்ஹீட்’. 1980களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம்.
இப்படத்தில் எதிர் பாத்திரத்தில் மறைந்த ஆர்என்ஆர் மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் கேபிஒய் சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை முன்னணி இயக்குநர் வினோத் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us