விமல் கடைசியாக தேசிங்குராஜா 2 படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலையில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து தற்போது ‘மகாசேனா’ எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பழங்குடி மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருஸ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Advertisment

இப்படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார். மருதம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் சாமி சிலைக்காக இருதரப்பினர் சண்டையிட்டுக் கொள்வது போல் தெரிகிறது. அப்போது ஒரு காட்சியில் ஊர் மக்களிடம் பேசும் விமல், “யாரையும் காப்பாத்த யாரும் வர மாட்டாங்க, உன்ன காப்பாத்த நானும்... என்ன காப்பாத்த நீயும்... நம்மள காப்பாத்த நம்ம சாமி வரும்” என ஆக்ரோஷமாக பேசுகிறார். 

Advertisment

இப்படம் தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது வெளியாகிறது.