கெந்திரன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘வடம்’. இதில் நட்டி, சனாக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேசகர் ஆர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விமல் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது ரோபோ சங்கர் மறைவு குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “என்னால் ரோபா சங்கர் மறைவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் வடம் பட படப்பிடிப்பில் தான் குற்றாலத்தில் இருந்தேன். முதல் நாள் இரவில் தான் செய்தி கிடைத்தது. நான் மெல்ல டைரக்டரிடம் சொன்னேன். விடமாட்டார் என தெரியும், ஒரு வேலை விட்டால் சந்தோஷம் என கேட்டேன். ஆனால் விடவில்லை.
ஏனென்றால் அன்றைக்கு படப்பிடிப்பு நடத்தவில்லை என்றால் 12 லட்ச ரூபாய் நஷ்டமாகும். நிறைய ஆர்டிஸ்டுகளின் கால்ஷீட், ஏகப்பட்ட மாடுகள் என ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் அதை விட்டு வரமுடியாத சூழல். பின்பு மனைவியை அனுப்பி வைத்தேன். ஆனால் அடுத்த நாள் படப்பிடிப்பில் ரோபோ சங்கரின் பேனரை வைத்து ஒட்டு மொத்த படக்குழுவுமே அஞ்சலி செலுத்தினோம். மேலும் 500 புடவைகள், 2000 மரக்கன்றுகள் அவரது நியாபகமாக கொடுத்தோம். மறைவுக்கு போகாததை இதன் மூலம் பூர்த்தி செய்த இயக்குநருக்கு நன்றி” என்றார்.
Follow Us