அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. 

Advertisment

இப்படம் வரும் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் இப்படம் குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “இந்தப் படம் என்னுடைய 25வது படம். பொதுவாக நான் பட நம்பரை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் 25வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. டாணாக்காரன் தமிழுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். அந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். மயக்கம் போட்டு விழுந்து பின்பு ஷூட்டிங்கிற்கு ரெடியானேன். ஆனால் அந்த காட்சி வரவில்லை. அந்த மாதிரி ஒரு டீமுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். 

Advertisment

இந்தப் படம் 2025ல் 25வது படம் 25ஆம் தேதி வெளியாகிறது. இது ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவர் ஆசியில் இது நடக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.