அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் செய்தியாளர்கலை சந்தித்த படக்குழுவினர் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது விக்ரம் பிரபுவிடம் கும்கி 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கும்கி 2 படம் 8 வருஷத்துக்கு முன்னாடியே எடுத்துட்டாங்க. அவங்க ஃபேமிலிகுள்ளையே எடுக்குறாங்கன்னு சொன்னாங்க. தாராளமா எடுங்கன்னு சொன்னேன். எனக்கு எப்போதுமே ஒரு படத்தை திருப்பியும் தொடனுமான்னு ஒரு கேள்வி இருக்கும். கும்கி கதை முதல் பாகத்தோடு முடிந்துவிட்டது. அதன் பிறகு எப்படி எடுத்துப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. அப்படியே எடுத்தாலும் அது எந்த அளவு சரியாக இருக்கும் என்பதும் தெரியவில்லை.
பிரபு சாலமன் இது குறித்து என்னிடம் பேசவில்லை, நானும் அவரிடம் கேட்கவில்லை. மற்றபடி கும்கி என்ற தலைப்பை வைத்து படம் எடுக்கிறார்கள் என மட்டும் தெரியும். அதில் என்னை சம்பந்தப்படுத்திக்க நான் விரும்பவில்லை. கும்கி என்றால் அது ஒரு கும்கியாக இருந்தால் போதும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/15-37-2025-12-13-17-21-26.jpg)