விக்ரம் கடைசியாக ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மண்டேலா, பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஷாந்தி டாக்கிஸ் பேனரில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தை தயாரிக்க விக்ரமின் 63வது படமாக உருவாகுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. படப்பிடிப்பும் தொடங்கவில்லை. இதனால் இந்தப் படம் டிராப் என சொல்லப்பட்டது.
இப்படத்தை அடுத்து 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படமும் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. பின்பு விக்ரம் இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது. இப்படம் தான் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது.
இந்த நிலையில் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்ததாக நான்கு படங்களில் நடிப்பதாக பதிவிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் மௌனம் நம் தயாரிப்புக்கானது. இந்த வருடம் என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காகக் காத்திருந்தேன். நான் மிகவும் போற்றும் இயக்குநர்களுடன், மிகவும் வித்தியாசமான நான்கு படங்களில் நடிக்கவுள்ளேன். இந்தப் பயணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அன்பன், சீயான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/18-66-2026-02-21-14-18-13.jpg)